சனி, 5 ஜனவரி, 2013

மனநலப் பாதிப்பிலிருந்து மீளலாம்!


மனநல ப் பாதிப்பிலிருந்து மீளலாம்!

மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் பாஸ்கர்: குடும்ப உறுப்பினர்களில், ஒருவரின் மனநல பாதிப்பு, பிறரின் அமைதியை, குறிப்பாக, குழந்தை வளர்ப்பை பாதிக்கச் செய்யும்.உடல் நலன் குறித்த பாதிப்புகளுக்கு தரப்படும் முக்கியத்துவத்துக்கு சற்றும் குறையாத கவனிப்பும், அனுசரணையும், மனநல பாதிப்புக்கும் அவசியம்.வாழ்க்கையில் பிரச்னைகளைச் சந்திக்காதவர்களே கிடையாது. இருந்தபோதும், மனநிலை பிறழ்வுக்கு, சிலர் மட்டுமே ஆளாகின்றனர்.அவர்கள் மூளையில், சில ரசாயன பொருட்களின் சம நிலை தவறும் போக்கு தான், இதற்குக் காரணம். மருத்துவ ஆலோசனைப்படி, மருந்து, மாத்திரைகள், கவுன்சிலிங், போதுமான உறக்கம் இவற்றின் மூலம், பாதிப்புக்குள்ளானவரின் இயல்பான வாழ்க்கையை மீட்டு அளிக்கலாம்.மன நல பாதிப்பில் உள்ளவர்கள், சிகிச்சைக்கு உடன்பட மறுப்பது வழக்கம். பொய்யாகவோ அல்லது சாக்குபோக்கு சொல்லியோ, ஓரிரு சிட்டிங்குகள், மருத்துவ சிகிச்சைக்கு அவரை உடன்படச் செய்து விட்டால், குணமடைந்ததும், அவரே உங்களைக் கொண்டாடுவார்.வயதானவர்களுக்கு, பொதுவாக, மூளை சுருங்குதல் பாதிப்பு ஏற்படும். இதனால், ஞாபக சக்தி குறையும்; கற்றுக் கொண்டது மறக்கும்.குறிப்பிட்ட மூளைப் பகுதி சுருங்குதலின் எதிரொலியாக, அது தொடர்பான உடல் பாகம், செயல்படாமல் முடங் கிப் போய் விடும். இந்த பாதிப்புகளால், வேறு வகையான மனநிலை பிறழ்வுகளும் வெளிப்படலாம்.எனவே, கவுரவம் பார்க்காமல், மூத்தோரின் மனநல பாதிப்பை கவனிக்க வேண்டும்.மன நலம் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் போது, ஒட்டுமொத்த குடும்பத்துக்கான கவுன்சிலிங்கும் தரப்படும் என்பதால், குடும்ப அமைதி நிச்சயம் மீளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக