வியாழன், 14 பிப்ரவரி, 2013

4 பேரும் வீரப்பனின் கூட்டாளிகளே இல்லை: முத்துலட்சுமி

தூக்குமர நிழலில் நிற்கும் 4 பேரும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளே இல்லை: முத்துலட்சுமி

 They Are Not Veerappan Aides Muthulaxmi
சேலம்: கருணை மனு நிராகரிக்கப்பட்ட தூக்கு தண்டனை கைதிகள் 4 பேரும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளே அல்ல என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.
1993-ம் ஆண்டு மேட்டூரை அடுத்த பாலாறில் கண்ணிவெடித் தாக்குதல் மூலம் 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு உட்பட 3 வழக்குகளில் 124 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மைசூர் தடா நீதிமன்றம் 117 பேரை விடுவித்தது. மேல்முறையீட்டில் 7 பேரில் மீசை மாதையன், ஞானப்பிரகாசம் உள்ளிட்ட 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் 4 பேரும் கருணை மனு தாக்கல் செய்திருந்தன. இக்கருணை மனுவை பிரணாப் முகர்ஜி நிராகரித்துவிட்டார்.
இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, தூக்குக் கொட்டடியில் நிறுத்தப்பட்டிருக்கும் 4 பேருக்கும் வீரப்பனுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. அவர்கள் வீரப்பனின் கூட்டாளிகளும் கிடையாது. 4 பேருமே அப்பாவி மலைவாழ் மக்கள்தான் என்றார்.
மேல்முறையீடு
இதனிடையே கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து 4 பேரின் சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர்களின் வழக்கறிஞர்கள் முடிவு செய்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக