சங்க உவமை உணர்த்தும் உயிரியல் அறிவாற்றல்
சங்கப் புலவர்கள் கையாண்டுள்ள இயற்கை
உவமைகளை நோக்கும் போது பயிரினங்கள், விலங்கினங்கள் முதலியவற்றின் இயல்புகளை
அவர்கள் எத்துணைக் கூர்ந்து நோக்கியறிந்திருந்தனர் என்பது பெறப்படும்.
– பெரும்புலவர் முனைவர் இரா.சாரங்கபாணியார்: இயற்கை விருந்து: பக்கம்.3
சங்க இலக்கியங்கள் வாழ்வியல் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பவை
சங்க இலக்கியங்கள் சாதி, சமய, இன
வேறுபாடற்றவை. வாழ்வியல் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பவை. பொருட்
சிறப்பும், கருத்துச் செறிவும், சொல்லினிமையும் வாய்ந்தவை. அவை அகத்திணை,
புறத்திணை என இருபாற்பட்டுப் பெரும்பாலும் காதல், வீரம், குறித்துப்
பாரித்துரைப்பினும் வையத்துள வாழ்வாங்கு வாழும் அறநெறிகளை வாய்மை, நட்பு,
மானம், தாளாண்மை முதலியவற்றை இலைமறைகாய் போன்று ஆங்காங்கே புலப்படுத்தும்.
பெரும்புலவர் முனைவர் இரா.சாரங்கபாணியார்: சங்கச் சான்றோர்கள்: நூன்முகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக