முன்னோடிப் பதிப்பாசிரியர்கள் - pathippumunnoadigal
உ.வே.சா.வுக்கு முந்தைய பதிப்பாசிரியர்கள்
1992ஆம் ஆண்டு நாட்குறிப்பை புரட்டியபொழுது கிடைத்த தகவல் இது. ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழிலக்கியங்களை அச்சுச்சுவடிகளாக வெளியிட்டவர் உ.வே.சா.தான் என்றும் முதன்முதலில் வெளியிட்டவர் அவர்தான் என்றும் பலரும் பேசுகின்றனர்; எழுதுகின்றனர். அவர் மட்டும்தான் அம்முயற்சிக்கு மூலவரா என்னும் வினா 1992ஆம் ஆண்டில் எனக்குள் எழுந்திருக்கிறது, அதுபற்றி நூலகவியலாளர் வே.தில்லைநாயகத்திடம் கேட்டபொழுது, “இல்லை. உ..வே.சா. பிறப்பதற்கு முன்னரே தமிழிலக்கியங்கள் அச்சிடப்பட்டு இருக்கின்றன. உ.வே.சா. அதிகமான நூல்களை அச்சிட்டார்” எனக் கூறிவிட்டுத், தனது நினைவிலிருந்து அவர் கூறிய பதிப்பாசிரியர்களின் பட்டியல்தான் இது:
  1. ஆறுமுகநாவலர்
    02. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை
    03. சி. வை. தாமேதரம்பிள்ளை
    04. தில்லையூர் சந்திரசேகர கவிராச பண்டிதர்
    05. வெங்கடாசல முதலியார்
    06. கோமேனேசுவரம்பேட்டை இராசகோபாலப்பிள்ளை
    07. விசாகப்பெருமாளையர்
    08. மழவை மகாலிங்கையர்
    09. புதுவை நயனப்பமுதலியார்
    10. கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
    11. வில்லிவாக்கம் தாண்டவராய முதலியார்
    12. களத்தூர் வேதகிரிமுதலியார்
    13. முகவை இராமானுசக்கவிராயர்
    14. திருத்தணிகை சரவணப்பெருமாளையர்
“இவர்களைத் தவிர வேறுசிலரும் இருக்கக்கூடும். அ.ச.ஞானசம்பந்தன் பதிப்பித்த தமிழ்நூல் விவர அட்டவணைத் தொகுதிகளைப் பார்த்தால் தெரியும்” என வே.தி. தெரிவித்திருக்கிறார். அந்த அட்டவணைத் தொகுதிகளைப் பார்த்து பட்டியல் ஒன்றை உருவாக்கியது மங்கலாக நினைவிற்கு வருகிறது. அடுத்து அதனைத் தேட வேண்டும்.
அரிஅர வேலன்


அரிஅரவேலன் - arikaravelan