வியாழன், 30 ஜூலை, 2015

உரையாசிரியர்களால் தெரிய வரும் இலக்கியச் செய்திகள் பல – அ. தாமோதரன்

UraiAasiriyarkal01

உரையாசிரியர்களால் தெரிய வரும் இலக்கியச் செய்திகள் பல!

  பரிபாடலின் முதற்பாடல் இளம்பூரணார் உரையினாலும், பதிற்றுப்பத்துப் பாடல்கள் சில நச்சினார்கினியர் உரையினாலும், பழமொழியின் முதற்பாடல் மயிலைநாதர் உரையினாலும் கிடைத்துள்ளமை மேற்கோள் ஆட்சியின் பயன் அல்லவா? களவியலில் காணப்பட்ட பாடல்கள் பாண்டிக்கோவையைச் சார்ந்தவை என்பதும், சிற்றடக்கம் எனவும் சிற்றடக்கமெனவும் பிழைப்பட வழங்கப்பட்டுவந்த நூற்பெயர் சிற்றெட்டகம் என திருத்தமுற்றதும் களவியற் காரிகையின் மேற்கோள் ஆட்சியினால் அல்லவா? தரவு, கொச்சகம் முதலிய உறுப்புகளின் பாகுபாடு அறிய இயலாதவாறு சிதைந்த நிலையில் கிடைத்துள்ள பரிபாடலில் இரு பாடல்களுக்காவது, உறுப்பமைப்புக் கிடைத்தது இளம்பூரணரின் மேற்கோள் ஆட்சியினாலன்றோ? ‘ஒண்டொடி அரிவை’ என்னும் ஐங்குறுநூற்றுப் பாடலின் (172) ‘உரவுக் கடல் ஒலித்திரை போல’ என்ற திருந்திய பாடத்திற்கு இளம்பூரணரின் மேற்கோள் ஆட்சி அல்லவா காரணம்? இவற்றை எல்லாம் மேற்கோள் ஆராய்ச்சியின் பயன்கள் என்னாமல் வேறு எங்ஙனம் குறிப்பிடுவது?
-முனைவர் அ. தாமோதரன்:
திருக்குறள் மேற்கோள் விளக்கம்: பக்கம்.64-6

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக