இந்தி முதன்மையை எதிர்த்து மக்கள்
கிளர்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. ஆயினும் நடுவிட ஆட்சியாளர்
அதைப் பொருட்படுத்தக் காணோம். ஏனைய தேசிய மொழிகளைப் புறக்கணித்து இந்திக்கு
மட்டும் முதன்மையளிக்கும் செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
1. இந்தியறிவு இல்லையேல் அரசு ஊழியர்க்கு ஊதிய உயர்வு இல்லை என்றனர்.
2. இந்தியறிவு பெற்றால் ஊதியம் உயர்த்தப்படும் என்றனர்.
3. அரசுத்துறை ஆவண ஏடுகளில் தலைப்புக் குறிப்புக்கள் இந்தியில் எழுதப்பட வேண்டும் என்று ஆணை பிறந்துள்ளது.
4. பாராளுமன்றில்
இந்தியும் ஆங்கிலமும் மட்டும் பயன்படுத்துவதற்குரிய வசதிகள்
செய்யப்படுகின்றனவாம். ஏனைய தேசீய மொழிகட்கு தேசப் பாராளுமன்றில் இடம்
கிடையாது.
5. திரைக்காட்சிகளில் செய்திக் கதிர் விளக்கம் இந்தியிலேயே கூறப்படுகின்றது.
6. உயர்நிலைக் கல்விக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் இந்தி மொழிவழியாகக் கற்பிக்கத்திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
7. இந்திமொழிவழியாகக் கற்பிக்கும் பல்கலைக் கழகம் ஒன்றும் தென்னாட்டில் தோன்றப் போகின்றதாம்.
தமிழ்ப் பெருமக்களே!
இவற்றையெல்லாம் எண்ணி இந்தி முதன்மையைத் தடுக்க மடிதற்றி முந்துங்கள்.
இந்தி முதன்மை தமிழை அழிப்பது உறுதி. தமிழ்நாட்டில் தமிழுக்கு
முதன்மையளிக்கத் தவறாதீர்கள். இந்தி முதன்மைக்கு இடமளிப்பது தமிழை
அழிப்பதற்கு வசதி செய்தி கொடுப்பதாகும் என்பதை அறமின்.
எதனை இழந்தாலும் மீண்டும் பெறலாம்.
மொழியை இழந்தால் மீண்டும் பெறல் அரிது.
மொழியை இழந்தபின் வாழ்வது எற்றுக்கு?
- தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், குறள்நெறி: ஆனி 02,1995 / 15.06.1964 பக்கம் 14
படித்தேன். மிகவும் உண்மையான கருத்து. பாராட்டுக்கள். எனக்கு தென்பட்ட சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பதிலளிநீக்குதமிழ் நாடு 900 வருடங்களாக தெலுங்கர்கலால் ஆளப்பட்டது. பின்னர் 100 வருடங்களுக்கு முன்னர் "திராவிட கழகம்" ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை "திராவிட கழகம்" என்னும் அந்நியர்களால் ஆளப்படுகிறது. திராவிட கழகத்தின் ஆரம்ப கர்த்தா "பெரியார்" என்னும் கன்னடக்காரர். MGR ஒரு மலையாளி. ஜெயலலிதா கன்னடாவை சேர்ந்தவர். கருணாநிதி "தெலுங்கர்". விஜயகாந்த் "தெலுங்கர்". வை. கோபால்சாமி "தெலுங்கர்". இவர்களே "திராவிட கழகங்களின்" தலைமைகள். இவர்கள் ஒருபோதும் தமிழ் ஒரு தேசிய இனம் என்று சொன்னது கிடையாது. தமிழர்களை "திராவிடர்" என்று அழைப்பது இந்த அந்நிய தலைமைகள் தான். தமிழனாகிய ராமதாஸ் அவர்கள் "வன்னி" என்னும் ஒரு சாதியை மையமாக கொண்டு "சாதி" அரசியல் நடத்துகிறார். தொல். திருமாவளவனும் அப்படியே "கீழ் சாதி" மக்களின் தலைவராக தன்னை காட்டிக்கொள்கிறார். நெடுமாறன் அவர்கள் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை ஏதாவது சொல்லுவார். சீமான் ??? கேள்விக்குறியே. இப்படி இருக்கிறது தமிழ் நாட்டின் தமிழ் அரசியல் தலைமைகளின் நிலைமை. ஆரிய வித்தை காட்டி "திராவிட" கூத்து நடேந்தேருகிறது தமிழன் மண்ணில். தமிழ் நாட்டில் தமிழன் ஆட்சி அமைப்பானோ? அல்லது காலப்போக்கில் "நாம் திராவிடர்" என்று கூறிக்கொள்வானோ?!. மொழி உணர்வு எப்படி முக்கியமோ அதுபோலவே தமிழ் நாட்டில் ஒவ்வொரு தமிழனும் " தமிழ் ஒரு தேசிய இனம்" என்று உரக்க சொல்ல வேண்டும். வானொலி, தொலைக்காட்சி,சஞ்சிகை, பத்திரிக்கை என்று எங்கும் இப்படியே எழுதவும் கூறவும் வேண்டும். திராவிட கட்சிகள் அதன் தலைமைகள் அப்படி கூறுவார்களா?. தமிழா விழித்துக்கொள். தமிழன் வாழ்க அவன் மொழியாம் தமிழும் வாழ்க.