சனி, 9 ஏப்ரல், 2011

Advise to others: ஊருக்கு உபதேசம்

தொடரட்டும் இப்போக்கு! பிற காங்.தலைவர்களும் இவ்வழியில் செல்லட்டும்! அழியட்டும் காங். ஒழியட்டும் ஊழல்! செழிக்கட்டும் தமிழினம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
ஊருக்கு உபதேசம்



மதுரையில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் இரு வேட்பாளர்களது தொகுதிக்கு பிரசாரம் செய்ய வராமல் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் புறக்கணித்தது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மதுரையில் தெற்கு, வடக்கு, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் திமுக கூட்டணியில் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மதுரைக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் செவ்வாய்க்கிழமை இரவு வந்தார்.  மானாமதுரையில் இருந்து வந்த அவர், கே.கே.நகர் பகுதி வழியாகவே மதுரைக்குள் வந்தார். அந்தப் பகுதியானது காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடும் தெற்குச் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது. ஆனால், தெற்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வரதராஜனை ஆதரித்து வாசன் பிரசாரம் செய்யவில்லை.  மதுரைக்குள் வந்த ஜி.கே.வாசன் செல்லூர் பகுதிக்கு வந்து காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே.ராஜேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மு.க.அழகிரிக்கு நெருக்கமான வேட்பாளர் என ராஜேந்திரனை குறிப்பிட்டார். காங்கிரஸôரும் திமுகவினரும் ஒற்றுமையாகத் தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். திமுக கூட்டணியில் ஒற்றுமை நிலவுவதாகவும், அதிமுக கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்றும் கூறி அதிமுகவை சாடினார்.  செல்லூரில் பிரசாரத்தை முடித்த ஜி.கே.வாசன் மற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தெற்கு, திருப்பரங்குன்றத்துக்கு பிரசாரம் செய்யச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் திண்டுக்கல் பகுதிக்கு பிரசாரம் மேற்கொள்ளப் புறப்பட்டுச் சென்றார்.  திருப்பரங்குன்றத்தில் கே.வீ.தங்கபாலு ஆதரவாளரும், தெற்குத் தொகுதியில் ப.சிதம்பரம் ஆதரவாளரும் போட்டியிடுவதால் அந்தத் தொகுதியில் பிரசாரத்தை வாசன் தவிர்த்துவிட்டதாக கட்சியினர் தெரிவித்தனர்.  நமது கட்சிக்குள்ளேயே கோஷ்டி பார்த்து பிரசாரம் செய்யும் வாசன், அதிமுக கூட்டணி ஒற்றுமையைப் பற்றி எப்படிப் பேசுகிறார் என்று காங்கிரஸ்காரர்களே கேட்டு சிரிக்கிறார்கள்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக