கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க உச்சநீதிமன்றம் இசைவு வழங்கியது தீயூழ்: அச்சுதானந்தன்
கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க உச்சநீதிமன்றம்
அனுமதி வழங்கியது துரதிர்ஷ்டவசமானது என கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.
அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க அனுமதி தரக்கூடாது என வலியுறுத்து அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். ஆனால் அவர்களது மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அணுமின் நிலையத்தை இயக்கலாம் என உத்தரவிட்டது.இதுதொடர்பாக அச்சுதானந்தன் வெளியிட்ட அறிக்கையில்:
கூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்பு தொடர்பாக அப்பகுதி மக்களிடம் அச்சம் நிலவுகிறது. அணுமின் நிலையம் இயக்க அனுமதி தந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. அதன் கட்டுமானத்துக்கு தரம் குறைவான பொருள்கள் பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தற்போது அணுமின் நிலையம் இயங்க அனுமதி தந்திருப்பது மேலும் மக்களின் அச்சத்தை அதிகப்படுத்தி விடும் என்றார் அவர்.
அணுமின் நிலைய விவகாரத்தில் தனது கட்சியான மார்க்சிஸ்ட் நிலைக்கு எதிராக எதிர்ப்பாளர்களுக்கு அச்சுதானந்தன் ஆதரவு தந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக