வெள்ளி, 8 ஏப்ரல், 2011

மதுரை Suit against the petitioner in collector's case: ஆட்சியருக்கு எதிராக வழக்கு: ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க மனு

இவ்வாறு வேண்டுவது ஒருவகையில் சரியாக இருக்கலாம். வேண்டுமென்றே களங்கம் கற்பிக்க யாரும் முன் வர மாடடார்கள். ஆனால், அதே நேரம் உண்மையான நேர்வுகளில் வழக்கு மன்றத்தை நாடும்  மன உறுதியை மக்கள்  இழக்கவும் வாய்ப்பு உள்ளது.  மேலும் இந்த வழக்கு சத்தியவாணிக்கு எதிரானதா? அழகிரி தொடுக்கப் போகும் வழக்கிற்கு எதிரானதா?  இவற்றையெல்லாம் வழக்கின்போது நீதிபதிகள் கூர்ந்தாய்ந்து முடிவெடுக்க வேண்டுமே தவிர மற்றொரு வழக்குப் பதிவின் மூலம் நீதிபதிகளுக்கு அறிவுறுத்தக்கூடாது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


மதுரை ஆட்சியருக்கு எதிராக வழக்கு: ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க மனு



சென்னை, ஏப். 7: மதுரை ஆட்சியருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ. 5 லட்சத்துக்கும் குறையாமல் அபராதம் விதிக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மதுரையைச் சேர்ந்த சத்தியவாணி என்பவர் "மதுரை மாவட்ட ஆட்சியர் யு. சகாயம் பொதுக் கூட்டங்களில் தேர்தல் மூலம் மாற்றம் வர வேண்டும்' என்று பேசியதாகவும், அதனால், அவரைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந் நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. ரத்தினம் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பது:  மதுரை மாவட்டம் மிகவும் மோசமான நிலையைச் சந்தித்து வருகிறது. அங்குள்ள மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையர் ஆகியோர் சிறப்பாக தங்கள் பணிகளைச் செய்து வருகின்றனர். அவர்களின் பணியைக் கெடுக்கும் நோக்கில் சிலர் வேண்டுமென்றே அவர்கள் மீது அற்பமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர்.  இப்போது இந்த நீதிமன்றத்தில் ஆட்சியருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவும் அந்த வகைதான். அந்த மனுவை பொது நலன் மனு என்று கூறுவதற்கு போதிய முகாந்திரம் இல்லை. மனுதாரர் தனது செயல் மூலம் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளார். அதற்காக, அவருக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறையாமல் அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக