சனி, 1 ஜூன், 2013

சப்பானில் வசிக்கும் 19 ஆம் நூற்றாண்டு மனிதர் - Jiroemon Kimura

சப்பானில் வசிக்கும் 19 ஆம் நூற்றாண்டு மனிதர்


டோக்கியோ:உலகில், 19ம் நூற்றாண்டை சேர்ந்த, ஒரே ஒரு ஆண், ஜப்பானில் வாழ்ந்து வருகிறார். 116 வயதான, சிரோமோன் கிமூரா, தன் வாழ்நாளில், நான்கு மன்னர்கள் மற்றும், 60 பிரதமர்களின் ஆட்சியை கண்டுள்ளார்.

ஜப்பானின், கியோடோவில் வசிப்பவர், கிமூரா, 116. இவர், உலகின் மூத்த குடிமகனாக கருதப்படுகிறார். இவர், 1897ல்,ஏப்.,19ல், பிறந்தவர். உலகில், 19ம் நூற்றாண்டில் பிறந்த, 22 பேர் உயிருடன் இருக்கிறனர். இதில், கிமூரா மட்டுமே ஆண். மற்ற, 21 பேரும் பெண்க@ள.
இன்றும், ஆரோக்கியத்துடன் இருக்கும் கிமூரா, நண்பர்களுடன் அவ்வப்போது, மது அருந்தினாலும், புகையை அறவே வெறுப்பவர்.

குறைந்த உணவு உட்கொள்ளும் இவர், அதிக நேரம் உறங்கும் பழக்கத்தை கொண்டுள்ளார். வீட்டில், தன் மருமகள் மற்றும் பேத்தியுடன் இருக்கும் கிமூரா, அவர்களுக்கும் ஆரோக்கியமாக வாழ கற்றுக் கொடுத்துள்ளார். ஜப்பானில், 110 வயதை கடந்தவர்களை, "சூப்பர் சென்டினிரியன்ஸ்' விருது வழங்கி அந்நாட்டு அரசு கவுரவிக்கிறது. இவரும், அந்த விருதை பெற்றுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளிலும், 110 வயதைக் கடந்த, 200க்கும் மேற்பட்ட நபர்கள் உயிர்வாழ்கின்றனர். இருப்பினும், அவர்கள் அனைவரிடமும், சரியான வயது சான்றிதழ் இல்லாததால், இதுவரை, 60 பேர் மட்டுமே அதிகாரப் பூர்வமாக, 110 வயதைக் கடந்து உயிர் வாழ்பவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், ஜப்பான் மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்களே, அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக