இந்துக்களை இம்மியளவும் புண்படுத்தாத சேதுத் திட்டம்: கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
இந்திய தீபகற்பம் முழுவதிலும், 3,554 கடல் மைல் தூரத்திற்கு கடற்கரைஅமைந்துள்ளது.எனினும், இப்பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்வதற்குரிய வசதி அமையப் பெறவில்லை. இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து கிழக்குக் கடற்கரைபகுதியில் உள்ள தூத்துக்குடி செல்வதற்குக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வரவேண்டியுள்ளது. ஏனெனில், இந்தியாவின் தென் கிழக்குக் கடல் பகுதியில் உள்ளஇராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் மணல் பாறைப்பகுதிகள் அமைந்துள்ளன. அது, ஆதாம் பாலம் என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் கடலின் ஆழம் ஏறத்தாழ 11 அடி அளவுக்கேஉள்ளது. இந்த குறைந்த ஆழம் காரணமாக கப்பல்கள் இலங்கையைச் சுற்றிவரவேண்டியுள்ளது.கப்பலின் பயண தூரத்தைக் குறைப்பதற் காக இந்திய கடற்பகுதிக்குள் கப்பல்போக்கு வரத்திற்குப் பயன்படும் வகையில், `சேது சமுத்திரக் கால்வாய்’ வெட்டுவதற்கு
* 1860ஆம் ஆண்டு முதல் பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன.
* 1860இல் கமாண்டர் ஏ.டி. டெய்லர் திட்டம்
* 1861இல் டவுன்ஸ்சென்ட் திட்டம்1862இல் பிரிட்டிஷ் பாராளுமன்றக்குழு திட்டம்
* 1863இல் சென்னை மாகாண ஆளுநர் சர் வில்லியம் டென்னிசன் திட்டம்
* 1871இல் ஸ்டோட்டர்ட் திட்டம்
* 1872இல் துறைமுக பொறியாளர் ராபர்ட்சன் திட்டம்
* 1884இல் சர் ஜான் கோட் திட்டம்
* 1903இல் தென்னிந்திய ரயில்வே பொறியாளர் திட்டம்
* 1922இல் இந்திய அரசின் துறைமுகபொறியாளர் சர் இராபர்ட் பிரிஸ்டோ திட்டம் -என பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன.
எனினும், எந்த ஒரு திட்டமும்செயல்படுத்தப்படவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மத்திய அரசு 1955ஆம் ஆண்டில் சர் ஏ.இராமசாமிமுதலியார் அவர்களைத் தலைவராகக் கொண்டு சேதுசமுத்திரத் திட்டக் குழு ஒன்றை அமைத்தது. அப்போதைய தெற்கு ரயில்வே தலைமை வர்த்தகக் கண்காணிப்பாளர் எஸ்.கே. முகர்ஜி, கல்கத்தா துறைமுகத்தின் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் பி.என்.சட்டர்ஜி, கடல்வள ஆலோசகர் கேப்டன் ஜே.ஆர். டேவிஸ் ஆகியோர் இதன் உறுப்பினர்கள். சர் ஆர்.ஏ. கோபாலசாமி அய்யங்கார், ஐ.சி.எஸ். (1969ஆம் ஆண்டில்கழக அரசு அமைத்த முதல் காவல் ஆணையத்தின் தலைவராகத் திகழ்ந்தவர்) இந்தசேது சமுத்திரத் திட்டக்குழுவின் உறுப்பினர் செயலாளராகப் பணியாற்றினார்.இந்தக் குழு,1) இந்தியாவின் மேற்குக் கரையில் இருந்து கிழக்குக் கரைக்கு ஆழ்கடல் கப்பல்கள் வந்துசேர ஆடம்ஸ் பாலம் அருகில் ஒரு கால்வாய் வெட்டி மன்னார் வளைகுடாவையும்,பாக் ஜலசந்தியையும் இணைப்பதன் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்தது.
2) தூத்துக்குடியை ஆழ்கடல் துறைமுகம் ஆக்குவதற்கு இந்தக் கால்வாய்துணை புரியுமா என்பது குறித்தும் ஆராய்ந்தது.இதன் பயனாக, தூத்துக்குடி துறைமுகம் வெற்றி பெற வேண்டுமென்றால் சேதுக்கால்வாய்த் திட்டம் அவசியமென்று இக்குழு கருதியது.விரிவான ஆராய்ச்சி, கவனமான மதிப்பீடு ஆகியவற்றின் மூலம் இத்திட்டம் சாத்தியமானது என்றும், நன்மை பயக்கக் கூடியது என்றும்,இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலேயே இத்திட்டத்தினை நிறைவேற்றி முடிக்கவேண்டும் என்றும், 1956 ஆம் ஆண்டில் சர் ஏ. ராமசாமி முதலியார் குழு பரிந்துரைசெய்தது.இத்திட்டம் நிறைவேற்றப்படுவதன்மூலம் சென்னை தூத்துக்குடி கடல் வழிபயணத்திற்கு 360 கடல் மைல் தூரம் குறையும் என்றும், பயண காலத்தில் ஒன்றரைநாள் மிச்சமாகும் என்றும் இக்குழு தெரிவித்தது. எனினும், சேதுக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டுமென மத்திய அரசினை திராவிட முன்னேற்றக் கழகம் சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும்தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. திராவிட முன்னேற்றக் கழக மாநாடுகளிலும் இதுபற்றியதீர்மானங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டன. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டு வந்த தேர்தல்அறிக்கைகளிலும் இத்திட்டம் சேர்க்கப்பட்டு வந்தது.
1967 ஆம் ஆண்டில் அண்ணா தலைமையில் தி.மு.க. அர சுஅமைந்த நிலையில், எழுச்சி நாள் கடைப்பிடிக்கப்பட்டு சேது சமுத்திரத் திட்டம் கோரப்பட்டது. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 23.7.1967 அன்று பேரறிஞர் அண்ணா கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து எழுச்சி நாள் கூட்டங்கள் நடத்த முடிவு செய்தார்.அதனையொட்டி, தமிழக சட்டப்பேரவையில் அனைவருடைய ஆதரவையும் கோரினார்.அப்பொழுது அண்ணா “சேதுக் கால்வாய் திட்டம் - தூத்துக்குடி துறைமுகத் திட்டம் இரண்டும் ஒருங்கிணைந் தால் அதைத் தமிழகத்தின் `சூயஸ் கால்வாய்’ என்று கருதலாம்.இப்போது சிலோனைச் சுற்றி கொழும்பு துறைமுகத்திற்குப் போய் கிட்டத்தட்ட 600மைல்கள் சுற்றிக் கொண்டு வருகின்ற வெளி நாட்டுக் கப்பல்கள், இத்திட்டம் நிறைவேற்றப்படு வதன் மூலம் அந்நிலைமையை தவிர்த்துவிட இயலும்.
வெளிநாட்டுக் கப்பல்கள் - பிரமாண்டமான கப்பல்கள் இப்போது தூத்துக்குடிதுறைமுகத்தில் நிற்க முடியாது.ஆழ்கடல் துறைமுகமாக இருக்குமானால் பெரியகப்பல்கள் வர பல நாட்டுக் கப்பல்கள் வரத்தக்க பெரிய அனைத்து நாட்டுத்துறைமுகமாக மாறும்.அப்படி மாறும்போது பல்வேறு வகையான தொழில்கள் கிடைக்கும். அப்படி கிடைக்குமானால் பொருளாதார வளர்ச்சி நிரம்ப ஏற்படும்”-என்று கூறி தமிழக சட்டமன்றத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை அண்ணாவலியுறுத் தினார்.சேலம் இரும்பாலைத் திட்டத்தையும், சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தையும்,தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்தும் திட்டத்தையும் நிறைவேற்றிட தமிழகம்முழுவதிலும் 23.7.1967 அன்று `எழுச்சி நாள்’ கடைப்பிடிக்கப்பட்டது.அந்த எழுச்சி நாளின்போது தமிழகம் முழுவதும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில்எழுச்சி நாள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானத்தில்,“தூத்துக்குடி, சேலம் திட்டங்கள் ஏன் தேவை - எதற்குத்தேவை என்பனவெல்லாம் ஆண்டுக்கணக்காக தமிழ்நாட்டுத் தலைவர்களால் மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதை இந்தக் கூட்டம் மீண்டும் நினைவூட்டுகிறது. சேலம் இரும்புஉருக்காலையும், தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுகமும், தமிழர்களின் இன்றிய மையாத்தேவை என்பதை சர்வ கட்சியினரும் அடங்கிய இந்தக் கூட்டம் மத்திய அரசுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி தெரிவிப்பதுடன், இந்தத் திட்டங்களை எவ்வளவுவிரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நிறைவேற்று வதற்கு உடனடிச் செயல்களில்முனைந்து ஈடுபட வேண்டுமென்று மத்திய அரசை மிக அழுத்தமாக வற்புறுத்துகிறது”என்று எழுச்சி நாள் கூட்டத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயினும், சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
2004ஆம் ஆண்டு மத்தியில் திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்த ஐக்கியமுற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பிறகு தான்,சேது சமுத்திரத் திட்டம் 2427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.ஏறத்தாழ 150 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறக் கூடிய நாளாக 2.7.2005அமைந்தது.2.7.2005 அன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இத்திட்டத் தைத்தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார். சேது சமுத்திரக் கால்வாய் வெட்டும் பணி தொடங்கி சிறப்பாக நடைபெறவும்தொடங்கியது.
ஆனால் திட்டம் தொடங்கி, பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் இந்தத் திட்டத்திற்காக செலவிடப்பட்ட பிறகு, இத்திட்டம் நடைபெற்று விட்டால், தி.மு.கழகத்திற்கு பெயர்வந்து விடுமே என்ற ஒரே காரணத் திற்காக இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டைபோடுவதற்கு பல்வேறு முயற்சிகளிலே ஈடுபடுகிறார்கள். ராமர் பாலம் என்றெல்லாம் அதற்கு வர்ணம் பூசி மதப் பிரச்சினைகளை ஏற்படுத்த முயலுகிறார்கள்.ராமர் சேது பாலம் எதுவும் அந்தப் பகுதி யில் இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை என்றும்,எந்தவொரு தொல்லியல் ஆராய்ச்சியும் இப்படி ஒரு பாலம்இருந்ததாக உறுதி செய்யவில்லை என்றும் திட்டவட்டமாக மத்திய அரசின் சார்பில்மாநிலங்களவையில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகாசோனியின் எழுத்துப் பூர்வமான பதிலிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற கட்சிகள் ராமர் பாலம் இருப்பதற்கான ஆதாரமாக செயற்கைக்கோள் படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான “நாஸா’’வெளியிட்டிருப்பதாகக் கூறினர்.“ராமர் பாலம் இருப்பதாக நாஸா படங்களை வெளியிட்டதாகக் கூறுவதில் உண்மைஇல்லை’’ என்று அப்போதே மறுத்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு., “நாஸா’’அமைப்புக்கே மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ள தாகவும், ஆனால் இதுகுறித்து நாஸா எந்தவிதமான பதிலும் அனுப்பவில்லை’’ என்றும் அப்போதே விளக்கினார்.மேலும் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இராமநாதபுரத்தில் அளித்த பேட்டியில் “ஒட்டுமொத்த இந்து மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கத்தில் தனுஷ்கோடி கடலில்ராமர் பாலம் இருப்பதாக பிரச்சினையை கிளப்புகிறார்கள்.அந்தக் கடல் பகுதியில் மனித கட்டமைப்புகளால் உருவாக்கப்பட்ட பாலம் இருந்ததாக துளி அளவு கூடஆதாரம் இல்லை. கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை 81 இடங்களில் கடலுக்குள் ஆழ் துளை சோதனை நடத்திப் பார்த்ததில் பாலம் இருந்ததற்கான அடிப்படை ஆதாரமோ, சுற்றுச் சூழல் பாதிப்போ இல்லை. இந்து மக்களின் மனம் புண்படக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதற்கான அறிவியல்ஆய்வு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. தில்லியில் இந்து மத சன்னியாசிகளை அழைத்து அந்த ஆதாரங்களை காட்டினோம். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர்.’’ என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக