ஞாயிறு, 5 மே, 2013

அலை பேசி பயன்படுத்துவதில் எச்சரிக்கை!

அலை பேசி பயன்படுத்துவதில் எச்சரிக்கை!

ஸ்மார்ட் போன் திருடப்பட்டால், ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு கூறும், வி.அழகேசன்:
நான் மயிலாடு துறையில், தகவல் தொழில்நுட்ப பொறியாளராக பணியாற்றுகிறேன். "ஸ்மார்ட் போன்' போன்ற அதிநவீன தொழில்நுட்ப கருவியை பயன்படுத்த, மக்கள் அதிகம் விரும்ப காரணம், இருந்த இடத்திலிருந்தே பல காரியங்களை செய்ய முடியும் என்பதே.ஆனால், இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், பாதுகாப்பு வசதிகள் எப்படி, அக்கருவியை எதிர்பாராத விதமாக தொலைத்தாலோ அல்லது திருடப்பட்டாலோ ஏற்படும் பாதிப்புகள் பற்றிய, விழிப்புணர்வு இல்லாமலேயே பயன்படுத்தி வருகின்றனர்.ஸ்மார்ட் போன் திருடப்படுவதால் ஏற்படும் முக்கிய பாதிப்பே, பண இழப்பு தான். ஏனெனில், ஸ்மார்ட் போன் வழியாக, "மொபைல் பேங்கிங்'கை ஆக்டிவேட் செய்து, மொபைல் போன் மூலமே பணம் கட்டும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால், மொபைல் தொலைந்தவுடன், இச்செயல்பாட்டை முடக்குவது முக்கியம். இல்லையேல், மொபைல் திருடப்பட்ட ஒரு சில மணி நேரத்திலேயே, வங்கி கணக்கில் உள்ள உங்களது பணம், மொபைல் பேங்கிங் வழியாக திருடப்பட்டு விடும்.இ-மெயில், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்திய பின், அடுத்த முறை பயன்படுத்தும் போது, "பாஸ்வேர்டு' டைப் செய்ய வேண்டுமே என்ற சோம்பேறி தனத்தில், "லாக் அவுட்' செய்ய மாட்டார்கள். இதனால், திருடப்பட்ட மொபைல் மூலம், உங்களின் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க படங்கள், வீடியோக்கள், தொழில் சம்பந்தமான பர்சனல் தகவல்கள், எளிதாக திருடப்படுகின்றன.இதை தடுக்க, "பின் நம்பர், பேட்டர்ன் லாக், மொபைல் டிராக்கிங்' போன்ற வசதிகளை, அறிவது அவசியம். இவ்வசதிகள் மூலம், யாரேனும் உங்கள் பர்சனல் தகவல்களை திருட முயற்சித்தால், தானாகவே அத்தகவல்கள் அழிந்து விடும். ஸ்மார்ட் போனை வாங்கிய பின், அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்குச் சென்று, அதன் பாதுகாப்பு, "செட்டிங்ஸ்' பற்றிய தெளிவான விளக்கமும், விழிப்புணர்வையும் பெற வேண்டும்.


"ஐகிட்ஸ்'களுக்குபாதிப்பு!

டச் ஸ்கிரீனை குழந்தைகள் பயன்படுத்துவதால், ஏற்படும் நன்மை, தீமைகளை கூறும், டாக்டர் ஜெயந்தினி: நான், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவராக பணியாற்றுகிறேன். இன்றைய அதிநவீன தொழில்நுட்பத்தால், மொபைல் போன், ஐபேட், கணினி என, அனைத்திலும், "டச் ஸ்க்ரீன்' தொழில்நுட்பம் உள்ளதால், ஐந்து வயது குழந்தைகள் கூட, எளிதாக பயன்படுத்துகின்றனர். சாப்பாடு மற்றும் தூங்கும் நேரத்தை தவிர்த்து, மீதி நேரங்களில், டச் ஸ்க்ரீன் கருவியை நோண்டியபடியே இருக்கும் குழந்தைகளை, "ஐகிட்ஸ்' என, செல்லமாக வெளிநாடுகளில் அழைப்பர்.
கம்ப்யூட்டரில் விளையாட, கீபோர்டு தேவை. ஆனால், டச் ஸ்க்ரீனில் விளையாட, நேரடியாக கை விரலை பயன்படுத்துவதால், அதிக ஈடுபாடு ஏற்படுகிறது. இதன் மூலம் அறியப்படும் செய்திகள், "விஷுவலாக' காட்டப்படுவதால், குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்கின்றனர்.
குறிப்பாக கம்ப்யூட்டர், "டிவி' போன்று இல்லாமல், தானே கட்டுப்படுத்த முடியும் என்ற அதிகாரம், குழந்தைகளுக்கு பிடித்திருக்கிறது.
டச் ஸ்க்ரீனை தொடத் தொட, படங்கள், புதிய தகவல்கள் என, வந்துகொண்டே இருப்பதால், கற்கும் திறன் ஊக்குவிக்கப்படுகிறது. இதனால், குழந்தைகளுக்கு நன்மையை விட, தீமையே அதிகம். சிறுவயது அனுபவமே அஸ்திவாரம் என்பதால், அறைக்குள்ளே விளையாடும் குழந்தைகளுக்கு, வெளியுலகம் பற்றிய அனுபவம் கிடைப்பதில்லை.ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், இதை தொடர்ச்சியாக பயன்படுத்தினால், மற்ற குழந்தைகள் போல் இல்லாமல், பேசுவதற்கு அதிக சிரமப்படுவர். மூளையின் நியூரான்களுக்கு மேல் உள்ள, "அக்ஸன்' எனும், மெல்லிய மேலுறையின் வளர்ச்சியும் பாதிப்புஅடையும்.உடல் ரீதியான செயல்பாடுகள் இல்லாததால், ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. பிற குழந்தைகளுடன் பழகுவது, விளையாடுவது போன்ற இயல்பான செயல்பாடுகள் இருக்காது. டச் ஸ்க்ரீனை நேராக பார்த்தே விளையாடுவதால், மற்ற சமயங்களில், பக்கத்தில் இருப்பவர்களை திரும்பிப் பார்ப்பது கூட, கடினமாக தோன்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக