செவ்வாய், 19 ஜனவரி, 2016

வானதி திருநாவுக்கரசு காலமானார்
வானதி பதிப்பக நிறுவனர் திருநாவுக்கரசு காலமானார்!


 தமிழ் நூல்களை மிகுதியான அளவில் வெளியிட்ட வானதி பதிப்பகத்தின் நிறுவனரும், உரிமையாளருமான ‘வானதி’ திருநாவுக்கரசு சென்னையில் இன்று காலமானார். அவருக்கு  அகவை 88.

 தமிழ் எழுத்தளார்களின் புதினங்கள், சிறுகதைகள், கவதைகள் எனப் பல்துறை நூல்களைப் பதிப்பித்து  எழுத்தாளர்களுக்கு வாசகர் வட்டம் பெருகுவதற்குக் காரணமாக இருந்தவர் வானதி திருநாவுக்கரசு.
 மிகவும் பழமையான அச்சுக்கூடமும், புத்தக வெளியீட்டு நிறுவனமாகவும் விளங்கும் வானதி பதிப்பகம் சென்னை தியாகராயநகரில் அமைந்துள்ளது.

  வானதி திருநாவுக்கரசு இலக்கிய வட்டாரங்களிலும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார்.  அண்மைக்காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று  (தை 05, 2047 / சனவரி 19, 2016) அதிகாலை ஒரு மணியளவில் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக