புதன், 8 மே, 2013

தாயின் இதய அதர்களைத் தானமாக வழங்கிய 11 அகவை மகன்

தாயின் இதய ளை த் தானமாக வழங்கிய 11 வை மகன்
 திருவனந்தபுரம்: விபத்தில் உயிரிழந்த தாயின், இதய வால்வுகளை, தானமாக வழங்கி, பிறரின் பாராட்டைப் பெற்றுள்ளான், 11 வயது சிறுவன் விஷ்ணு.கேரள மாநில தலைநகர், திருவனந்தபுரத்தில் வசிப்பவர் ராதிகா. அரசு ஊழியரான இவர், சில நாட்களுக்கு முன், தன், 11 வயது மகன் விஷ்ணுவுடன், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த ஆட்டோ, ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே, ராதிகா இறந்தார்.சிறு காயங்களுடன், சிறுவன் உயிர் தப்பினான். ராதிகாவின் கணவர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், தாயுடன் வசித்து வந்த சிறுவன், விபத்திற்கு பின், அனாதையாகி விட்டான்.எனினும், தன் தாயின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க, அச்சிறுவன் முன் வந்தான். சித்திரைத் திருநாள் மருத்துவமனையில், இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிலருக்கு, இதய வால்வு தேவைப்படுவதை அறிந்த அச்சிறுவனை, மருத்துவர்கள் அணுகினர். தாயின் உடல் உறுப்புகளை தானமாக தர, அந்தச் சிறுவன் சம்மதம் தெரிவித்தான்.அதன்படி, ராதிகாவின் இதய வால்வுகள் அகற்றப்பட்டன. பரிசோதனைக்குப் பிறகு, தகுதி வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படும் என, மருத்துவர்கள்கூறியுள்ளனர்.தந்தையையும், தாயையும் இழந்துள்ள சிறுவன், உறவினர் பராமரிப்பில் உள்ளான். தாயின் இதய வால்வுகளை தானமாக வழங்க முன் வந்த 11 வயது மகனை பலரும் பாராட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக