வெள்ளி, 8 ஏப்ரல், 2011

Raghul joke about cong. ruling: காங்கிரசு ஆட்சியில் நாடு அபரிமிதமான வளர்ச்சி:இராகுல்

காங்.ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி ஒன்றா? இரண்டா? எடுத்துச் சொல்ல! ஊழலில் உலக நிலையில் முதலிட வளர்ச்சி. ௨.  தேசிய இனங்களை அழிப்பதில் முனைப்பான வளர்ச்சி. ௩. வறுமை ஒழியாமல் பார்த்துக் கொள்வதில் வியத்தகு வளர்ச்சி. ௪. சில குடுமபத்தினர் மட்டும் உலகச் செல்வர்களில் முதலிடம் பெறுவதில் வானளாவிய வளர்ச்சி. ௫. கருப்புப்பணம் குவிவதில் குவலயம் போற்றும் வளர்ச்சி. ௬. அயல்நாட்டு வங்கிகளில் திருட்டுப்பணம்  பாதுகாப்பாக வைக்கப்படுவதில் பார் புகழும் வளர்ச்சி. ௭. மக்கள் நாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதில் மாபெரும் வளர்ச்சி. அடுக்கிக்கொண்டே போகும் அளவிற்கு அளவற்ற வளர்ச்சி. எனவே, வளர்ச்சிக்குப் பாடுபட்ட காங்.கிற்கு ஓய்வு கொடுப்போம்! வளம் காண்போம்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! 
/ எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


காங்கிரஸ் ஆட்சியில் நாடு அபரிமிதமான வளர்ச்சி: ராகுல்





புதுச்சேரி, ஏப். 7: காங்கிரஸ் ஆட்சியில் நாடு அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது என்று புதுச்சேரி தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி கூறினார்.  ÷புதுச்சேரி வில்லியனூரில் வியாழக்கிழமை நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:  ÷மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மூலம் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வதைத்தான் நம்புகிறது.  ÷அதன் அடிப்படையில் ஏழை மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.  ÷மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும், புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் அரசும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகின்றன. இதனால் காங்கிரஸ் ஆட்சியில் நாடு அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது.  ÷காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா 8 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதில் புதுச்சேரி 14 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும், பொருளாதார வளர்ச்சியில் ஏழைகளும் அதிக பயன்பெற வேண்டும்.  ÷பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் ஏழைகளை சென்றடையாத வரை இந்த வளர்ச்சி போதுமானதாக இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம்.  ÷அதனால் தான் அரசின் அனைத்து திட்டங்களும் ஏழைகள் மற்றும் சமூகத்தில் நலிந்துள்ள பிரிவினர்களை நோக்கி இருக்கிறது. விவசாயிகள் மேம்பாடு அடைய அவர்களின் கடன்கள் ரூ.70 ஆயிரம் கோடியை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ரத்து செய்துள்ளது.  ÷பெண்களின் நலன் கருதி உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க வழி செய்து வருகிறோம்.  ÷இந்தியாவிலேயே ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி, இயக்கத்தை நடத்தி வருபவர்கள் புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் மட்டும்தான் என்பதில் பெருமை அடைகிறேன்.  இளைஞர்களை கட்சியில் சேர்த்தால்தான் இளைஞர்களின் தேவை என்ன என்பது தெரிந்து, திட்டங்களை உருவாக்க முடியும். நாடு வளர்ச்சியடைய மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.  ÷அதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி நடக்க வேண்டும். இதனால் புதுச்சேரி வளர்ச்சி அடையும். அதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து, புதுச்சேரி வளர்ச்சிப் பாதையில் செல்ல, காங்கிரஸ் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார் ராகுல்.  ÷மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமி: புதுச்சேரி அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் புதுச்சேரி வளர்ச்சி அடைந்துள்ளது. ÷புதுச்சேரியின் வளர்ச்சி தொடர காங்கிரஸ் கூட்டணிக் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார்.  ÷முதல்வர் வி.வைத்திலிங்கம்: புதுச்சேரி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பவர் ராகுல்காந்தி. இவர் உதவியால்தான் காங்கிரஸ் அரசால் பல நலத்திட்டங்களை கொண்டு வரமுடிந்தது என்றார்.  ÷பின்னர் காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ராகுல்காந்தி அறிமுகப்படுத்தினார். புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், மாநிலங்களவை உறுப்பினர் பி.கண்ணன், காங்கிரஸ் பிரமுகர் மக்களவை உறுப்பினர் அனுமந்த்ராவ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.சங்கர், அமைச்சர்கள் எ.நமச்சிவாயம், ஷாஜகான், மு.கந்தசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


1 கருத்து:

  1. கருத்தினைத் தினமணி வெளியிடவில்லை. வாழ்க தினமணியின் நடுவுநிலைமை!

    பதிலளிநீக்கு