வியாழன், 30 மே, 2013

சப்பானியத் தமிழ் அறிஞருக்குத் தாமரைத்திரு விருது





சப்பானிய த் தமிழ் அறிஞருக்கு  த் தாமரைத்திரு விருது வழங்கிய தலைமையமைச்சர்



டோக்கியோ: சப்பான் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங், சர்தேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் முன்னாள் தலைவர், நொபொரு கராசிமாவுக்கு, பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

பிரதமர் மன்மோகன்சிங், மூன்று நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அந்நாட்டு தலைவர்களை சந்தித்து, பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களில், அவர் கையெழுத்திட்டு வருகிறார். ஜப்பானின், டோக்கியோ பல்கலை கழக பேராசிரியர் நொபொரு கராஷிமா,80. இவர் தென்னிந்திய வரலாறு குறித்து ஆய்வு செய்தவர். இதற்காக சென்னை பல்கலைகழகத்தில், கல்வெட்டு குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார்.

நன்றாக தமிழ் பேசக்கூடிய கராஷிமா, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தமிழுக்கு இவர் ஆற்றிய சேவையை பாராட்டி, பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. உடல் நிலை சரியில்லாததால், டில்லியில் கடந்த மாதம், 5ம்தேதி, நடந்த விழாவில், கராஷிமா பங்கேற்கவில்லை. இதையடுத்து, டோக்கியோவில் இந்த விருதை, பிரதமர் மன்மோகன்சிங், கராஷிமாவுக்கு, நேற்று வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக