தூது நூல்களைப் பயில்வதால் அரிய பெரிய
செய்திகளைப் பெரும்பாலும் குறளடியாக அமைந்துள்ள தனித்தனிக் கண்ணிகள்
வாயிலாக எளிதின் உணர்ந்து கொள்ளலாம். பொதுவாக நோக்கின், நாட்டு வரலாறு,
நற்றமிழ் மொழியின் தனிச் சிறப்பு, அம்மொழியின்கண் தொன்றுதொட்டு
இன்றுகாறும் நல்லிசைப் புலவர்களால் யாக்கப்பட்ட நூல்களின் இயல்பு. தெய்வ
நாட்டம், தெய்வத்தை வழிபட்டுத் தென்றமிழால் பாடியருளிய மெய்யடியார்களின்
வரலாறு, திருக்கோயில் அமைப்பு, ஆங்கு நடைபெறும் நாள்விழா, சிறப்பு விழா,
திருவோலக்கம், திருவிழா முதலியன எவ்வெவ்வாறு அமைந்து நடைபெறவேண்டுமென்னும்
முறைமையும் பிறவும் திட்பநுட்பமாகவும் தெளிவாகவும் உணர்தல் கூடும்.
இந்நூல்களில் மடக்கு, திரிபு முதலிய சொல்லணிகள் பல அமைந்துள்ளன.
-சைவச்சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்;
தூது உரை நூற்கோவை: பதிப்புரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக