செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

கைப்பந்து அரசி!

கைப்பந்து சி!

தமிழக க் கைப்பந்து அணிக்காக, "கோல் கீப்பர் வீரராக விளையாடி வரும், பிருந்தா: என் சொந்த ஊர், நாகப்பட்டினத்திலுள்ள, நடராசன்பிள்ளைச்சாவடி கிராமம். அப்பா மதியழகன், விவசாயம் செய்கிறார். மயிலாடுதுறை, ஏ.வி.சி., கலைக் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு, வணிக மேலாண்மை படிக்கிறேன். உயரம் தாண்டுதலில் தான், முதலில் கவனம் செலுத்தினேன். பிளஸ் 1 படித்த போது, பயிற்சி ஆசிரியர், "நீ கைப்பந்து விளையாட்டில் கவனம் செலுத்தினால், எதிர்காலம் சிறப்பாக அமையும்' என, கவனத்தை திசை திருப்பினார்.நான் பள்ளியில் படித்த போது, பங்கேற்ற முதல் போட்டியில், "சப்ஸ்டிடியூட்' எனும், மற்ற ஆட்டக்காரர்களுக்கு பதிலியாக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தினமும், பயிற்சியில் வேகம் காட்டினேன். கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, ஐந்தாவது ஆட்டத்திலேயே, முக்கிய வீரராக

விளையாடும் நிலைக்கு முன்னேறினேன். தீவிர பயிற்சியால், விரைவிலேயே, தமிழகத்திற்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. கைப்பந்தில், பந்தை மிக வேகமாக அடித்து எதிரணியை நிலைகுலையச் செய்வது என் பலம்.சக வீராங்கனை தவறு செய்தால், அதை பொருட்படுத்தாமல், உற்சாகத்தோடு விளையாடி, மற்ற வீரர்களையும் உற்சாகப்படுத்துவேன். எதிரணியினர், பந்தை அடிக்க முற்படும்போது, சில சமயங்களில் அவசரமாக தடுப்பதில், சில தவறுகள் செய்வேன்.பஞ்சாபில் நடந்த, "பஞ்சாயத் யுவ க்ருதா அவுர் கேல் அபியான்' போட்டியில், வெள்ளிப் பதக்கமும்; கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற, தேசிய மகளிர் இளையோருக்கான, "ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர்' பிரிவில், வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்றிருக்கிறேன். 2015க்குள், இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்து, சர்வதேச அளவில், நம் நாட்டுக்கு பெருமை தேடித்தர வேண்டும் என்பதே என் ஆசை, கனவு, லட்சியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக