புதன், 26 மே, 2010

முல்லைத் தீவுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை': இலங்கை ராணுவம்


'முல்லைத் தீவுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை': இலங்கை ராணுவம்



கொழும்பு, ​​ மே 25: முல்லைத் தீவு பகுதிக்குச் செல்ல பொதுமக்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.முல்லைத் தீவில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும்,​​ அப்படி யாரேனும் செல்ல விரும்பினால் பாதுகாப்பு அமைச்சகத்தில் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கருத்துக்கள்

முல்லைத் தீவு செல்ல தமிழ்ஈழ அரசின் குடிபுகுவு உரிமை தேவை எனச் சிங்கள அரசு கருதுகிறது போலும்! அப்படியாயின் சரியான முடிவு. விரைவில் அந்நாள் மலரட்டும்!

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 3:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தாய் மொழியில் தடுமாறலாமா?


இன் ​றைய நாளில் பள்​ளி​க​ளில் தமி​ழின் நிலை,​​ தமிழ் கற்​பிக்​கும் முறை​கள்,​​ தமிழ் மொழி​யில் மாண​வர்​க​ளின் நிலை இவை​க​ளைப் பார்க்​கும் போது சில கசப்​பான உண்​மை​களை இங்கே வெளிப்​ப​டுத்த வேண்​டி​யுள்​ளது.​கல் ​வித்​து​றை​யில் ஒரு புள்ளி விவ​ரம் கேட்​கப்​ப​டு​கி​றது.​ அது என்​ன​வென்​றால் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை எத்​தனை மாண​வர்​க​ளுக்கு தமிழ் எழுத,​​ படிக்​கத் தெரி​ய​வில்லை,​​ எத்​தனை மாண​வர்​கள் சுமா​ராக எழு​தப் படிக்​கக் கூடி​ய​வர்​கள் என்ற விவ​ரங்​க​ளைக் கேட்​கி​றார்​கள்.​ பத்​தாம் வகுப்​புக்கு வந்​தும் கூட தமி​ழில் எழுத,​​ படிக்க தெரி​யா​த​வர்​கள் எல்லா பள்​ளி​க​ளி​லும் இருக்​கி​றார்​கள் என்​பது உண்​மையே!​ இதை யாரா​லும் மறுக்​க​மு​டி​யாது.​ தமிழ்​நாட்​டில் தாய் மொழி​யிலே தடு​மாற்​றம் என்​றால் மற்ற பாடங்​களை இவர்​கள் எப்​படி படிக்க முடி​யும்?​ எப்​படி புரிந்​து​கொள்ள முடி​யும்?​ ஆக தமிழ் மொழிப்​பா​டத்​தில் இப்​ப​டி​யொரு நிலை இருப்​ப​தற்கு என்ன கார​ணம்?​ கல்​வித்​து​றை​தான் கார​ணம்.​அனை​வ​ருக்​கும் கல்வி என்ற திட்​டம் கொண்டு வந்த நேரத்​தில்,​​ 6,​ 7,​ 8-ம் வகுப்​பு​க​ளுக்கு கற்​பித்து வந்த இடை​நிலை ஆசி​ரி​யர்​க​ளுக்​குப் பதி​லாக பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​களை நிய​மித்​தார்​கள்.​ இடை​நிலை ஆசி​ரி​யர்​கள் எல்லா பாடங்​க​ளை​யும் சிறப்​பா​கக் கற்​பித்து வந்​தார்​கள்.​ ஆனால் பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​களை நிய​ம​னம் செய்​த​போது கணக்கு ஆசி​ரி​யர்​க​ளை​யும்,​​ அறி​வி​யல் ஆசி​ரி​யர்​க​ளை​யும் நிய​மித்​தார்​கள்.​ அதன்​பி​றகு ஆங்​கில ஆசி​ரி​யர்​களை நிய​மித்​தார்​கள்.​ இந்த ஆசி​ரி​யர்​க​ளுக்​குத் தமிழ்ப் பாடத்தை நடந்த பாட​வேளை ஒதுக்​கிக் கொடுக்​கப்​பட்​டது.​ இவர்​கள் தமிழ் மொழி அறிவு பெற்​றி​ருந்த போதி​லும் தமிழ்ப் பாடத்​திற்கு முக்​கி​யத்​து​வம் தரு​வ​தில்லை.​ தங்​க​ளு​டைய பாடத்​தைக் கற்​பிப்​ப​தி​லேயே கவ​ன​மாக இருக்​கி​றார்​கள்.​ தமி​ழில் இலக்​க​ணம்,​​ செய்​யுள் பகு​தி​க​ளைத் தொடு​வ​தில்லை,​​ உரை​ந​டையை மட்​டும் மாண​வர்​களை படிக்​கச் சொல்​லி​யும்,​​ உரை​யைப் படித்து விடை​களை எழுதி தயார் செய்​தும் தமிழ்ப் பாடத்தை முடித்​து​வி​டு​கி​றார்​கள்.​ஆக,​ ​ தமிழ் மொழி​யைக் கற்​பிக்க தமிழ் ஆசி​ரி​யர்​கள் நிய​மிக்​கப்​பட்​டி​ருந்​தால் தமிழ் மொழி​யில் மாண​வர்​கள் செய்​யும் பிழை​க​ளைச் சுட்​டிக்​காட்டி சரி​யான தமிழை பிழை இல்​லா​மல் எழு​தும் பயிற்​சி​யைக் கொடுக்க முடி​யும்.​ஆசி​ரி​யர்​கள் நிய​ம​னம்:​​ஆசி ​ரி​யர்​களை நிய​மிக்​கும் போது 6,7,8-ம் வகுப்​பு​க​ளுக்கு மற்ற பாட ஆசி​ரி​யர்​களை நிய​மிப்​பது போல தமிழ் ஆசி​ரி​யர்​கள் இது​வரை நிய​மிக்​கப்​ப​ட​வில்லை.​ உதா​ர​ண​மாக 6,7,8-ம் வகுப்​பு​க​ளுக்கு நான்கு பணி​யி​டங்​களை ஒதுக்​கும்​போது இரண்டு கணித பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​கள்,​​ இரண்டு அறி​வி​யல் பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​கள் அல்​லது ஒரு அறி​வி​யல் ஆசி​ரி​யர்,​​ ஒரு ஆங்​கில ஆசி​ரி​யர் என்ற நிலை​யில்​தான் நிய​ம​னம் செய்​யப்​ப​டு​கி​றது.​ தமிழ் ஆசி​ரி​யர் பணி​யி​டங்​கள் அறவே விடப்​பட்​டுள்​ளது.​ இந்த நடை​முறை நடு​நிலை,​​ உயர்​நிலை மற்​றும் மேல்​நி​லைப் பள்​ளி​கள் என எல்லா வகைப் பள்​ளி​க​ளி​லும் நீடிக்​கி​றது.​தரம் உயர்த்​தப்​ப​டும் பள்​ளி​கள்:​​தொடக் ​கப்​பள்​ளியை நடு​நி​லைப் பள்​ளி​யாக தரம் உயர்த்​தும்​போது கணி​தம் மற்​றும் அறி​வி​யல் ஆசி​ரி​யர்​களை நிய​மிக்​கி​றார்​கள்,​​ ஏன் ஆங்​கில ஆசி​ரி​ய​ரைக் கூட நிய​மிக்​கி​றார்​கள்.​ ஆனால் தமி​ழா​சி​ரி​யர் எந்​தப் பள்​ளி​யி​லும் இது​வரை நிய​மிக்​கப்​ப​ட​வில்லை.​ அதே​போல் ஒரு நடு​நி​லைப்​பள்​ளியை,​​ உயர்​நி​லைப் பள்​ளி​யா​கத் தரம் உயர்த்​தும்​போது தமி​ழா​சி​ரி​ய​ரைத் தவிர மற்ற பாட ஆசி​ரி​யர் பணி​யி​டங்​கள் உடனே அனு​ம​திக்​கப்​ப​டு​கி​றது.​ தமி​ழா​சி​ரி​யர் பணி​யி​டங்​கள் பள்ளி தொடங்கி சுமார் நான்கு அல்​லது ஐந்து ஆண்​டு​கள் கழித்​துத்​தான் அனு​ம​திக்​கப்​ப​டு​கி​றது.​÷உ​யர்​நி​லைப்​பள்​ளி ​களை மேல்​நி​லைப் பள்​ளி​க​ளா​கத் தரம் உயர்த்​தும் போதும் இதே நிலை​தான்.​ முது​நி​லைத் தமி​ழா​சி​ரி​யர்​களை நிய​ம​னம் செய்​யா​மல் யாரோ ஒரு​வர் அப்​பா​டத்தை நடத்​து​கி​றார்​கள்.​÷இப்​படி பள்​ளி​க​ளில் தமிழ்ப் பாடங்​க​ளைச் சரி​யான ஆசி​ரி​யர்​க​ளைக் கொண்டு கற்​பிக்​கா​மல் இருப்​ப​தால் மாண​வர்​கள் தமிழ் மீது ஆர்​வம் இல்​லா​மல் இருக்​கி​றார்​கள்.​ தொழில் கல்​வி​யில் சேரு​ப​வர்​கள் கூட தமிழ் பாடங்​க​ளில் தேர்ச்சி பெற்​றால் போதும்.​ கணி​தம்,​​ இயற்​பி​யல்,​​ உயி​ரி​யல் போன்ற பாடங்​க​ளில் உள்ள மதிப்​பெண்​களை தொழில் கல்வி படிப்​பிற்கு எடுத்​துக் கொள்​வ​தால் அப்​பா​டங்​க​ளில் மட்​டும் அதிக கவ​னம் செலுத்​து​கி​றார்​கள்.​ தமிழை ஒதுக்​கி​வி​டு​கி​றார்​கள்.​எனவே தாய்த் தமிழ் நாட்​டில் தமிழ் மொழி​யின் இத்​த​கைய நிலை​யைப் போக்க,​​1.​ எல்லா பள்​ளி​க​ளி​லும் 6,7,8-ம் வகுப்​பு​க​ளுக்கு தமி​ழா​சி​ரி​யர்​களை நிய​ம​னம் செய்​ய​வேண்​டும்.​2. ​ தரம் உயர்த்​தப்​ப​டும் எல்லா பள்​ளி​க​ளுக்​கும் மற்ற பாட ஆசி​ரி​யர்​களை நிய​மிப்​பது போலவே தமி​ழா​சி​ரி​யர்​க​ளை​யும் நிய​ம​னம் செய்ய வேண்​டும்.​3.​ தொழில் கல்வி பட்​டப்​ப​டிப்​பில் சேரு​வ​தற்​கும் தமிழ்ப் பாடத்​தில் பெறும் மதிப்​பெண்​ணை​யும் கணக்​கில் எடுத்​துக் கொள்ள வேண்​டும்.​4.​ தமிழ்ப் பாட வகுப்​பு​க​ளில் பேச்​சுப் பயிற்சி,​​ தாங்​களே கருத்​து​களை சிந்​தித்து கட்​டு​ரை​கள் எழு​தும் பயிற்சி,​​ நூல்​களை திற​னாய்வு செய்து விமர்​சிக்​கும் பயிற்சி போன்ற செயல்​பா​டு​க​ளைச் செய்ய வழி காணும் போது இது மொழித் திறனை வளர்க்க உத​வும்.​5.​ தனி​யார் பள்​ளி​க​ளில் கூட தமிழ் பாடத்​திற்கு முக்​கி​யத்​து​வம் தரப்​ப​டு​வ​தில்லை.​ ஆங்​கில வழி​யில் படிக்​கும் மாண​வர்​கள் பெரும்​பா​லா​னோர் தமி​ழைப் படிக்க தடு​மா​று​வார்​கள்.​ கார​ணம் இங்​கே​யும் தமி​ழுக்கு முக்​கி​யத்​து​வம் தரப்​ப​டு​வ​தில்லை.​ இந்​நி​லை​யை​யும் மாற்ற தகுந்த நட​வ​டிக்கை மேற்​கொள்ள வேண்​டும்.​சம் ​பந்​தப்​பட்​ட​வர்​கள் இவற்​றைக் கவ​னித்து தகுந்த நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்​டால் தமிழ் நாட்​டில் மாண​வர்​க​ளி​டம் தமிழ் மொழி வளர்ச்​சி​யு​றும்.​ இல்​லை​யென்​றால் தமிழ்,​​ நாளும் தேய்ந்து கல்வி கற்​ற​வர்​கள் கூட சரி​யான தமிழ் சொற்​க​ளைப் பயன்​ப​டுத்​தத் தெரி​யா​மல் செய்​யுள்,​​ இலக்​கி​யம்,​​ இலக்​கண அறிவை பெறா​மல் மங்​கும் நிலை ஏற்​ப​டும் என்​ப​தில் ஐய​மில்லை.​கோ.செல்​வ​ரா​சன்,​​ காம​ராசு நகர்,​​ பெத்த தாளாப்​பள்ளி அ.நி.​ கிருஷ்​ண​கிரி மாவட்​டம்
கருத்துக்கள்

சரியான கோரிக்கைகள் முன்னெடுத்து வைக்கப்பட்டுள்ளன. செம்மொழி மாநாடு நடைபெறும் வேளையில் தமிழ்த்தாய் தமிழ்நாட்டுப்பள்ளிகளில் நுழைவுரிமையின்றிக் கண்ணீர் வடிக்கக் கூடாது. உடனே முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 2:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

செம்மொழி மாநாடு​​ ​​கட்சி மாநா​டாக காட்சி அளித்து விடக்​கூ​டாது: முதல்வர் எச்சரிக்கை


செம்மொழி மாநாடு​​ ​​கட்சி மாநா​டாக காட்சி அளித்து விடக்​கூ​டாது: முதல்வர் எச்சரிக்கை



சென்னை, ​​ மே 25: கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாடு,​​ தி.மு.க.வின் கட்சி மாநாடாகக் காட்சி அளித்துவிடக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.​ ​​ இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:​ ​​ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெறவுள்ளது.​ அம்மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் குறித்து நான் இரண்டு நாட்கள் கோவையில் தங்கி ஆய்வு செய்தேன்.​ ​​ மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை வகைப்படுத்தி,​​ முறைப்படுத்தி செய்திட அமைச்சர்களின் தலைமையில் 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.​ அந்தக் குழுக்களுடன் நான் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினேன்.​ மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு அமைச்சர்களும்,​​ அதிகாரிகளும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.​ ​​ பொது அரங்க நிகழ்ச்சிக்கான பிரமாண்டமான பந்தல் மிக அழகாக அமைக்கப்பட்டு வருகிறது.​ பழம்பெரும் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்ட 28 ஆய்வரங்கங்களும்,​​ வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் வியந்து பாராட்டும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.​ ​​ வெறும் கண்காட்சியாக மட்டுமில்லாமல்,​​ காலமெல்லாம் நினைவுகளிலிருந்து அகலாத கருத்துக் காட்சியாகவும் அமையும் விதத்தில் கண்காட்சி ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.​ ​பழந்தமிழர் பண்பாடு,​​ நாகரிகம்,​​ தமிழிலக்கிய காட்சிகள் போன்றவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.​ ​​ அதைப்போலவே,​​ ஊர்வலத்தில் செல்லவிருக்கும் ரதங்கள் காண்போரைக் கவரும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.​ இவ்வளவு மகிழ்ச்சிக்கும்,​​ உற்சாகத்துக்கும் இடையே என் மனதுக்கு வருத்தத்தைத் தருகிற காட்சியையும் நான் கோவையில் காண நேர்ந்தது.​ ​ கோவை விமானம் நிலையம் தொடங்கி,​​ வ.உ.சி.​ மைதானம் வரையிலும்,​​ இன்னும் நகரின் பல்வேறு இடங்களிலும் தி.மு.க.​ கொடிகள்,​​ பதாகைகள்,​​ கட்சி நிர்வாகிகளின் உருவங்கள் தாங்கிய பேனர்கள் ஆகியவை தெவிட்டும் அளவுக்கு எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தன.​ ​​ துணை முதல்வர் மு.க.​ ஸ்டாலின் கோவைக்கு சென்ற நாளிலும் இதே காட்சியைப் பார்த்து,​​ கண்டித்தார் என்று அறிந்து கொண்டேன்.​ ​​ நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கட்சி சார்பற்ற முறையில்,​​ தமிழ் மொழிக்காகவும்,​​ தமிழர்களுக்காகவும்,​​ தமிழக அரசால் நடத்தப்படுகிற மாநாடு.​ அது எள்ளின் முனையளவும் கூட கட்சி மாநாடாக காட்சி அளித்து விடக் கூடாது என்பதில் நான் கண்ணும் கருத்துமாக உள்ளேன்.​ ​​ இதை கோவை மாவட்ட தி.மு.க.வினர் அறிந்து கொள்ளாமல் உள்ளது எனக்கு வியப்பாக உள்ளது.​ ​​ தி.மு.க.​ கொடிகள்,​​ பதாகைகளுக்குப் பதிலாக,​​ பொதுமக்களுக்கு எவ்வித சங்கடமும் ஏற்படாத வகையில்,​​ சங்க இலக்கியக் காட்சிகள் அடங்கிய பேனர்கள்,​​ மாநாட்டின் இலச்சினை தாங்கிய பதாகைகள்,​​ பழங்கால மன்னர்களின் திருவுருவங்கள்,​​ புலவர்களின் ஓவியங்கள் ஆகியவற்றை அழகாக அமைக்கலாம்.​ அது எனக்கு மட்டுமல்லாமல்,​​ மாநாட்டுக்கு வரும் பல லட்சக்கணக்கான மக்களுக்கும்,​​ வெளிநாட்டினருக்கும் நிறைவளிக்கக் கூடியதாகவும்,​​ தமிழ் மொழியின் பெருமை,​​ வரலாறு,​​ பண்பாடு இவற்றை விளக்குவதாகவும் இருக்கும்.​ ​​ எனவே தி.மு.க.வினர் அதற்கேற்ப செயல்பட வேண்டுமென்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

சரியான முறையான நிறைவான அறிக்கை! கட்சிக் கொடிகளும்பதாகைகளும் வேண்டா என்றால் மிகுதியாக வைக்க வேண்டும் என்ற அரசியல் அகராதிப்படி நடந்து கொள்ளாமல், முதல்வர் வேண்டுகோளுக்கிணங்கச் சங்க இலக்கியக் காட்சிகளை மக்கள் பார்வையில் வைக்க கட்சியினர் முன்வரவேண்டும். அதுவே முதல்வருக்குப் பெருமை தேடித்தரும். மகிழ்ச்சியுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 2:44:00 AM

Whatever C.M may say, this conference is conducted as aparty conference at the cost of public money. Except extravaganza and mere bon fire, nothing will be achieved.

By ankandasamy
5/26/2010 12:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மதுரை கம்பன் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் பாரதி விழா நடத்த சாலமன் பாப்பையா ரூ.​ 1 லட்சம் நிதி



மதுரை, ​​ மே 25:​ மதுரையில் கம்பன் கழக அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் பாரதி விழா நடத்துவதற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா ரூ.1 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.​ ​ இதன் மூலம் பாரதியார் குறித்த பேச்சு,​​ கவிதைப் போட்டிகள் பெண்களுக்கு நடத்தப்பட்டு பரிசு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.​ ​ மதுரை கம்பன் கழக அறக்கட்டளை சார்பில் ஏழாம் ஆண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.​ இதில் பேசிய கம்பன் கழகத் தலைவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா,​​ தனது மேடைப் பேச்சின் பொன்விழாவைக் குறிக்கும் வகையிலும் ​(50 ஆண்டுகள்),​​ தனது தமிழ்ப் பணிக்குத் தூண்டுதலாக இருந்த பாரதிக்கு காணிக்கை செலுத்தும் வகையிலும் பாரதி விழாவை ஆண்டுதோறும் பிரமாண்டமாக நடத்திட ரூ.1 லட்சம் நிதி தனது சொந்தப் பொறுப்பில் அளிப்பதாக அறிவித்தார்.​ ​ அதற்கான காசோலையை கம்பன் கழக அறக்கட்டளைத் துணைத் தலைவர் சங்கர சீத்தாராமன்,​​ செயலர் ஆர்.சொக்கலிங்கம்,​​ பொருளாளர் பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் ஆகியோரிடம் வழங்கினார்.​ ​ பாரதி விழா நடத்தும் திட்டத்தில் பிற அமைப்புகளும் பங்கேற்கலாம் என்று பேராசிரியர் சாலமன் பாப்பையா தெரிவித்தார்.​ ​ இதையடுத்து இத்திட்டத்தில் விஸ்வாஸ் கலைப் பண்பாட்டு அறக்கட்டளை தன்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறது என அறக்கட்டளை அறங்காவலர் சங்கர சீத்தாராமன் அறிவித்தார்.​ ஆண்டுதோறும் டிசம்பரில் நடத்தப்பட உள்ள பாரதி விழாவை முன்னிட்டு பெண்களுக்கான இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் முதல் பரிசு பெறுவோருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு அளிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் பேராசிரியர் சாலமன் பாப்பையா கூறினார்.​ ​ மதுரை கம்பன் அறக்கட்டளை ஏழாம் ஆண்டு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்,​​ தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் மாதம்தோறும் இலக்கிய விழாக்கள் நடத்தப்பட வேண்டும்,​​ அதற்கு தினமணி துணை நிற்கும் எனக் கூறியிருந்தார்.​ ​ இந் நிலையில்,​​ கம்பன் கழக நிறைவு விழாவில் பேசிய சாலமன் பாப்பையா பாரதி விழாவைத் தொடர்ந்து ஒளவையார்,​​ இளங்கோவடிகள் எனத் தமிழ் விழாக்கள் தொடர்ந்து நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

பாராட்டுகள்! தொண்டு தொடர வாழ்த்துகள்! பாரதிதாசனுக்கும் சங்கப் புலவர்களுக்கும் தொல்காப்பியருக்கும் திருவள்ளுவருக்கும் விழாக்கள் நடத்திட வேண்டுகிறேன். திங்கள் ஒரு புலவர் விழா என நடத்தித் தமிழ்ப்பரப்புதலுக்கும் காத்தலுக்கும் துணை நிற்க வேண்டுகிறேன். பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 2:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
டாலினை வரவேற்க வராத மதுரை திமுக பிரமுகர்கள்



மதுரை, ​​ மே 25: ​ ​ ​ ​ துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு விமானம் மூலம் மதுரை வந்தார்.​ ஆனால்,​​ அவரை விமான நிலையத்தில் வரவேற்க மதுரை திமுக பிரமுகர்கள் வரவில்லை.திருநெல்வேலி பகுதியில் புதன்கிழமை நடைபெறும் கட்சிப் பிரமுகர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் மதுரை வந்தார்.​ சென்னையில் இருந்து மதுரைக்கு இரவு 8.30 மணிக்கு விமானத்தில் வந்த அவர் பின்னர் காரில் திருநெல்வேலி சென்றார்.மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,​​ தங்கம் தென்னரசு ஆகியோர் வந்தனர்.​ மதுரையில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கமும்,​​ முன்னாள் மாநகர் மாவட்டச் செயலர் வ.வேலுச்சாமியும் வந்திருந்தனர்.ஆனால்,​​ மதுரை பகுதியைச் சேர்ந்த திமுக மாவட்டச் செயலர்கள்,​​ எம்.எல்.ஏ.க்கள்,​​ எம்.பி.க்கள்,​​ மதுரை மேயர் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் யாரும் மு.க.ஸ்டாலினை வரவேற்க விமான நிலையத்துக்கு வரவில்லை.​ மதுரை திமுக மாவட்டச் செயலர்கள் உள்ளூரில் இல்லை என்றும் கூறப்படுகிறது.மாவட்ட ஆட்சியர்,​​ மதுரை சரக டி.ஐ.ஜி.​ மற்றும் எஸ்.பி.​ உள்ளிட்டோர் துணை முதல்வரை வரவேற்றனர்.மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக மட்டுமின்றி திமுகவின் பொருளாளராகவும் உள்ளார்.​ இந் நிலையில் அவரை மதுரை பகுதி திமுகவினர் வரவேற்க வராதது கட்சி வட்டாரத்தில் ​ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்கள்

யாரும் விமான நிலையத்திற்கு வருகை தந்துநேரத்தை வீணாக்க வேண்டா என நாளை ஓர் அறிக்கை வரலாமோ!

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 2:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

மாநிலங்களவைத் தேர்தல்: 2 இடத்திலும் அதிமுக போட்டி


மாநிலங்களவைத் தேர்தல்: 2 இடத்திலும் அதிமுக போட்டி



மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.​ பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய ​(இடமிருந்து)​ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.​ மகேந்திரன்,​​ மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.​ ராமகிருஷ்ணன்,​​ ம.தி.மு.க.​ பொதுச் செயலாளர் வைகோ.
சென்னை,​​ மே 25:​ மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.​ வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்போம் என்று மார்க்சிஸ்ட்,​​ இந்திய கம்யூனிஸ்ட்,​​ ம.தி.மு.க.​ ஆகிய தோழமைக் கட்சிகள் அறிவித்துள்ளதால் 2 இடத்திலும் அ.தி.மு.க.​ போட்டியிடுகிறது.​ மாநிலங்களவையில் காலியாகும் உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் ஜூன் 17-ம் தேதி நடைபெற உள்ளது.​ தமிழகத்தில் இருந்து 6 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது.​ ​​ இதில் தி.மு.க.​ அணி 4 இடங்களிலும்,​​ அ.தி.மு.க.​ அணி 2 இடங்களிலும் வெல்லும் வாய்ப்பு உள்ளது.​ அ.தி.மு.க.​ தனது சொந்த பலத்தின் மூலம் ஒரு இடத்தையும்,​​ தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் மற்றோர் இடத்தையும் கைப்பற்றும் நிலையில் உள்ளது.​ ​​ இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.​ வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி,​​ இந்திய கம்யூனிஸ்ட்,​​ ம.தி.மு.க.​ ஆகிய கட்சிகளுக்கு அ.தி.மு.க.​ தலைமை கடிதம் எழுதியிருந்தது.​ ​​ இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,​​ அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் பி.சம்பத்,​​ இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன்,​​ மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.கோபு,​​ ம.தி.மு.க.​ பொதுச் செயலாளர் வைகோ,​​ பொருளாளர் டாக்டர் மாசிலாமணி ஆகியோர் அ.தி.மு.க.​ பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சென்னை போயஸ் தோட்டத்தில் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்துப் பேசினர்.​ ​சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்தத் தலைவர்கள்,​​ மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.​ வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்தனர்.​ ​இது குறித்து ஜி.ராமகிருஷ்ணன்,​​ வைகோ,​​ சி.​ மகேந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:​ ​மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.​ வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரி அ.தி.மு.க.​ பொதுச் செயலாளர் ஜெயலலிதா எங்கள் கட்சிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.​ அவரது கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க.வை ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.​ ​மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளை கடைப்பிடிக்கும் மத்திய,​​ மாநில அரசுகளை வீழ்த்த வேண்டியுள்ளது.​ எனவே,​​ அ.தி.மு.க.வை ஆதரிக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.​ ​இதன் மூலம் மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.​ 2 இடங்களைக் கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.​ ​அ.தி.மு.க. ​ வேட்பாளர்கள் யார் என்பது வரும் 27-ம் தேதி நடைபெறும் அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்துக்குப் பின் தெரிய வரும்.​ ​​
கருத்துக்கள்

பாவம் அதிமுகவின் தோழமைக் கட்சிகள்! குறிப்பாக மதிமுக! தொடர்ந்து தேர்தல் தொகுதிகளை விட்டுக் கொடுத்தது. மாநிலங்களவையில் வைக்கோ இடம் பெற்றால் தமிழர்க்கு நல்லது; அதிமுகவிற்கும் வலிமைவாய்ந்த சொற்பொழிவாளரை அனுப்பிய வகையில் மிக நல்லது. ஆனால், பேராசை பிடித்த அதிமுக எல்லாவற்றையும் தானே கபளீகரம் செய்யும் பிசாசு போல் நடந்து கொள்கிறது. என்ன செய்வது? உலகத்தமிழர் நலனுக்கு எதிரான திமுகவிலும் இணைய முடியவில்லை. தனித்து நிற்கும் துணிவும் இல்லை. அதிமுகவின் கொத்தடிமையாக இருக்கின்றனர். மத்திய மாநில அரசுகளை வீழ்த்த அதிமுகவால்தான் முடியும்; தங்களால் முடியாது என இக்கட்சியினர் கருதினால் இவர்களுக்கு எதற்குத் தனித் தனிக் கட்சிகள்? கட்சிகளைக் கலைத்துவிட வேண்டியதுதானே! ஏதோ, புரட்சித்தலைவியைச் சந்தித்த நற்பேறு கிடைத்த மகிழ்ச்சியில் வாய்மூடிக் கிடப்பார்கள் போலும்! தமிழர்களின் அடிமைத்தனத்தைப் போக்க எண்ணுபவர்கள் முதலில் தங்கள் அடிமைத்தனத்தைப் போக்க முயலட்டும்!

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 2:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

செவ்வாய், 25 மே, 2010

இலங்கையில் தமிழர்களுக்கு இப்போது பிரச்னையில்லை: தமிழ் முஸ்லிம் எம்.பி.​ பேட்டி



சென்னை,​​ மே 24: இலங்கையில் தமிழர்களுக்கு இப்போது பிரச்னை இல்லை என்று தமிழ் முஸ்லிம் எம்.பி.​ அப்துல் காதர் தெரிவித்தார்.​ ​ இலங்கையின் சிறந்த அதிபராக ராஜபட்ச செயல்பட்டு வருவதாகவும்,​​ அவர் தமிழர்கள் பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.​ ​ தமிழ் முஸ்லிம் எம்.பி.யான அப்துல் காதர் ​(74),​ இலங்கை கண்டித் தொகுதியில் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.​ இவர் இதற்கு முன்பு ரணில் அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார்.​ மருத்துவ சிகிச்சைக்காக இரண்டுநாள் பயணமாக சென்னை வந்த அப்துல் காதர் எம்.பி.​ திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:​ ​ இலங்கையில் புலிகளுடனான போர் முடிவடைந்த நிலையில் மக்களின் மன நிலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.​ போர் நடந்தால் உயிர்ச்சேதம் இருக்கத்தான் செய்யும்.​ இதைக் கணக்கில் கொண்டு இலங்கை அரசு,​​ தமிழர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கைகளை எடுத்தது என்று கூறுவதை ஒத்துக் கொள்ள முடியாது.​ ​இப்போது அங்குள்ள தமிழர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.​ ​ இலங்கையில் புலிகளால் மீண்டும் போர் ஆபத்து இல்லை.​ புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை.​ இதை கருணா நேரில் பார்த்து உறுதி கூறியுள்ளார்.​ எதிர்க்கட்சி வரிசையில் நான் இருந்தாலும்,​​ அரசின் நல்லத் திட்டங்களுக்கு ஆதரவுடன் செயல்படுவேன்.​ ​பால்,​​ அரிசி,​​ துணி என அனைத்து வகை அத்தியாவசியப் பொருள்களுக்கும் இறக்குமதியை நம்பித்தான் இலங்கை உள்ளது.​ வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இறக்குமதி வரி குறைக்கப்படும் என்று நம்புகிறேன்.​ அதைத் தொடர்ந்து விலைவாசி குறைய வாய்ப்புள்ளது.​ ​ இலங்கைக்கு இப்போது சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.​ தூத்துக்குடி -​ கொழும்பு இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது.​ இதன் பிறகு இந்திய-​ இலங்கை நாடுகளுக்கிடையிலான நெருக்கம் மேலும் அதிகரிக்கும் என்றார் அவர்.தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு இல்லைஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு வந்ததா?​ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,​​ உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம்களுக்கு அழைப்பு ஏதும் வரவில்லை.​ அழைப்பு வந்தால் நான் கட்டாயம் கலந்து கொள்வேன்.​ அந்த சமயத்தில் இலங்கையில் மக்களவைக் கூட்டம் நடந்தாலும் நான் நிச்சயம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வேன் என்றார் அப்துல் காதர்.
கருத்துக்கள்

இலங்கைத் தமிழ்ப் பகுதியில் ஒரு பாகித்தானை உருவாக் எண்ணும் தன்னைத் தமிழினம் என ஏற்றுக் கொள்ளாத இசுலாமிய வெறியர் தமிழர்களைப் பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது? அவருக்குரிய ஒரே சிக்கல் கட்சி மாறி எவ்வாறு அமைச்சர் பதவி பெறுவது என்பதுதான். வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/25/2010 3:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
'தமிழ் வழி மருத்துவப்​ ப​டிப்பு வேண்டும்': முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்



சென்னை, ​​ மே 24:​ மருத்துவப் படிப்பை தமிழ் வழியில் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.​ இச்சங்கத்தின் மாநிலக் குழுக்கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது.​ கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள்:​ தமிழ்வழி படித்தோருக்கு தமிழக அரசின் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.​ 8-வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளிலும் மக்களவையில் பேசுவதற்கும்,​​ உடனுக்குடன் மொழிபெயர்ப்பு செய்வதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.​ சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழியாக்கிட மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.​ தமிழ் ஆட்சிமொழி குறித்து இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து அரசாணைகளையும் அரசு நிர்வாகத்திலும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் நிர்வாகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.​ மாறிவரும் காலச்சூழலுக்கும் கணினிக்கும் ஏற்ற தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவர உரிய மொழி அறிஞர்களைக் கொண்ட குழுவை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொல்காப்பியம் தொடங்கி இடைக்கால இலக்கியங்களை ஊடக ஆய்வு மேற்கொண்டு தமிழிசை இயல் உருவாக்கப்பட வேண்டும்.​ இதன் தொடர்ச்சியாக முந்தைய முன்னோடி ஆய்வுகளை முன்வைத்தும் புதிய ஆய்வுகளை மேற்கொண்டும் இசைத்தமிழ் வரலாறு எழுதப்பட வேண்டும்.​ தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் தவிர தமிழகத்தில் வேறு எங்கும் நாடகத்துறை இல்லை.​ நாடகத்துறை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் ஆய்வு நிலையில்தான் உள்ளது.​ தமிழ்த்துறையில் நாடகத்துறையை இணைப்பது அவசியம்.​ கூத்து மற்றும் நாடகப் பயிலரங்குகளை தமிழ்ப் பாடத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட வேண்டும்​ புதிதாக அனுமதிக்கப்படும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கேற்ற விகிதத்தில் தமிழாசிரியர்களை நியமிக்க தமிழக அரசு விதித்துள்ள தடையாணையை நீக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
கருத்துக்கள்

உண்மைத் தமிழர்களின் உள்ளக்கிடக்கையை எதிரொலிக்கும் இக் கோரிக்கைளை அரசு உடனே ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். செம்மொழி மாநாட்டின் பயனாகச் செந்தமிழ் எல்லா இடங்களிலும் ஆட்சி செலுத்தும் நிலை உருவாக வேண்டும். தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் தமிழே தலைமை பெற வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/25/2010 3:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்: ஐ.நா.வுக்கு இலங்கை எச்சரிக்கை



நியூயார்க்,​​ மே 24:​ எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடாது என ஐக்கிய நாட்டு சபையிடம் இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.​ அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ்,​​ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.​ புலிகளுடனான போரின் போது எங்களது நாட்டு ராணுவத்தால் மனித உரிமை மீறப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து இலங்கை அரசே விசாரிக்க முடிவெடுத்துள்ளது.​ இந்நிலையில் இதன் மீது நம்பகத்தன்மையில்லாமல் ஐ.நா.​ விசாரிக்க முயல்வது நல்லதல்ல என்று பெரிஸ் கூறினார்.​ இலங்கை ராணுவத்தின் மீது எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க உயர் குழுவை ஐ.நா.​ அமைப்பதென்பது சட்டரீதியாகவும்,​​ தார்மிக ரீதியாகவும் நியாயமானதல்ல.​ இதனால் இலங்கை மக்கள் மத்தியில் அதிருப்திதான் ஏற்படும்.​ புலிகளுடனான போரினால் 30 ஆண்டுகளாக வளர்ச்சி பாதிக்கப்பட்ட இலங்கை,​​ அதில் இருந்து மீண்டு தற்போதுதான் லேசாக வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளது.​ இந்நிலையில் இலங்கை மீதான விசாரணை என்ற ஐ.நா.வின் நடவடிக்கை நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பெரிஸ் கூறியுள்ளார்.​ ஐ.நா.​ பொதுச் செயலர் பான் கீ மூன்,​​ அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரை விரைவில் சந்தித்துப் பேசவுள்ளார் பெரிஸ்.​ பான் கீ மூனை சந்திக்கும் போது இலங்கை உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தான் வலியுறுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.​ ​ இலங்கை அரசு விசாரணை நடத்தவுள்ள நிலையில் ஐ.நா.​ தலையிடுவது விசாரணையில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதையும் பான் கீ மூனிடம் ​ தான் எடுத்துச் சொல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.​ இலங்கையில் புலிகளுக்கு எதிரான போரின் போது ராணுவம் அப்பட்டமாக மனித உரிமையை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.​ போரின் போது தமிழர் பகுதியில் மருத்துவமனைகள்,​​ பள்ளிக்கூடங்கள்,​​ குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.​ இந்தத் துயர சம்பவங்களுக்கு இலங்கை அரசே முழுக் காரணம் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் ​சுமத்தின.​ இலங்கை போரின் போது மனித உரிமைமீறல் நடைபெற்றதாகவும்,​​ அதற்கு அந்நாட்டு அரசே காரணம் என்றும் சமீபத்தில் பிரஸ்ஸலின் மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலும் குற்றம்​ சாட்டப்பட்டது.​ இலங்கை ராணுவம் மனித உரிமை மீறிய போது அதைத் தடுக்க ஐ.நா.வும் தவறிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.​ இதனிடையே,​​ இலங்கையில் போர்க்காலத்தில் மனித உரிமை மீறப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்கும் பணியில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூன் தீவிரமாகவுள்ளார்.
கருத்துக்கள்

பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்றொழித்த, நாட்டுப் பகுதியைச்சூறையாடிக் கொள்ளையடித்த வெறியனே விசாரணை மேற் கொள்வான் என்பதற்கு இந்தியமும் வால் பிடிக்கும். எனினும் கையாலாகாத ஐ.நா.இதனை எதிர்த்துத் தனி விசாரணை மேற்கொள்வதற்குத் துணிவதற்கான சூழல் இருப்பதாகத் தெரியவில்லை.குற்றவாளியே நீதிபதியானால்என்ன நடக்கும் என்பது தெரியாததல்ல! என்றாலும் இப்படிப் பேசும் துணிவைத் தந்ததும் ஐ.நா.தான். உலக நாடுகளே! நடுநிலையுணர்வுடன் செயல்பட்டுப் போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குங்கள். வருங்கால வரலாற்றில் கறைபடிந்த நாடுகளாய் இடம் பெறாதீர்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/25/2010 3:36:00 AM

Ravi itku tamilnattu muthalvarin arasiyalali vida Mahindavin kudumpathin arsiyal ontrum kevalamanathu aala.avarkalin thnathi kalathil irrunthu thankalin katchikkavum nattukkakavu uzaitha oru mnaduthara varkathavarkal.Ithu varaikkum entha janathipathiyinal ilanakayin payankaravathathai azikka mudinthathu.Mahindavukku sakotharar irrunthapadiyalthan unmaiyana visuvasthaudan panaktta mudinththu.Viduthalipulikal ethanai ayiram appvikalin uyirkali kuditharkalapothellam un ena seithathu.Ippothu avrkal nattai apiviruthi seiya muyalum pothu suma oru visaranai vaikka vendum enpathu ivarkalum payankarvathikalin pirathinithi pola ullathu. Mahindavidam unmaiyana povththan enpathu ellorukkum theriyum.Avrinal mattumey ilanakyil ella makalidamum otrumayai kodukka mudiym. anuman

By anumann
5/25/2010 2:23:00 AM

முடிவாக, உள்நாட்டு விடயங்களில் யாரும் தலையிடக் கூடாது, ஏனெனில் தற்போது அது உள்நாடல்ல. மகிந்தா அதனை விலைகொடுத்து வாங்கிவிட்டார்! பாராளுமன்றத்தைப் பாருங்கள் எல்லாமே அவரின் குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட உள்வீடு!!!!!

By Ravi
5/25/2010 1:42:00 AM

புலிகளை அழித்தபோது தவறு மட்டும்தான் நடந்தது என்றில்லை, சில நல்ல விடயங்களும் நடந்தன. புலிகள் வேரோடு அழிக்கப்பட்டனரே! மந்திரிசபையில் சில 'பிரபாகரன்'களுக்கு இடமளித்தோம், மந்திரிசபையே கூடாதென்பதற்காக அல்ல, தமிழர்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக. அகதிமுகாமில் இன்னமும் தமிழர்களை வைத்திருக்கின்றோம், வெளியில் விட்டால் மட்டும் என்ன அவர்களிற்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கவா போகின்றோம்?. தமிழர் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றுகின்றோம், தமிழர்பகுதியே வேண்டாம் என்பதற்காகவல்ல. தமிழரும் சிங்களவரும் எப்படி ஒற்றுமையாக வாழவேண்டும் என்று கற்றுக் கொடுப்பதற்காக. தமிழர்களின் வளமான நிலங்களை பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் அபகரித்தோம். அவர்களிற்கு நிலமே வேண்டாம் என்பதற்காகவல்ல. வேறு எப்படித்தான் சிங்களவர்களை எதிர்காலத்தில் அங்கு குடியேற்றுவது? அதுவும் காய்ந்து கிடக்கும் யாழ்ப்பாணத்திற்கு எந்த சிங்களவன் குடிபோவான்? முடிவாக, உள்நாட்டு விடயங்களில் யாரும் தலையிடக் கூடாது, ஏனெனில் தற்போது அது உள்நாடல்ல. மகிந்தா அதனை விலைகொடுத்து வாங்கிவிட்டார்! பாராளுமன்றத்தைப் பாருங்கள் எல்லாமே அவரின் குடும்ப உறுப்

By Ravi
5/25/2010 1:42:00 AM

இறமையென்றால் என்ன?

By உலகம்
5/25/2010 1:07:00 AM

நாங்கள் யாராயினும் எவரானாலும் எங்களுக்கு எதிரி என்று தெரிந்தால் நாங்கள் கொல்லுவோம் அது எங்களின் இ றைமை அதையாரும் தட்டி கேட்க முடியாது அது எங்களின் உள்விவகாரங்களில் தலை யிடுவதாகும் எங்கள் கொலைவெறி இறைமைக்குள் தலையிடகூடாது

By இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ்
5/25/2010 1:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்