செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

மிதியூர்தி ஓட்டும் பெண், வழக்கறிஞர்

ிிதி(ஆட்டோ)  ஓட்டும் பெண், வழக்கறிஞராகிய  அரில்



பெங்களூரு: பெங்களூரு நகரில், ஆட்டோ ஓட்டி, பிழைப்பு நடத்திய பெண், வழக்கறிஞராகி, சாதனை படைத்துள்ளார்.வெங்கடலட்சுமி, 40, பெங்களூரு நகர வீதிகளில், ஆட்டோ ஓட்டும் பெண்களில் ஒருவர். பட்டப்படிப்பு முடித்திருந்த இவர், வழக்கறிஞராக வேண்டும் என, சிறு வயதிலிருந்தே விரும்பினார்.எனினும், பட்டப்படிப்பு முடித்ததும், திருமணம், குழந்தை, வாழ்க்கையை ஓட்ட, ஆட்டோ ஓட்ட வேண்டிய நிர்பந்தம் போன்ற கட்டாயங்களால், நேரடியாக அவரால், வழக்கறிஞர் ஆக, தேவையான படிப்பை படிக்க முடியவில்லை.கடந்த, 13 ஆண்டுகளாக, ஆட்டோ ஓட்டி வரும் வெங்கடலட்சுமி, தினமும் காலை, 8:00 மணிக்கு, தன் பணிகளை துவக்கி விடுவார். 8:30 மணிக்கு, மகளை, பள்ளியில் கொண்டு விடும் இந்த பெண், 10 கி.மீ., தூரத்தில், பசவேஸ்வர் நகரில் உள்ள, பாபு ஜெகஜீவன் ராம் சட்ட கல்லூரியில், எல்.எல்.பி., படிக்க, ஆட்டோவிலேயே செல்வார்.வகுப்புகள் மதியம் முடிந்ததும், கறுப்பு, வெள்ளை சீருடையை கழற்றி, வீட்டில் போட்டு விட்டு, ஆட்டோ டிரைவருக்குரிய, காக்கி சீருடையை அணிந்து, ஆட்டோ ஓட்ட செல்வார். நள்ளிரவு வரை, ஆட்டோ ஓட்டும் வெங்கடலட்சுமி, இரவில் வீட்டுக்கு சென்ற பிறகும், சிறிது நேரம் படித்த பின், தூங்குவார்.சில மாதங்களுக்கு முன் வெளியான, எல்.எல்.பி., தேர்வில், அவர் வெற்றி பெற்றார். எனினும், பார் கவுன்சில் தேர்வில் வெற்றி பெற்றால் தான், வழக்குகளில் ஆஜராக முடியும் என்பதால், அந்த தேர்வுக்காக, கடுமையாக தயாரானார்.கடந்த வெள்ளிக்கிழமை வெளியான, பார் கவுன்சில் தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்று, முழு அளவில் வழக்கறிஞர் ஆகிவிட்டார்.தேர்வு முடிவை, கம்ப்யூட்டரில் பார்த்த, வெங்கடலட்சுமியின், 17 வயது மகள், "அம்மா, நீங்க, பார் கவுன்சில் தேர்வில், பாஸ் ஆயிட்டீங்க' என கூறிய போது, வெங்கடலட்சுமியால், ஆட்டோவை தொடர்ந்து ஓட்ட முடியவில்லை.சில நிமிடங்கள், ஓரமாக ஆட்டோவை நிறுத்தி, தன் வெற்றியை நினைத்து, பூரித்த அவர், "இனிமேல் ஆட்டோ ஓட்ட மாட்டேன்; முழு நேர வழக்கறிஞராக பணியாற்றுவேன்' என, உறுதி பூண்டார்.வறுமை காரணமாக, தவறான பாதைகளை பலர் தேர்ந்தெடுக்க, கடுமையான பெங்களூரு நகர வீதிகளில், ஆட்டோ ஓட்டி, கிடைத்த நேரத்தில், ஐந்தாண்டுகள் கஷ்டப்பட்டு, எல்.எல்.பி., படித்து முடித்து, வழக்கறிஞராகவும் மாறியுள்ள, "ஆட்டோ வெங்கடலட்சுமியை' இனி அனைவரும், "வழக்கறிஞர் வெங்கடலட்சுமி' என, அழைப்பர் என்பது நிச்சயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக