செவ்வாய், 5 ஏப்ரல், 2011

During D.M.K. and A.D.M.KL. regimes thamixhnadu met Retreat திமுக, அதிமுக ஆட்சியில் தமிழகம் பின்னடைவு: பொன்.இராதாகிருட்டிணன்

பேராயக்கட்சியான காங். ஆட்சியை விட அடுத்து அமைந்த இரு கழகங்கள் ஆட்சியும் பல நன்மைகளை நாட்டிற்குச் செய்துள்ளன; இருப்பினும் எதிர்பார்த்த நன்மையான தமிழ்நாட்டில் தமிழுக்கே தலைமையிடம் என்பதில் இரண்டும் கோட்டை விட்டன. அதனால்தான் இரண்டையும் எதிர்க்க வேண்டுமே தவிர, ஒட்டு மொத்தமாக ௨ கழகங்களின் ஆட்சியால் கேடு என்று கூறக்கூடாது. ஊழலைப் பொறுத்தவரை எல்லா நாடுகளிலும் உள்ளது. பேராயக் காங். கின் ஊழலை யாரும் முந்த முடியாது. எனவே, அதற்கு 2 கழகங்களை மட்டும் குற்றம் சுமத்த முடியாது. எதிர்பார்த்தவாறான நேர்மையான ஆட்சியைத் தரவில்லை என்பது உண்மைதான்.  ஆனால், காங். இருநதிருந்தால் இன்னும் மோசமாக இருநதிருக்கும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 / தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

திமுக, அதிமுக ஆட்சியில் தமிழகம் பின்னடைவு: 
பொன். ராதாகிருஷ்ணன்


களியக்காவிளை, ஏப். 3: தமிழகத்தை 44 ஆண்டுகளாக ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகள் தமிழ்நாட்டை வளர்ச்சி விகிதத்தில் பின்னோக்கிக் கொண்டு சென்றுள்ளன என பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.  கிள்ளியூர் தொகுதி பாஜக வேட்பாளர் டி. சந்திரகுமாரை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் செய்ய வந்த அவர் அதங்கோட்டில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:  ஏராளமான சாதனைகள் செய்ததாகக் கூறியுள்ளார். சலுகைகளை வாரி வழங்கி வருகிறார். இலவசங்களை ஏராளமாக அறிவித்து அவை முழுமையாகக் கொடுக்கப்படாவிட்டாலும், கொடுத்து முடித்துவிட்டதாகக் கூறுகிறார்.  அப்படியிருந்தும், திமுக தனித்து தேர்தலைச் சந்திக்க அச்சப்படுகிறது. இருமுறை முதல்வராக இருந்த ஜெயலலிதா கூட்டணி இல்லாமல் எந்தத் தேர்தலையும் சந்திக்கவில்லை.  இக் கட்சிகள் இப்போது சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துக்கொண்டு தேர்தலில் மட்டும் வெற்றிபெற முயல்கின்றனர்.  தமிழக பாஜகவுக்கு நான் தலைமையேற்ற நாள்முதல், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்ற முடிவை அறிவித்து தேர்தலைச் சந்திக்கிறோம். பாஜக நிலைப்பாட்டை மக்கள் பரிபூரணமாக ஏற்றுள்ளனர். வரும் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவோம்.  தமிழகத்தில் ஆட்சி எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை பாஜகதான் முடிவு செய்யும். இம் மாவட்டத்தில் கிள்ளியூர் உள்பட 6 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும்.  தேர்தல் முடியும் வரை இரவில் மின்வெட்டு ஏற்படாமலிருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  காவல்துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் பணம் கடத்த பயன்படுத்தப்படுகிறது என்ற செய்தி அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் சோதனையை எல்லா வாகனங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.  அதங்கோட்டில் இருந்து பிரசாரம் மேற்கொண்ட அவர் படந்தாலுமூடு, கோழிவிளை, தளச்சான்விளை, சூழால், நடைக்காவு, நித்திரவிளை, மங்காடு வழியாக இரவு விழுதலம்பள்ளத்தில் நிறைவு செய்தார்.  அவருடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்


தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூடும்போதெல்லாம் விலைவாசி ஏறிவிடுகிறது. அரசு பதவியில் கடைநிலை ஊழியர்கூட மாதம் சுளையாக குறைந்தது பத்தாயிரம் பெறமுடிகிறது. இதே தனியார் நிறுவனங்களில் கடைநிலை ஊழியர்களுக்கு இரண்டாயிரத்துக்கு மேல் போய்விட்டால் அவர் பெரும் பேறு பெற்றவர்! தனியார் நிறுவனங்களில் சம்பள ஏற்றம் என்பது அதன் லாபம் மற்றும் ஊழியரின் திறமை உழைப்பு, நடத்தை என்ற அடிப்படையில்தான் இருக்கும்; அரசு ஊழியர்கள் பலரது திறமை, உழைப்பு, நடத்தை குறித்து நான் கூறி உங்களுக்குப் புரியவேண்டிய அவசியம் இல்லை. பணிகளைப் புறக்கணித்து, அடங்க மறுத்து சாதாரண போராட்டத்தை வன்முறைக் களமாக்கிய அரசு ஊழியர்களை அடக்க அப்போது கடுமையான சட்டங்கள் தேவைப் பட்டன! அதில் தவறு காண்பவர்கள் மக்கள் விரோதிகள். ஏனினில் மக்களின் வரிப்பணம் அரசு ஊழியர்களிடமிருந்து மட்டுமே பெறப்படுவதில்லை. அரசு ஊழியர்கள் மக்களில் இரண்டு சதவிகிதம் தான். பணம், மற்றும் ஆசை காட்டி மதம் மாற்றுவது சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டே கூறிவிட்டது! அதன்படி மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தது தவறல்ல. பின்னர் அவரே அதை ஓட்டுக்காக வாபஸ் பெற்றதே தவறு!! திருமா, ரா
By முத்துக்குமார்
4/4/2011 1:06:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக