மேத்தியூ இலீ ஐ.நா-விலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்துக் கூட்டம்!
ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த மேத்தியூ இலீ ஐ.நா.-விலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்துக் கண்டனக் கூட்டம்!
ஐ.நா-விற்குள் நடக்கும் ஊழல்களையும்,
முறைகேடுகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த அகநகர் இதழியம் (Inner city
press) என்ற இதழையும் அதன் ஆசிரியரான மேத்தியூ இலீ அவர்களையும் மிகக்
கொடுமையாக வெளியேற்றிய ஐ.நா-வைக் கண்டித்துக் கடந்த மாசி 22, 2047 /
௫-௩-௨௦௧௬ (05.03.2016) அன்று மாலை, சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில்
கண்டனக் கூட்டத்தை மே பதினேழு இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கூட்டத்தின் நோக்கம் குறித்தான அறிமுக உரையை நிகழ்த்தினார். பின்னர்
தோழர் அரங்க குணசேகரன் – தமிழக மக்கள் முன்னணி
தோழர் கயல் – வழக்குரைஞர்
தோழர் கருத்தோவியர் (cartoonist) பாலா – ஊடகவியலாளர்
தோழர் கவிதா சொர்ணவல்லி – ஊடகவியலாளர்
தோழர் செந்தில் – ஊடகவியலாளர்
தோழர் மகா.தமிழ் பிரபாகரன் – ஊடகவியலாளர்
முதலானோரும், இணையம் (SKYPE) வழியாகத்
தோழர் விராச்சு மெண்டிசு (பிரமன் மக்கள் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்தவர்),
தோழர் இலதன் (ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கப் போராடிக் கொண்டிருப்பவர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் ஊடகவியலாளர்கள் பலர் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக