அறிவியலிலும், தமிழர்கள் பின்தங்கியில்லை என்பதைச்
சங்க இலக்கியங்கள் நிறுவுகின்றன.
சங்க இலக்கியங்கள் கூறும் பல்வேறு துறைச்
செய்திகள் பிறநாட்டு அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. தாவர இயல்,
விலங்கியல், நிலங்களின் பிரிவுகள், இசை நுணுக்கங்கள், ஆடற் கலைகள், முத்து,
வைரம், வைடூரியம் பற்றிய உண்மைகள், சிற்பக்கலை, கட்டடக்கலை, கணிதம்,
வானநிலை சாத்திரம், கடற்பயணங்கள் ஆகிய எந்தக் கலையிலும் அறிவியல்
துறையிலும் தமிழர் பின்தங்கியதாகத் தெரியவில்லை. சங்க நூல்களைத் தெளிவாக
ஆராய்ந்தால் இப்படிப் பல உண்மைகள் வெளிவருகின்றன.
– இசைப்பேரரசி முனைவர் சேலம் செயலட்சுமி: தமிழிசை இலக்கண மரபு: பக்கம். 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக