வியாழன், 30 மே, 2013

தமிழர்களுக்காகப்பேசிய சிங்களவரின் குரல் ஓய்ந்து விட்டது!

 தமிழர்களுக்காகப்பேசிய சிங்களவரின் குரல் ஓய்ந்து விட்டது!
 
 
திருவள்ளுவன் இலக்குவனார் shared Eelamranjan Eelamranjans's status.

Dr. Jayalath Jayawardena has passed away at a hospital in Singapore early this morning.

தமிழ்களுக்கு ஆதரவாக பேசிய ஒரு சிங்களவரின் குரல் மௌனித்து விட்டது. ஜெயலத் ஜெயவர்த்தனவின் பிரிவு தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய இழப்பு.

இலங்கையில் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான 'டாக்டர் ஜெயலத் ஜயவர்தன' இன்று காலமானார். அவருக்கு வயது 59!

1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி பிறந்த ஜெயலத் ஜெயவர்த்தன, 1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆறு மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்து, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் ஜெயலத் ஜெயவர்தனவின் உயிர் இன்று காலை பிரிந்திருக்கிறது.

இனவெறி தாண்டவமாடும் இலங்கையில் தினம், தினம் செத்து, செத்து வாழும் தமிழர்களுக்காக, மனித நேயத்தோடு போராடிய சிங்களவர்களில் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன குறிப்பிடத் தகுந்தவர். புதிது, புதிதாக தமிழ் மக்களுக்கு எதிராக‌ இனவாதம் பேசி பகைமை பாராட்டி மகிழும் சிங்கள பேரினவாத கூட்டத்தின் மத்தியில், தமிழர்களுக்காக நீண்ட காலமாக பேசியும், எழுதியும், செயல்பட்டும் வந்த ஜெயலத்தின் மறைவு இலங்கை தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ஜெயலத் ஜெயவர்த்தனவுடன் பல்வேறு கால கட்டங்களில் நெருங்கி பழகிய, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான‌ மனோ கணேசன், ''2007-ஆம் ஆண்டு என்னை சி.ஐ.டி. போலீசார் விசாரணை என்ற பெயரில் 9 மணி நேரம் தடுத்துவைத்து கைது செய்ய முயற்சித்த போது, என்னோடு இறுதி வரை இருந்து போலீஸுடன் வாதிட்டு என்னை மீட்டு வந்தவர், டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன. எனவே நான் அவருக்கு தனிப்பட்டமுறையில், நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

அதுமட்டுமில்லாமல் கொழும்பில் தமிழர்கள் தினம், தினம் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டும், கொல்லப்பட்டும் இருந்த, கோர யுத்த காலத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். எனது கட்சி உறுப்பினர்கள்கூட தங்களை அடையாளம் காட்டிக்கொள்வதற்கு தயங்கிய காலகட்டத்தில், ஜெயலத் ஜெயவர்த்தன என்னுடன் இணைந்து நின்று போராட்டங்களில் பங்கேற்றதால் 'சிங்களப் புலி' என சிங்கள அரசியல்வாதிகளாலும், ஊடங்களாலும் இழித்துரைக்கப்பட்டார். அவரது இந்த தமிழ் மக்கள் சார்பு கொள்கையால், ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினர் பெரும் பிரச்னையை கிளப்பினர். அப்போதும் தொடர்ந்து தமிழர்களின் கூட்டங்களிலும், போராட்டங்களிலும் பங்கேற்று வந்தார்'' என அவர் குறித்த நினைவுகளை உருக்கமாக பகிர்ந்து கொண்டார்.

கொழும்புவில் இருக்கும் ஊடகவியலாளரான பிரபாகரன் சண்முகநாதனிடம் பேசிய போது, ''எம்மவர்களே மௌனித்து ஒதுங்கிய நேரத்திலும் தமிழர்களுக்காக குரல் கொடுத்த சிங்கள தோழர் ஜெயலத் ஜெயவர்த்தனவின் பிரிவு தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய இழப்பு. போர்க் காலங்களிலும் அதற்கு பிந்தைய காலங்களிலும் கிறிஸ்தவ மத குருமார்களுடன் இணைந்து அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியது. ஒரு அரசியல்வாதியாகவும், அமைச்சராகவும், சிங்களவராகவும் இருந்து அவர் செய்த வேலைகளை காலத்திற்கும் தமிழர்களால் மறக்க இயலாது'' என மலரும் நினைவுகளை அசைப்போட்டார்.



  • Yohaa Jegan ஒரு பெரிய இழப்பு
  • Maliga Parthipan எமக்காகவும் பேசிய உள்ளம்
    உயிர் பிரிந்து இன்று அமைதியாகி விட்டது.....தமிழனிற்காய் கத்திக் கத்தியே களைத்துப்போய் கண்ணுறங்கி விட்டதுவோ?????
    பேச இருந்த ஒரு வாயும் இன்று மூச்சடங்கி விட்டதுவே....
    ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திப்போம்.
  • Arabi Kajenthiran Allo. Averum ouru. Sss. Than
  • Yohaa Jegan ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திப்போம்.
Photo

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக