புதன், 1 ஜூலை, 2015

தொல்காப்பியர் சிலை – பார்வையும் பதிவும்

tholkappiyar_paarvai01A

தொல்காப்பியர் சிலையில் மாற்றவேண்டுவன

  குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் அமைக்க இருக்கும் தொல்காப்பியர் சிலை உருவாக்கப் பணி, படிமப் பார்வைக் குழுவினரால் (ஆனி13, 2046 / சூன் 28, 2045 அன்று) பார்வையிடப்பட்டது.
  சிற்பி இரவி, தனக்கு அளிக்கப்பட்ட முன்முறை படத்தினைப்போல் மிகச் சிறப்பாகச் சிலையை வடிவமைத்துள்ளார். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட படத்தில் தவறுகள் இருந்தமையால், சில குறைபாடுகள் சிலையில் உள்ளன. சிலையைப் பார்வையிட்ட பெங்களுர் முத்துச்செல்வன், ஆறு.அழகப்பன், த.சுந்தரராசன், கவிக்கோ ஞானச்செல்வன், இலக்குவனார் திருவள்ளுவன், சிரீதரன், நாஞ்சில் நடரசான், கணபதி, அனகை நா.சிவன் முதலானோர் தங்கள் கருத்துகளையும் இணையம், தொலைபேசி வாயிலாகத் தத்தமக்குத் தெரிவிக்கப்பட்ட சிலமபொலி செல்லப்பன், களப்பால் குமரன் முதலான பலரின் கருத்துகளையும் தெரிவித்தனர். இவற்றின் அடிப்படையில் சிற்பி, பின்வரும் மாற்றங்களைச் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.

  1. முகத்தில் முதிர்ச்சி தெரியும் வகையில் சிலை அமைய வேண்டும்.
  2. முடி அடர்த்தி தேவை.
  3. நெற்றிப்புருவம், இமைகள் ஆகியவற்றில் சிறிது மாற்றம் தேவை.
  4. நெற்றியில் மேலும் அகலம் தேவை.
  5. காது குண்டலத்தை மாற்ற வேண்டும்
  6. காதணிகள் சம நிலையில் இருக்க வேண்டும்.
  7. விழிகள் எழுதும் பார்வையில் கீழ்நோக்கி இருக்க வேண்டும்.
  8. மேல் உதடு கீழ் உதட்டைவிடச் சற்றுக் குறைவான அகலத்தில் இருக்க வேண்டும்.
  9. கீழே உள்ள மணிமாலை நீக்கப்பட வேண்டும்.
  10. மேல்மாலை சற்றுக் கீழிறங்கி அமைய வேண்டும். நடுவில் வில்லை வேண்டா.
  11. இடத்தோளில் அமைந்துள்ள மேலாடை சற்றுக் கீழேயும் அகலமாகவும் அமையவேண்டும்.
  12. மார்பு சற்று அகலமாக அமைய வேண்டும்.
  13. எழுதுகோல் எழுதும் வாகில் அமைய வேண்டும்.
  14. ஓலைச்சுவடி எழுதப்படும் நிலையில் இருக்க வேண்டும்.
  15. ஓலைச்சுவடியில் தொல்காப்பியம் எனப் பொறிக்க வேண்டும்.
  16. எழுத்தாணி பிடித்துள்ள கை விரல்கள் முன்பகுதிகள் நீளம் குறைந்தும் நடுப்பகுதிகள் கை மடிவைக் காட்டும் வகையில் வளைவான வடிவிலும் இருக்க வேண்டும்..
  17. ஓலைச்சுவடியுள்ள கையில் கோடுகள்(இரேகைகள்) தெரிய வேண்டும்.
  18. பாதி ஓக(யோக) அமைப்பிலும் மீதி இயல்பு அமைப்பிலும் அமைந்த இருக்கை முறை மாற்றப்பட வேண்டும். இயல்பாக அமரும் வகையில் கால்கள் பீடத்தில் படும் வகையில் அமைய வேண்டும்.
  19. அவ்வாறு அமைவதற்கேற்ப இடக்கால் தாள்(பாதம்) அமைய வேண்டும்.
  20. இடக்கால் விரல்கள் சீரான தோற்றத்தில் இயற்கையாக அமையவேண்டும்.
  21. வலக்கால் விரல் நுனியளவு குறைக்கப்பட வேண்டும்.
  22. பீடத்தின் இரு பக்கமும் வளைவு அமைக்க வேண்டும்.
  23. இடக்கால் தொடை தூக்கிய நிலையில் இல்லாமல், பீடத்தில் அமையும் வகையில் இருக்க வேண்டும்.
  24. இடக்கால் தாளில் அமைந்துள்ள வேட்டியானது கால்சட்டை முடிவுபோல் இல்லாமல் நீட்டப்பட்டு அமைக்கப்பட வேண்டும்.
  25. வலப்பகுதியில் முடிவடையும் மேலாடையின் இறுதிப்பகுதிக்கும் தொடைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள அகலப்பகுதி அகற்றப்பட வேண்டும்.
முழுமையான திருத்தப்பணிகள் முடிவுற்றதும் மீண்டும் பார்வையிடுவதாகவும் அதுவரை சிற்பி இரவி அவ்வப்பொழுது மாற்றப்பட்டவற்றின் படங்களை இலக்குவனார் திருவள்ளுவனுக்கு அனுப்பி வைத்தால்,அவர் பிறருக்கு அனுப்புவார் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
சிற்பியின் கைவண்ணமும் தொல்காப்பியர் சிலை உருவாவதும் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

[மேலே சுட்டியுள்ள குறைபாடுகள் பின்வரும் படங்கள் மூலம் தெளிவாகும்.
படத்தைச்  சொடுக்கிப் பெரிதாகக் காண்க.]








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக