குடியாத்தத்தில் இன்று 23.01.16
வேலைவாய்ப்பு முகாம்
குடியாத்தம் கே.எம்.சி
(K.M.G) கல்லூரி வளாகத்தில் தனியார் துறை
நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் இன்று (23.01.2015) நடைபெறுகிறது.
வேலூர் மாவட்ட
வேலைவாய்ப்பு - பயிற்சித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஆதிதிராவிடர் -
பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு, தொழில் வழிகாட்டும் மையம், குடியாத்தம் சுழற் சங்கம்
ஆகியன இணைந்து இம்முகாமை நடத்துகின்றன.
இதில் நாட்டின் 40-க்கும் மேற்பட்ட முன்னணித் தனியார்
துறை நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களைத் தேர்வு செய்கின்றன.
முகாமிற்கு மாவட்ட
ஆட்சியர் இரா.நந்தகோபால் தலைமை வகிக்கிறார். சுழற் சங்கத் தலைவர் சே.கே.என்.பழனி
வரவேற்கிறார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர்
ஆர்.அருணகிரி திட்ட விளக்க உரையாற்றுகிறார்.
அனைவரும்
வருக! வாழ்வில் வளம் பெறுக!
- செய்தி: நன்றி
தினமணி
- படம்: நன்றி
மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக