புதன், 6 ஏப்ரல், 2011

Soniya request to vote for her genocide achievements: சாதனைக்காக வாக்களியுங்கள்: சோனியா காந்தி பிரசாரம்

ஆமாம். உலக நாடுகளும் பன்னாட்டு அமைப்புகளும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிங்கள இன அழிப்பு முயற்சிகளைக் கண்டிக்க வந்த பொழுது அவர்களை மாற்றி அமைதி காக்கச் செய்த சாதனைக்காகவும் தமிழ் இன அழிப்பில் தானும் உதவி, வேறு நாடுகளையும் உதவச் செய்த சாதனைக்காகவும், போர்க்குற்றங்களை விசாரிக்க முனைந்தவர்களைத் தடுத்து வெற்றி கண்ட சாதனைக்காகவும், பேரினப்படுகொலை நடத்தியும் தமிழ்நாட்டில் மக்கள் ஆதரவு இல்லாத பொழுதும் பிற கட்சிகளைக் கூட்டணி வைக்கப் போட்டி போடச் செய்த சாதனைகாகவும் தமிழினப் படுகொலைகளைச் செய்த பின்பும் தமிழ்நாட்டில் அச்சமின்றி உலவும் சாதனைக்காகவும் வாக்களிக்க வேண்டுகிறார் மேலைஆரியச் சோனியா!  வாக்காளரக்ளாகிய நாம் அவரை அரசியலில் இருந்து விரட்டியடிக்கும் சாதனை புரி்வோம்!  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

சாதனைக்காக வாக்களியுங்கள்: சோனியா காந்தி பிரசாரம்




சென்னை தீவுத் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி.
சென்னை, ஏப்.5: அரசின் சாதனைகளுக்காக, வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ள கட்சிக்காக திமுக - காங்கிரஸ் அணிக்கு வாக்களியுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டார்.சென்னை தீவுத்திடலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசியது:தமிழக முதல்வர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்வதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு இந்திய அளவில் முன்னணியில் விளங்கும் மாநிலம் ஆகும். வாகன உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உள்ளது.மாணவர்களுக்கு சத்துணவு திட்டம், பெண்களுக்கு திருமண உதவி திட்டம், வயதானவர்களுக்கு ஓய்வூதியம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு செயல்படுத்தியுள்ளது. தமிழகத்தைப் பார்த்து இந்தத் திட்டங்களை பிற மாநிலங்களிலும் செயல்படுத்துகின்றனர்.தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்களுக்காக தமிழக அரசு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகிறது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசும், முதல்வர் கருணாநிதி தலைமையிலான மாநில அரசும் இணைந்து இணக்கமாகப் பணியாற்றுவதாலேயே இதுபோன்ற சாதனைகள் சாத்தியமாகியுள்ளன.தமிழகத்துக்கு மத்திய நிதி ஒதுக்கீடு 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.9,675 கோடியாக இருந்தது. 2010-11 நிதியாண்டில் இந்த ஒதுக்கீடு ரூ.17,500 கோடியாக அதிகரித்துள்ளது. தி.மு.க. அரசு இந்த மாதத்துடன் 5 ஆண்டுகளைப் பூர்த்தி செய்ய உள்ளது. மீண்டும் மாநில அரசைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்க உள்ளீர்கள். கடந்த முறை (மக்களவைத் தேர்தல்) வாக்களித்தபோது எங்களது சாதனைகளுக்காகவும், வாக்குறுதிகளை நிறைவேற்றிய கட்சிக்கும் வாக்களித்தீர்கள்.அதேபோன்று இந்த முறையும் அரசின் சாதனைகளுக்காகவும், வாக்குறுதிகளை நிறைவேற்றிய கட்சிக்கும் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.காங்கிரஸ் கட்சியின் பார்வையில் வளர்ச்சி என்பது ஏழைகள் உள்பட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ஆகும். இதே கொள்கையுடைய தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றியதால் தமிழகம் பயனடைந்துள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றார் சோனியா காந்தி.சோனியா காந்தியின் ஆங்கில உரையை மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் தமிழில் மொழி பெயர்த்தார்.தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு முன்னேற்றக் கழகத் தலைவர் "பெஸ்ட்' ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பேசினர்.இலங்கைத் தமிழர் பிரச்னைஇலங்கைத் தமிழர் பிரச்னையை மிக முக்கியப் பிரச்னையாக நாங்கள் கருதுகிறோம். இலங்கையில் மறுவாழ்வுப் பணிகளுக்காக அதிக அளவில் நிதியுதவி வழங்கியுள்ளோம். கடந்த ஓராண்டில் மறுவாழ்வுப் பணிகளில் அங்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம அந்தஸ்து மற்றும் சம உரிமை வழங்கும் வகையில் அரசியல் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டு அரசை வலியுறுத்தி வருகிறோம்.மீனவர் பிரச்னைகடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. தமிழக மீனவர்கள் இனி சுடப்படமாட்டார்கள் என்று எங்களிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம் என்றார் சோனியா காந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக