சனி, 13 ஏப்ரல், 2013

3 தமிழர்களைக் காக்க வேண்டும்: இராமதாசு

3 தமிழர்களை க் காக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: இராமதாசு

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தில்லியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவிந்தர் பால் சிங் புல்லார் என்பவர் தமது கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தும் தீர்ப்பளித்திருக்கிறது.
தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி தாம் தாக்கல் செய்த கருணை மனுவை 8 ஆண்டுகள் கழித்து தள்ளுபடி செய்தது தவறு என்றும், 8 ஆண்டுகளுக்கும் மேலாக தூக்குக்கயிற்றின் நிழலில் சிறையில் கடும் வேதனையையும், மன உளைச்சலையும் அனுபவித்த தமக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் கூறித் தான் புல்லார் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், கருணை மனு மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்யப்பட்டதை கருத்தில் கொள்ளாமலேயே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தவறு என்றும், கருணை மனு மீது முடிவெடுப்பதில் செய்யப்பட்ட கால தாமதத்தை நீதிபதிகள் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எஸ். சோதி உள்ளிட்ட சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புல்லாரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதால், அதே காரணத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும்  பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களின் மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும் ஆபத்துள்ளது. பாலாறு குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர், தருமபுரி பேரூந்து எரிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட மூவர் ஆகியோர் தொடர்புடைய வழக்கிலும் இந்தத் தீர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த நிலையில் மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்றுவது தமிழக அரசின் கைகளில் தான் உள்ளது.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கடந்த 2011-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதேபோன்று அரசியல் சட்டத்தின் 161- வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மூவரின் தூக்கு தண்டனையை தமிழக ஆளுனர் ரத்து செய்ய வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றுவதன் மூலம் 3 தமிழர்களையும்  காப்பாற்ற முடியும். அரசியல் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மூவரின் தூக்கு தண்டனையை தமிழக ஆளுனர் ரத்து செய்யும் பட்சத்தில் அதில் யாரும் தலையிட முடியாது. எனவே, தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக அமைச்சரவையை கூட்டி ,தீர்மானத்தை நிறைவேற்றி பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று தமிழர்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டும்.
அதுமட்டுமின்றி, உலகில் சுமார் 125 நாடுகளில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், அந்த நாடுகளை பின்பற்றி இந்தியாவிலும் தூக்கு தண்டனையை ஒழிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துவதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

இணையப்பதிவில் 22 இலட்சம் மாணவர் விவரம் இல்லை.




இணையப்பதிவில்  22 இலட்சம் மாணவர் விவரம் இல்லை.
தமிழகத்தில், அனைத்து பள்ளி மாணவர்களின் விவரங்களையும், ஆன் -லைனில் பதிவேற்றம் செய்யும் பணி முடிவடைந்துள்ளது. இதில், 22 லட்சம் மாணவர்களின் விவரங்கள் விடுபட்டுள்ளன.

நகர்ப்புறங்களில்...: தமிழகத்தில், சமீப காலமாக, அரசு துவக்கப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையில், கடும் சரிவு இருந்து வருகிறது. அதிலும், நகர்ப்புறங்களில் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஒற்றை இலக்கங்களில், மாணவர் எண்ணிக்கையை கொண்டு இயங்கும் நிலையில் உள்ளன. மாணவர் எண்ணிக்கை குறையும் பள்ளிகளில், மாணவர் - ஆசிரியர் விகிதத்தை கணக்கிட்டு, ஜூனியர் ஆசிரியர்கள், இடமாற்றம் செய்யப்படுகின்றனர். நகர்ப் பகுதிகளில் வசிக்கும் ஆசிரியர்கள், அதே பள்ளியில் நீடிக்கவே விரும்புகின்றனர். இதனால், மாணவர் எண்ணிக்கை குறைந்தாலும், அவற்றை, கணக்க ஏடுகளில் குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர். பள்ளி கணக்கேடுகளில், 30 மாணவர் இருந்தாலும், உண்மையில், அந்த பள்ளிக்கு, 15 மாணவர்கள் மட்டுமே, வந்து கொண்டிருப்பர். இந்த நிலை, பல அரசு பள்ளிகளில் காணப்படுகிறது. இப்படி கள்ளத்தனமாக காட்டப்படும் மாணவர்களுக்கான சலுகைகளை,

மற்றும் தகவல் தொகுப்புக்காக, அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள், பங்கிட்டுக் கொள்ளும் நிலை உள்ளது. கடந்த ஆண்டில், கல்வி தகவல் மேலாண்மை முறை மாணவர் விபரங்களையும், படிவங்களில் சேகரித்து, அவற்றை, ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய, உத்தரவிடப்பட்டது. இப்படிவத்தில், ஒவ்வொரு மாணவரின், ஜாதி, மதம், பிறந்த தேதி, ரத்த வகை, போட்டோ உள்ளிட்ட, 36 வகையான தகவல்கள் கேட்கப்பட்டிருந்தன.

தனியார் பள்ளிகள்:
ஒவ்வொரு பள்ளிக்கும், தனித்தனியே, "யூசர் ஐடி' மற்றும், "பாஸ்வேர்டு' வழங்கி, அனைத்து விவரங்களையும், "ஆன்லைனில்' பதிவேற்ற உத்தரவிடப்பட்டிருந்தது. இதில், தனியார் பள்ளிகளும், மாணவர்கள் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்வதால், தனியார் பள்ளியில் சேர்ந்திருந்தாலும், அரசு பள்ளியிலேயே கணக்கில் வைத்திருக்கும், "போலி' மாணவர்கள் விவரங்களை, பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. விபரம் சரிபார்க்கும் போது, மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதால், உண்மையில் பள்ளிக்கு வரும் மாணவர்களது விவரங்களை மட்டுமே, ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது இந்த பணி முடிவடைந்துள்ளது. கணக்கு ஏடுகளில், 1.35 கோடி மாணவர்கள் உள்ள
Advertisement
நிலையில், 1.13 கோடி மாணவர்களின் விபரம் மட்டுமே, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

போலி பட்டியல்: கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது: ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டதால், போலி மாணவர் பட்டியலை, தொடர்ந்து கண்டுபிடிக்க முடியாத நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மாட்டிக் கொள்ள நேரிடுமோ என்ற பயத்தில், 22 லட்சம் பேரின் விபரங்களை ஆசிரியர்கள் பதிவு செய்யவில்லை. அதே நேரம் ஒரு சில ஆசிரியர்கள், "டபுள் என்ட்ரி' ஆனாலும் பரவாயில்லை என, போலி பட்டியலையும் பதிவு செய்துள்ளனர். இவற்றை சரி செய்யும் போது, இன்னும் பல லட்சம் மாணவர்கள் விடுபடும் நிலை உள்ளது. தனியார் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இப்பிரச்னை இல்லை. தற்போது, இவற்றை சரி செய்ய, மீண்டும் ஒரு வாய்ப்பு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஆன்லைனில் உள்ள விவரங்களை, துல்லியமாக ஏப்ரல், 18ம் தேதிக்குள் சரி பார்க்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இவை நிறைவடையும் நிலையில், பள்ளிகளில் உண்மையில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, துல்லியமாக தெரியவரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.



- நமது செய்தியாளர், தினமலர் -

கடை நடத்தும் ஒலிம்பிக் வீராங்கனை

சாலையோர கடை நடத்தும் ஒலிம்பிக் வீராங்கனைஎன்னும் தலைப்பில் ஏப்.11 இல் செய்தி வெளியிட்டுள்ளீர்கள். இப்பொழுது  அதே செய்தி கூடுதல் விவரங்களுடன். இவ்வாறு அவ்வப்பொழுது ஒரே செய்தி இரு வகையில் வெளி வருகிறது. முதல் செய்தியிலேயே  சேர்க்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட விவரங்களைச் சேர்த்து வெளியிடலாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/



ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கியவர் பானிபூரி கடை நடத்துகிறார்



ரேவா: மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களை பெற்றுத் தந்த வீராங்கனைக்கு, நமது ஆட்சியாளர்கள் அறிவித்தபடி, உதவிதொகை கிடைக்கவில்லை. இதனால், வாழ்க்கையை ஓட்ட, சாலையோரம் பானிபூரி விற்கும் நடைபாதை கடையை நடத்தி வருகிறார்.

மாற்றுத் திறனாளி: மத்திய பிரதேச மாநிலம், ரேவாவைச் சேர்ந்த சீதா சாகு, ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். மாற்றுத் திறனாளியான இவர், ஏதென்சில், 2011ல் நடந்த, சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். 200 மீ, 1,600 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், வெண்கலப் பதக்கங்கள் வென்றார். இது, இவருக்கு பெரும் மகிழ்ச்சியையும், தொடர்ந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையையும் ஏற்படுத்தியது. இந்தியா திரும்பியதும், தான் பெற்ற பதக்கங்களுடன், ம.பி., மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை சந்தித்து பேசினார். சீதாவின் சாதனையை பாராட்டிய சவுகான், அவருக்கு தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதி அளித்தார். இதனால், மிகுந்த நம்பிக்கையுடன் வீடு திரும்பிய சீதா, அரசிடம் இருந்து உதவி வரும் என, எதிர்பார்த்து காத்திருந்தார். சர்வதேச அளவில், ஒலிம்பிக் போட்டி உட்பட முக்கிய போட்டிகளில், பதக்கம் பெறும் ம.பி., மாநிலத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு, பரிசுப்பணம் வழங்கப்படும் என, மாநில சமூக நீதி துறை அமைச்சர் கோபால் பார்கவா அறிவித்து இருந்தார். அவரது அறிவிப்பின்படி பார்த்தாலே, சீதா சாகுவுக்கு, 50 ஆயிரம் வீதம், ஒரு லட்ச ரூபாய் பரிசு பணமாக கிடைத்து இருக்கவேண்டும்; அதுவும்

கிடைக்கவில்லை.

கணவர் சரியில்லை: அரசின் உதவியும் கிடைக்கவில்லை; சீதாவின் கணவரும், குடும்பத்தை காப்பாற்றும் நிலையில் இல்லாததால், குடும்ப கஷ்டத்தை போக்க, சீதா ஏதாவது செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். கடைசியில், சாலையோரம், பானிபூரி விற்கும் கடையை துவக்கி நடத்தி வருகிறார். இதில், கிடைக்கும் வருமானமும் போதுமானதாக இல்லாததால், மற்ற தின்பண்டங்களையும் விற்க முயன்று வருகிறார். உதவுவதாக உறுதியளித்த ஆட்சியாளர்களிடம் இருந்து, உதவி கிடைக்காததால், சீதா விரக்தி அடைந்துள்ளதாக அவரது தாயார் கூறினார். மேலும் அவர் கூறுகையில், ""பதக்கம் வென்றவர்களுக்கு, மாநில அரசு சார்பில், நியாயமா கிடைக்க வேண்டிய, ஒரு லட்ச ரூபாய் கிடைத்தால், சீதா தன் வியாபாரத்தை விரிவுப்படுத்த வசதியாக இருக்கும். இதை பார்த்த பிறகாவது, ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும்,'' என்றார். 

 சாலையோர க் கடை நடத்தும் ஒலிம்பிக் வீராங்கனை


போபால்: மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலப்பதங்கங்களை வென்ற சீதா சாஹூ, தற்போது சாலையோர கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2011ம் ஆண்டு கிரீஸ் தலைநகர் ஏதென்சில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீராங்கனை சீதா சாஹூ, 200 மீட்டர் மற்றும் 1600 மீட்டர் தடகளப் போட்டியில் பங்கு பெற்று வெண்கலப்பதக்கங்களை பெற்றார். இதையடுத்து அவருக்கு அரசு பல்வேறு உதவிகளை அறிவித்தது. எனினும் அறிவிக்கப்பட்ட எந்த உதவிகளும் இதுவரை சீதாவுக்கு சென்றடையவில்லை. இதனால் விரக்தியடைந்த சீதா, தனது வறுமையை போக்கிக் கொள்ள தற்போது சாலையோர கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தியாவில் விளையாட்டு வீரர்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதற்கு ஒரு சாட்சியாக இருந்து வருகிறார் சீதா.

பசுமை 90.4 பண்பலை வானொலி




பசுமை 90.4  பண்பலை வானொலி வானொலி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும், "அமைதி' அறக்கட்டளையின் தலைவர், பால்பாஸ்கர்: நான், திண்டுக்கல் மாவட்டத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். 1984ல், அமைதி அறக்கட்டளையை நிறுவி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, சுற்றுச்சூழல் மாசு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, விவசாயமும் செய்து வந்தேன். திண்டுக்கல்லில், விவசாயமே முக்கிய தொழில். சுற்றியுள்ள சமவெளி மற்றும் மலைப் பகுதிகளில், காப்பி, தேயிலை, காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றை, பிரதானமாக விவசாயம் செய்தனர். இது, குறைந்தளவே மழை பெய்யும் மாவட்டம். குடகனாற்றுத் தண்ணீரும், விவசாயத்திற்கு போதுமானதாக இல்லை. இங்குள்ள மக்களிடம், விவசாயம் பற்றிய சரியான புரிதல் இல்லாததால், வறண்ட நிலத்தில், நீரை அதிகம் உறிஞ்சக்கூடிய நெல், வாழை போன்ற, தவறான பயிர்களை பயிரிட்டதாலும், உடனுக்குடன் விவசாயம் தொடர்பான சந்தை நிலவரங்களை அறிய முடியாததாலும், அதிக நஷ்டம் அடைந்தனர். ஓரளவு வசதியான குடும்பம் என்பதால், நான் பாதிப்பிலிருந்து தப்பினாலும், அந்த ஏழை விவசாயிகளின் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு, விவசாயம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தரவும், விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அமைதி அறக்கட்டளை மூலம், சிறுமலை என்ற இடத்தில், 2007ல், "பசுமை 90.4 எப்.எம்.,' என்ற சமுதாய வானொலியை, எந்தவித லாப நோக்கமும் இன்றி துவக்கினேன். ஆரம்பத்தில், திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, வெறும், நான்கு மணி நேரம் மட்டுமே தகவல்களை ஒலிபரப்ப முடிந்தது. பின், விவசாயிகளிடமிருந்து வரவேற்பு அதிகரித்ததால், தற்போது, திருச்சி, கரூர், திருப்பூர், மதுரை போன்ற மாவட்டங்களுக்கும், காலை, 6:00 மணி முதல், இரவு, 12:00 மணி வரை, தினமும், 18 மணி நேரம், விவசாயம் தொடர்பான செய்தி மற்றும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறோம். தொடர்புக்கு: 94433 41082.

NZ Intelligence alleged of monitoring former Green MP

NZ Intelligence alleged of monitoring former Green MP for involvement in Tamil question

[TamilNet, Thursday, 11 April 2013, 16:50 GMT]
New Zealand's Security Intelligence Service (SIS), which is part of the so-called Five Eyes intelligence network, comprising the intelligence agencies of Australia, Canada, Britain and the USA, was alleged of monitoring former Green party politician Keith Locke, who has been sympathetic to the Tamil cause. Mr Locke believes the SIS began covert operations on him in 2003, when he travelled to Sri Lanka, reports The Dominion Post. The former Green Party politician has demanded apology for illegal spying and that all 88 New Zealanders who were being spied on should be notified if the Government Communications Security Bureau (GCSB) has illegally snooped on them.

In 2003, following the ceasefire agreement between the LTTE and the GoSL, Mr Keith Locke, travelled to the country of Eezham Tamils and met the political leadership of the LTTE.
New Zealand MP meets LTTE
Mr. Keith Locke, MP, Green Party, New Zealand meeting LTTE Political Head Mr S. P. Thamilchelvan in 2003 at Ki'linochchi [TamilNet File photo]


Blaming the international community for its failure, Mr Keith Locke, in June 2009 said the following at the New Zealand parliament:
Keith Locke
Mr Keith Locke
“While I was in the Liberation Tigers of Tamil Eelam capital of Kilinochi, a Tamil proposal for an interim self-governing authority was presented to the Norwegian peace negotiators and was covered by the international media, but substantive discussions on an autonomy solution never eventuated.

“There was probably blame on both sides for that, but most damaging was the failure of the international community to keep the pressure on the Sri Lankan Government to go down the negotiating track and to not resort to war again. To do this, the international community should have consciously taken the conflict out of the context of the Government on one side and the terrorists on the other.”

“During the 2002-2005 ceasefire, the Liberation Tigers of Tamil Eelam was made a legal organisation by the Government of Sri Lanka and could freely operate anywhere in that country, yet the US, British, and Australian Governments kept their designations of the Liberation Tigers of Tamil Eelam as a terrorist organisation and the European Union added the Liberation Tigers of Tamil Eelam to its terrorist list. Of course, it is true that the Tamil Tigers have engaged in terrorist actions in the past, including political assassinations, and so has the Sri Lankan Government on an even larger scale according to the statistics of civilian deaths in the reports of human rights monitors like Amnesty International.”

* * *

The GCSB operates wiretaps, intercepts email traffic and monitors other interactions such as internet message boards, another report by The Dominion Post said.

Security analyst and former US spy Paul Buchanan told the paper that the information of any significance would be passed to the other partners in the Five Eyes intelligence network.
Waihopai Spy Base
Waihopai Spy Base
New Zealand houses a spy base, named Waihopai Spy Base, which is said to be part of a US-led worldwide network of spy stations, known as Echelon.

The government had promised the New Zealanders in 1989 during the launch of the Waihopai Spy Base that this secretive station would not be used to spy on New Zealanders.

The Echelon spy system is said to be capable of capturing and analysing ‘virtually every phone call, fax, email and telex message sent anywhere in the world’, according to Patrick S. Poole, a lecturer in government and economics at Bannockburn College in Franklin, Tennessee, USA, who previously served as deputy director of the Center for Technology Policy in Washington, DC.

It remains to be seen whether this network was deployed by an intelligence network of the International Community of Establishments (ICE) in crushing the armed struggle of the Eezham Tamils.

Related Articles:
13.12.12   New Zealand politicians, Peoples Forum mean action on Sri La..
19.08.11   Sri Lanka’s Killing Fields screened in New Zealand parliamen..
24.07.11   Colombo is not conducive to reconciliation or co-existence: ..
16.07.11   Prime Minister criticized in New Zealand’s parliament over T..
17.05.11   New Zealand MP questions compromising stand on UN report
25.06.09   Colombo’s concentration camps compared with Hitler’s in NZ p..
30.07.06   Recognize Tamil rights, or risk CFA collapse- NZ MP
29.05.06   New Zealand MP, HR activists address fasting Tamils
29.10.03   Aussie MP meets Jaffna LTTE political head


External Links:
The Dominion Post: John Key defends stand on spy agency activities
The Dominion Post: Public trust betrayed by spies
3d new zealand.com: Waihopai Spy Base (Satellite image)
The Dominion Post: Locke pushes for reveal of GCSB spying info

வியாழன், 11 ஏப்ரல், 2013

Tamil genocide framework highlighted in Slovenia Conference

Tamil genocide framework highlighted in Slovenia Conference

[TamilNet, Thursday, 11 April 2013, 11:14 GMT]
The framework of genocide carried by Colombo on Eelam Tamils is featured in a poster presentation at the Slovenia conference on R2P being held in the Faculty of Law, University of Lkubljana, Thursday by Tamils Against Genocide [TAG], a US-UK based activist organization, the conference details reveal. More than 80 speakers and poster presenters from almost 40 states and international institutions will discuss issues regarding R2P in 2 parallel panels each day, according to the conference program.

PDF IconTAG's Tamil Genocide Poster to be
presented at the conference
TAG's poster outlines how the failure of United Nations doctrine, Responsibility to Protect failed in Sri Lanka, and points out the Petrie report statement:
    “The concept of a ‘Responsibility to Protect’ was raised occasionally during the final stages of the conflict, but to no useful result. Differing perceptions among Member States and the Secretariat of the concept’s meaning and use had become so contentious as to nullify its potential value. Indeed, making references to the Responsibility to Protect was seen as more likely to weaken rather than strengthen UN action. The events in Sri Lanka highlight the urgent need for the UN to update its strategy for engagement with Member States in situations where civilian populations caught up in the midst of armed conflicts are not protected in accordance with international human rights and humanitarian law.”
Asserting that Genocide is "Clear and Uncontestable grounds for R2P," TAG's statement lays out the present state of affairs, as:
    Enduring Militarization. Rejection of a political solution. Lack of accountability. Cultural genocide. Demographic reconfiguring.

    TAG research (‘Returnees at Risk’ and ‘Activist Intimidation’) has identified that the GoSL defines ‘traitor’ and ‘terrorist’ broadly to include both those who call for accountability for crimes committed before during and after Eelam IV, and those who are considered to bring Sri Lanka into international disrepute, such as asylum seekers and protesters. Commensurate with its assessment of the threat, the GoSL allocates resources to collecting (both through surveillance and interrogations) and then acting upon that threat.

    The International Community mirror Sri Lankan rhetoric and reasoning, and vice versa, and are appeased by talk of Counter – Terrorism, Development and Reconciliation.
and says, that the State is the problem,
    The fetishisation of the State. The bias towards the State. The presumptions regarding a State.

    The near infallibility of an existing State and the reluctance to recognise new States.

    The sacred cow of “Sovereignty”, then and now. There were a myriad of reasons for the reluctance to intervene in 2009 and today, including considerations of humanitarian access, the hope for diplomacy but also geo-political, strategic and national interest concerns.
and concludes:
    Recognise that this is an on-going situation not an historical case study.

    Through adoption of a post colonial critique, dispense with attempts to’solve’ that apply universal prescriptions without consideration of local specificities.

    Demand as the first step an International Independent inquiry that embraces the historical context in order to expose the scale of the crimes by the State, both historic crimes and on-going human rights violations.
TAG-UK's Henrietta Briscoe is presenting the information at the poster session, according to TAG.

External Links:
Slovenia: R2P Conference

தினமணி இணையத் தாள்: புதிய வடிவில்!

என்ன வந்து என்ன? தினமணிச் செய்தியைப் பகிர்வதற்காக இணைப்பை  அளித்தால், அந்த இணைப்பில் இருந்து மூலச் செய்தியைப் படிக்க முடிவதில்லை. பகிரும் பொழுது படங்களின் மேலேயே எழுத்துகள் பதிகின்றன. மதியின் படம் போன்றவை எல்லாம்  அன்றாடம் இடம் பெறுவதில்லை. அதில் என்ன சிக்கல் என்று புரியவில்லை.
கருத்துகளைப்பதியும் பொழுது முந்தைய முறை மாறிய பின்பு மிகவும் தாழ்ச்சியாகத்தான்  பதிவு இடம்  பெறுகிறது. இது வாசகர்களுக்குச் சலிப்பைத் தருகிறது. சிறந்த கருத்துகளைத் தினமணி வெளியிட்ட பொழுது ஐந்திற்கு ஐந்தும் என் கருத்து இடம் பெற்றுள்ளது. இருப்பினும் நான், இனத்தைக்காப்போம் என்னும் முழக்கத்தை இறுதியில் இடுவதால் அதன்பின், பெரும்பாலான கருத்துகள் இடம் பெறுவதில்லை. தப்பித் தவறி ஒன்றிரண்டு எப்பொழுதாவது வருகிறது.
இன்று கருத்துகளைப் பதியும் பொழுது

மன்னிக்கவும்!

நீங்கள் தேடிய பக்கம் கண்டடையப்படவில்லை; பக்கம் இல்லை அல்லது மாற்றலுக்கு உள்ளாகியிருக்கும்.
தயவுசெய்து நீங்கள் உள்ளீடு செய்த வலைத்தள முகவரியை சரிபார்க்கவும்.
என வருகிறது.
இப்படிக் குறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். தினமணி ஆசிரியரும் வெளியீட்டாளரும் இதில் கருத்து செலுத்த வேண்டும்.  வாசகரைப் போன்று வேறு முறையில் இவ்விதழ்ச் செய்தியைப் படித்தும் பகிர்ந்தும் பார்க்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தினமணி இணையத் தாள்: முற்றிலும் மாறுபட்ட புதிய வடிவில்!










தினமணி இ-பேப்பர் இன்று முதல் முற்றிலும் மாறுபட்ட புதிய வடிவில் படிக்கக் கிடைக்கிறது.
வாசகர்களின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப, தினமணி- புது தில்லி, சென்னை, வேலூர், மதுரை, திருநெல்வேலி, கோயமுத்தூர், திருச்சி, தருமபுரி ஆகிய தினமணியின் 8 பதிப்புகளும் இணையத்தில் இலவசமாகவே படிக்கக் கிடைக்கும்.
இதனுடன் இன்று முதல், முதல்முறையாக தினமணிக் கதிர், சிறுவர் மணி ஆகிய இணைப்பு புத்தகங்களும், வெள்ளி மணி, கொண்டாட்டம் ஆகிய பக்கங்களும் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் வகையில் அலமாரியில் அடுக்கி வைத்ததுபோன்ற தோற்றத்தில் இணையத்தில் அளிக்கப்படுகிறது.
தினமணி இ-பேப்பர் படிக்க...
இங்கே க்ளிக் செய்யவும்: லிங்க்

கடவுச் சொல்லை நினைத்தாலே கணிணியை இயக்கும்


கடவுச் சொல்லை  நினைத்தாலே  கணிணியை இயக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
டோக்கியோ, ஏப். 11-

ஒவ்வொரு இணையதள தொடர்பிற்கும், ஒவ்வொரு பாஸ்வேர்ட் உபயோகப்படுத்தப்படும். சிலர் பாதுகாப்பு கருதி அடிக்கடி தங்களின் பாஸ்வேர்டை மாற்றிக் கொண்டிருப்பார்கள். வளர்ந்து வரும் விஞ்ஞானத்தின் புதிய தொழில்நுட்பமாக பாஸ்வேர்டை டைப் செய்வதற்குப் பதிலாக மனதில் நினைப்பதன் மூலமே நமது தகவல் தொடர்பினை இயக்க முடியும். 

யு.சி.பெர்க்லி ஸ்கூல் என்ற ஆராய்ச்சி மையம், இதுகுறித்த செய்முறையை நடத்தி காட்டியுள்ளது. இம்மையத்தின் பேராசிரியர் ஜான் சுவாங், ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா நகரில் நடைபெற்ற, பதினேழாவது தகவல் பாதுகாப்பு மற்றும் ரகசியக் குறியீடு எழுத்து குறித்த கருத்தரங்கில், இந்த ஆராய்ச்சியின் அறிக்கையை சமர்ப்பித்தார். அவருடைய குழுவினர், ஈஈஜி சென்சார்கள், புளூடூத் மற்றும் தலையணைக் கருவி உபயோகிப்பதன்மூலம் இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை அங்கு செயல்படுத்திக் காட்டினார்கள்.

சமீபகாலமாக, ஆராய்ச்சிகளில் பாதுகாப்பு கருதி விஞ்ஞானிகள் இம்முறையை பயன்படுத்துகின்றனர். மற்ற உடற்புள்ளியியல் முறைகள் போலவே, இம்முறையும் சிக்கலான, விலை உயர்வான பயன்பாடுகளைக் கொண்டது. ஆனால் பாதுகாப்பான, துல்லியமான மற்றும் மீண்டும் கையாளக்கூடிய விதத்திலும் அமைந்திருப்பது இம்முறையின் சிறப்புகள் என்பது இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

தமிழக அரசின் சித்திரைப் புத்தாண்டுத் திருநாள் விருதுகள்

தமிழக அரசின் சித்திரை ப் புத்தாண்டுத் திருநாள் விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசின் சித்திரை புத்தாண்டுத் திருநாள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்த அரசின் அறிவிப்பு:
‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்த தமிழ்’ என்னும் பழமையுடைய, இலக்கிய வளம் நிறைந்த தமிழ் மொழியைப் பேசுபவர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வந்துள்ளதைக் கருத்தில் கொண்டும், ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் சித்திரைத் திங்கள் முதல் நாளை மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தார். 2012 ஆம் ஆண்டில் சிறந்த தமிழமைப்புக்கு தமிழ்த்தாய் விருதும் சிறந்த தமிழறிஞர்களுக்கு  கபிலர் விருதும், உ.வே.சா. விருதும் வழங்கப்பட்டன.
தில்லி தமிழ்ச்சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது:
* 2013 ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான  தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 இலட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும்  வழங்கப்படும்.
கபிலர் விருது: கவிஞர் முத்துலிங்கம்
கபிலர் விருது, தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மரபுச் செய்யுள்/கவிதைப் படைப்புகளைப் புனைவதில் ஆற்றல் மிகுந்த கவிஞர் முத்துலிங்கத்துக்கு வழங்கப்படவுள்ளது.
உ.வே.சா விருது: ம.வே.பசுபதி
உ.வே.சா. விருது ஓலைச் சுவடிகள், அரிய கையெழுத்துப் படிகள், கிடைத்தற்கரிய நூல்களைத் தொகுத்து தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் பதிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் பேராசிரியர் ம.வே.பசுபதிக்கு வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக கம்பர் விருது: பால.ரமணி
இத்தமிழ்ப்புத்தாண்டு முதல் ஆண்டுதோறும் கம்பராமாயணத்தின் உயரிய கருத்துக்களைப் பரப்பும் சிறந்த அறிஞருக்கு கம்பர் விருதும் சிறந்த இலக்கியப் பேச்சாளருக்கு சொல்லின்செல்வர் விருதும் வழங்கப்படும் என ஆளுநர் அவர்களின் உரையில் தெரிவிக்கப்பட்டது. 
இந்த ஆண்டிற்கான கம்பர் விருது முனைவர் பால.இரமணி, சொல்லின்செல்வர் விருது முனைவர் ம.லோகநாயகி ஆகியோருக்கும் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக  ரூபாய் 1 லட்சமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதிச் சான்று மற்றும் பொன்னாடையும் முதல்வரால் 15.4.2013 அன்று வழங்கப்படும்.
சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்வியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள சித்திரை தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழா முதல்வரால் காணொலிக் காட்சியின் மூலம் தொடங்கி வைக்கப்படும்

நினைவாற்றலையும் கற்றுத் தரலாம்!





நினைவாற்றலையும் கற்றுத் தரலாம்!

இந்தியாவிலேயே முதல், "கிராண்ட் மாஸ்டர் ஆப் மெமரி சாம்பியன்' பட்டம் வென்ற, ஜான் லூயிஸ்: நான், திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவன். பள்ளியில் படிக்கும் போதே, ஆசிரியர்கள் சொல்வதை காதில் உள்வாங்கி, படிக்கக் கூடிய ஒவ்வொன்றையும் தொடர்புபடுத்தி, மனதில் காட்சிகளாக உருவகப்படுத்தி, மனப்படமாக படித்ததால், எதுவும் மறக்காமல், பாடங்களைஎளிதில் நினைவில் பதிய வைத்தேன்.டால்மியா அரசு உதவி பெறும் பள்ளியில், 14 ஆண்டுகளாக, வேதியியல் ஆசிரியராக பணியாற்றிய போது, பிளஸ் 2 பொதுத் தேர்வில், வேதியியல் பாடத்தில், யாரும் தோல்வியடைந்தது இல்லை. இதற்கு, என்னைப் போலவே மாணவர்களையும் மனப்பாடம் செய்ய விடாமல், காட்சிகளாக உருவகப் படுத்தி, மனப்படமாக படிக்கும் முறையைச் சொல்லி தந்ததேகாரணம்.மனப்படமாக காட்சி படுத்தும் திறன் இருந்த தால், செஸ் போட்டியைப் போலவே, மூளைக்கு வேலை கொடுக்கும் போட்டிகளில் பங்கு பெறஆர்வம் ஏற்பட்டது. 2001ம் ஆண்டு,சென்னையில் நடந்த, ஆசிய அளவிலான, மெமரி ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப்போட்டியில் பங்கு பெற்று, முதல் போட்டி யிலேயே, சாம்பியன் பட்டத்தை வென்றேன்.

இங்கிலாந்தில், 2002ல் நடந்த, உலகளவிலான மெமரி போட்டியில் பங்கேற்று, ஆறாம் இடம் பெற்றேன். 2003ல், மான்செஸ்டரில் நடந்த போட்டியில், "கிராண்ட் மாஸ்டர் ஆப் மெமரி சாம்பியன்' பட்டத்தை வென்றேன். இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியன், நான் தான்.இப்போட்டியில், ஏறு வரிசை, இறங்கு வரிசை என, வரிசை எண்களாக இல்லாமல், "ரேண்டம்' முறையில், மனம் போன போக்கில் திரையில் அடுக்கப்பட்ட எண்களை பார்த்துவிட்டு, குறைந்தது, 713 அடுக்கப்பட்ட எண்களை, தவறாமல், அதேவரிசைப்படி ஒரு மணி நேரத்தில் சொல்ல வேண்டும் என, மூன்று விதமான போட்டிகள் நடைபெறும். இதில் ஏதேனும் சிறு தவறு செய்தால் கூட, போட்டியிலிருந்து வெளியேற வேண்டும். நினைவாற்றலையும், ஒரு படிப்பாக சொல்லித் தரலாம். தொடர்புக்கு: 97153 33175.