புதன், 1 ஜூலை, 2015

‘அகம்’ என்றால் என்ன? – சி.இலக்குவனார்


sangailakkiyacholloaviyangal_attai01
அகம்என்றால் என்ன?
  ‘அகம்’ என்றால் என்ன? ஒத்த அன்பினையுடைய தலைவனும் தலைவியும் தனித்துக் கூடுகின்ற காலத்துத் தோன்றி, மன உணர்ச்சியால் நுகரப்படும் (அநுபவிக்கப்படும்) இன்பம், அக் கூட்டத்தின் பின்னர், அவ்வின்பம் இவ்வாறு இருந்தது எனச் சொல்லால் விளக்கிக் கூற முடியாமல் எப்பொழுதும் உள்ளத்தே நிகழும் உணர்ச்சியால் நுகரப்படுவதால் ‘அகம்’ எனப்பட்டது. அகம் உள், உள்ளம்: அதுபற்றி எழும் ஒழுக்கத்தை ‘அகம்’ என்று கூறினர். எளிமையாகக் கூறினால் காதல் இன்பம் என்பதாகும். காதலின்பம் உணர்ச்சி வயத்தது; உணர்ச்சி உள்ளத்தைப் பற்றியது. பண்டைத் தமிழ்ப் புலவர்கள் இக்காதல் இன்பம் பற்றி உண்டாகும் உள்ள உணர்ச்சிகளைச் சொல்லேவியப்படுத்தி அச்சொல் ஓவியப் பாடல்களை அகப்பாடல்கள் என்று அழைத்தனர்.
செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் முனவைர் சி.இலக்குவனார்:
சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்: பக்கம்.13


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக