ஆரியர் வருகையால் பாரத நாட்டில்
சமயச்சடங்குகள் வளர்ந்தன. தெய்வங்கள் பெருகின. புரோகிதம் வளர்ந்தது.
சாத்திரங்களும், சடங்குகளும் மலிந்தன. அதனால் கலைகளும் கட்டுக்கதைகளும்
வளர்ந்தன. குருட்டுப் பழக்கவழக்கங்களும், மூடநம்பிக்கைகளும், சாதிகளும்,
சாதிக் கட்டுப்பாடுகளும் பயனற்ற மந்திர தந்திரங்களும் பெருகின.
தெய்வங்களும் அவற்றின் மனைவி மக்களும், சிறு தெய்வங்களும் பெரிய
தெய்வங்களும் அவற்றின் பணியாட்களுமாக ஆயிரம் ஆயிரமாகத் தெய்வங்கள் பல்கிப்
பெருக்கெடுத்தன. முப்பத்து முக்கோடி தேவர்களும் அவர்களின் மனைவிமக்கள்
பணியாட்களுமாகக் கோடானு கோடி தெய்வங்கள் பல்கிப் பெருகின.
-நுண்கலைச் செல்வர் இராகவன்:
தமிழ் சங்கக் கலைத் தொடர்பு: பக்கம் 45
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக