வெள்ளி, 10 மே, 2013

தமிழ்நாட்டில் புதிய பண்பலை நிலையம் தொடங்குகிறது சீன வானொலி

தமிழ்நாட்டில் புதிய பண்பலை  நிலையம் தொடங்குகிறது சீன  வானொலி
 
 
பீகிங்,  மே 10-

சீனாவின் சர்வதேச வானொலி நிலையம் 1963-ம் ஆண்டு முதல் தமிழ் வானொலிப் பிரிவை நடத்தி வருகிறது. ஐம்பதாவது ஆண்டுவிழாவை கொண்டாடும் இந்த வருடத்தில் தமிழ் நாட்டில் எப்.எம் வானொலி நிலையத்தை தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

சென்னையில் உள்ள சில எப்.எம் வானொலி நிலையங்களுடன் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக, சர்வதேச சீன வானொலியின் தமிழ் பிரிவின் இணை இயக்குனர் கெய் ஜுன் அக வானி தெரிவித்தார்.

சர்வதேச சீன வானொலி நிலையம் தமிழ் மட்டும் அல்லாமல் இந்தி, பெங்காலி மற்றும் உருது ஆகிய மொழிகளிலும் ஒலிபரப்பு செய்து வருகிறது.

சீன மொழியில் உள்ள நிகழ்ச்சிகளை மொழிபெயர்த்து ஒலிபரப்புவதன் மூலம் சீனாவின் கலாச்சாரத்தை இந்திய நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என சீன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக