வியாழன், 7 ஏப்ரல், 2011

Carrot for Cancer: கேரட் சாப்பிட்டால் புற்று நோய் குணமாகும்

தமிழ்நாட்டில் தமிழ் மருத்துவ முறையில் புற்றுநோயைப் போக்கும் பல மருத்துவர்கள் உள்ளனர். ஆனால், தொடக்கத்தில் அயல் மருத்துவத்தில் நம்பிக்கை வைத்து முற்றியபின்பே தமிழ் மருத்துவத்தை நாடுவதால் நோய் கட்டுப்படுத்தப்பட்டு, பக்க விளைவின்றி வாழ்நாள் கூடும் வாய்ப்புதான் பெரும்பாலோர்க்குக் கிடைக்கிறது. தொடக்கத்திலேயே தமிழ் மருத்துவம் மேற்கொண்டால்  முழு நலன் அடைவர். எனவே, அரசு அத்தகைய மருத்துவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தவும், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டும். இம் மருத்துவ முறையை நூல் வடிவில் ஆக்கிப் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கச் செய்து உலகோர் பயனடையச் செய்ய வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கேரட் சாப்பிட்டால் புற்று நோய் குணமாகும்



லண்டன் ஏப் 6:கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பகப் புற்று முற்றாமல் காத்துக்கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  அமெரிக்காவில் ஃபுளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.  கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் "ஏ" விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும்.  கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து, சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  இது பற்றி பிலடெல்பியாவிலுள்ள ஃபாக்ஸ் சேஸ் புற்று நோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாண்ட்ரா ஃபெர்ணாண்டஸ் கூறுகையில், இந்தக் காய்களிலுள்ள சத்துக்கள் புற்று நோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்குமென்றும், நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது என்றும் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக