சனி, 11 மே, 2013

கருணை மனு மறுப்பு ஏன்?: ப‌ேரறிவாளன் விளக்கம் கேட்டார்

கருணை மனு  மறுப்பு ஏன்?: காணொளி  மூலம் பேரறிவாளன் தகவல் ஆணையரிடம் விளக்கம் கேட்டார்
கருணை மனு நிராகரிப்பு ஏன்?: வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேரறிவாளன் தகவல் ஆணையரிடம் விளக்கம் கேட்டார்
சென்னை, மே. 11-

ராஜீவ் கொலையாளி பேரறிவாளன் தனது கருணை மனு எந்த அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் விளக்கம் கேட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி மத்திய தகவல் ஆணையருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேரறிவாளன் பேசினார். அப்போது தொழில் நுட்ப கோளாறால் அந்த வீடியோ கான்பரன்ஸ் பேச்சு தடைபட்டது. இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் இருந்து மத்திய தகவல் ஆணையர் சுஷ்மா சிங்குடன் மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கடந்த வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது தனது கருணை மனுவை ஜனாதிபதி எந்த அடிப்படையில் நிராகரித்தார் என்பதற்கான விளக்கங்களை கேட்டுள்ளார்.

இந்த வீடியோ கான்பரன்ஸ் விசாரணை குறித்து பேரறிவாளனின் வழக்கறிஞர் சுரேந்தர் கூறியதாவது:-

வேலூர் மத்திய சிறையில் அதிகாரிகள் முன்னிலையில் மத்திய தகவல் ஆணையர் சுஷ்மா சிங், இணைச்செயலாளர் (நிதி) மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியோருடன் பேரறிவாளனிடம் 30 நிமிடம் விவாதம் நடத்தினர். விவாத்தின்போது தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற ஆலோசனை குறித்து விளக்கம் அளிக்க பேரறிவாளன் கேட்டு கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு எடுக்க காலம் தாழ்த்தியதால் தண்டனையை குறைக்க வேண்டும் என்று ராஜீவ் கொலையாளிகள் 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக