சனி, 24 அக்டோபர், 2009

க‌ன‌டாவில் கணினியில் தமிழ் கற்பித்தல் பட்டறையில் புதுமை



'தெரியாதா தெரியாதா தமிழ் இனித் தெரியாதா'கனடாவின் ஸ்காபறோ அட்லாண்டா மண்டபத்தில் கணினி மூலம் தமிழ் கற்பித்தல் பட்டறை கனடா எழுத்தாளர் இணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது . இதில் ஏறக்குறைய 30 ஆசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.இலண்டன் கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழக கணினித் துறையில் பணிபுரியும் பேரா.சிவா பிள்ளை * இதனை வெகு சிற‌ப்பாக நடத்தினார். "பவர் பாய்ண்ட் என்னும் மென்பொருள் மூலம் தயாரித்த பல ஒளிப்படங்களையும், விடியோ சிறு துண்டுகளையும் பயன்படுத்தி நல்லதோர் பட்டறையை தயாரித்திருந்தார்.வழக்கமான சம்பிரதாய முறைகளைப் பின்பற்றாமல் பேச்சு ,எழுத்து ,வாசிப்பு என்ற முறைகளைப் பின்பற்றி மாணவரைக் கவரும் வகையில் எவ்வாறு விளையாட்டுப் போன்று கற்பிக்கலாம் என நல்ல பல உதாரணங்களைக் காட்டிச் சிறப்பாகச் பட்டறையை நடத்திய விதம் பலரும் பாராட்டும் விதமாக இருந்தது.
ஓர் எழுத்தை அறிமுகம் செய்யும்போது அவ்வெழுத்தைக் கொண்ட பல சொற்களை திரும்பத் திரும்பக் காட்டி உச்சரிப்பதன் மூலம் மாணவரது மனதில் பதியவைக்கலாம் என்பதை வலியுறுத்தினார்.இவ்வாறே புதிய சொற்களை அறிமுகம் செய்து பின் சிறு வசனங்களுக்குச் செல்லலாம் என விளக்கிக் காட்டினார்.பல வண்ணங்களில் சொற்கள் வந்து போவது ,மின்னி மறைவது போன்றவற்றை நல்ல ஓசையுடன் திரையில் காண்பித்தது சிறப்பாக இருந்தது. நவீன தொழில் நுட்ப முறையில் எவ்வாறு இலகுவாகவும் விறுவிறுப்பாகவும் தமிழைக் கற்பிக்கலாம் எனக் காட்டியது எல்லோரையும் கவர்ந்தது. தற்போது எமது சமூகத்தை ஆட்கொண்டிருக்கும் சினிமாவைப் பயன்படுத்தி எவ்வாறு மணவர்களிடையே தமிழ் கற்கும் ஆவலைத் தூண்டலாம் என இவர் கையாண்ட முயற்சியும் அனைவரின் பாராட்டுக்குரியதாக‌வும் க‌வ‌ன‌த்தை ஈர்க்கும் வ‌கையிலும் அமைந்திருந்த‌து.பல்லூடக‌ப் பயன்பாடு....சிவா பிள்ளை, தெரிந்ததில் இருந்து தெரியாததைச் சொல்லிக் கொடுப்பதில் கணனி மற்றும் பல்லூடக‌ப் பயன்பாட்டை விளக்கினார். ஊரில் படித்தது போலவே அப்பாவின் படம், அம்மாவின் படம் எல்லாம் காட்டிப் கற்பிப்பதை விட, குழந்தைகள் தொலைக்காட்சியில் விரும்பிப் பார்க்கக்கூடிய கேலிச் சித்திரத் தொடர்களில் வரும் பாத்திரங்களை வைத்துக் கற்றுக் கொடுக்கலாம் என்றார். குடும்ப உறவுமுறைகளைப் பற்றிக் கற்பிப்பதற்கு அவர் உதாரணம் காட்டிய Simpsons கனடாவில் 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமானது என்றாலும் பல குழந்தைகளுக்கு Simpsons பற்றித் தெரியும். அதைப் பயன்படுத்த விரும்பாவிட்டால் கனடாவில் இன்னொரு பிரபலக் கேலிச் சித்திரத் தொடரான Arthur ஐப் பயன்படுத்தலாம். இந்தக் கேலிச் சித்திரங்களில் அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, தங்கை, தாத்தா, பாட்டி, மாமா என்று எல்ல உறவு முறைகளும் வருகின்றன. பிள்ளைகளின் மனதில் நிச்சயம் ஒரு ஆர்வம் தூண்டப்படும் அல்லவா?
"தில்லானா மோகனாம்பாள்"பிரபலமான சில சினிமாப்பாடல்களை இசைக்கேற்ப சொற்களை மாற்றி நல்ல குரல் வளமுள்ளவர்களைக் கொண்டு பாடவைத்து தயாரிக்க‌ப்பட்ட விடியோ காட்சிகள் அனைவரது பாராட்டுதலையும் பெற்றன.குறிப்பாக "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் வந்த 'நலந்தானா நலந்தானா' என்ற பாடலுக்கு பத்மினி ஆடிய நடனத்தைப் பயன்படுத்தி 'தெரியாதா தெரியாதா * தமிழ் இனித் தெரியாதா' என்ற பொருள் பொதிந்த பாடலைக் காண்பித்தது சிறப்பாக இருந்தது. இவ்வாறு வேறு சில பாடல்களும் செய்யப்பட்டிருந்தன.நீண்ட அனுபவமுள்ள ஆசிரியர் பலர் இறுதியில் நடந்த கலந்துரையாடலின் போது வெளியிட்ட கருத்துக்களில் இருந்து பட்டறையின் சிறப்புப் புலனாகியது.வாழையிலையில்....எமது மொழியையும் கலாசாரத்தையும் எமது வருங்காலச் சந்ததிக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில் பேராசிரியர் சிவாபிள்ளையவர்கள் காட்டிய அக்கறை பாராட்டுக்குரியது. வாழையிலையில் உணவு பரிமாறும் போது கறிகள் என்ன ஒழுங்கில் வைக்கப்படுகின்றன என்றும் உப்பு வைப்பதின் முக்கியத்துவம் பற்றியும் பேராசிரியர் கூறியது பலருக்குப் புதிய செய்தியாக இருந்தது. உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பதை அது குறித்தது என்றும் காரமில்லாத கறிகள் முதலிலும் பின்னால் காரமுள்ள எண்ணையில் தயாரித்தவை இடமிருந்து வலமாக வைப்பதை நன்கு விளக்கி, மொழியும் கலாசாரமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் ஒரு இனத்தின் சின்னங்கள் என விளக்கினார்.ஒரு பழம் சாப்பிடும் சிறுவனின் படத்தைக் காட்டி ‘நான் சாப்பிடுகிறேன்' என்று சொல்லிக் கொடுக்கலாம். பழங்களின் படங்களைக் காட்டி ஒவ்வொரு பழங்களின் பெயர்களைச் சொல்லிக் கொடுக்கலாம். சற்றே பேச ஆரம்பித்த பிள்ளையிடம் ஒரு படத்தைக் காட்டி உனக்குத் தோன்றுவதைச் சொல் என்று கேட்கலாம். இப்படியாகப் பிள்ளையை முதலில் செயல்முறை மூலம் கேட்க, கிரகிக்க, சிந்திக்க, பேச வைப்பது மிகவும் அவசியம் என்பதாக சிவா பிள்ளையின் கற்பித்தல் முறை அரங்கிலிருந்த தமிழாசிரியர்களுக்கு கணினியில் தமிழ் கற்பித்தலுக்கான புதிய பரிணாமத்தை வெளிச்சமிட்டுக் காண்பித்தலாக அமைந்திருந்தது.எமது கலாசாரப் பழக்க வழக்கங்களை மறந்து புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம், எமது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டியது முக்கியம் என்றார். மொத்தத்தில் அன்றைய பட்டறை யாவருக்கும் பயனுள்ளதாக இருந்தது. டொராண்டோவில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் 100 பேருக்கு மேல் இருக்கிறார்கள் எனினும் அன்று வந்தவர்கள் சிலரே, என்பது வருத்தமானது என்று கருத்து பரிமாறிக்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிவபாலு தலைமை தாங்கினார். இணையத்தின் முன்னாள் தலைவரும் இந் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவருமான சின்னையா சிவனேசன், பேராசிரியார் சிவாபிள்ளை அவர்களின் பெருமுயற்சியைப் பாராட்டிப் பேசினார்.அன்றைய நிகழ்ச்சிக்கு இடவசதியும் சிற்றுண்டி தேனீர் வசதியும் இலவசமாகத் தந்த அட்லாண்டா நிறுவனத்துக்கும் நன்றி கூற நிக‌ழ்வு இனிதே நிறைவெய்திய‌து.‍தொகுப்பு: துறையூரான், கிருத்திகன்,கனடா& ஆல்பர்ட்,விஸ்கான்சின், அமெரிக்கா.
உலகத் தமிழர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த செய்திகளை புகைப்படங்களுடன் dinamaninews@rediffmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
தமிழ் இணைய மாநாடு 2009: நிகழ்ச்சி நிரல்



Tamil Internet 2009 - Conference Schedule

Conference Venue: "Hörsaalgebäude" of the University of KoelnUniversitätsstrasse 35, Albertus-Magnus-Platz 1, 50931 Köln, Germany

Friday, 23 October 2009

Time
Program
15.00 - 16.00
Inagural Ceremony
16.00 - 16.30
Coffee Break

16.30 - 18.00Chair:Vasu Renganathan
Plenary Session i)Mr. Muthu Nedumaran: Tamil on mobile devices : Challenges and Opportunities ii) Dr. Thomas Malten: Online Tamil Dictionariesiii)Prof. A.G. Ramakrishnan: மநுமொழி ஆய்வகம் : R & D work on Multifont OCR, SAPI Compatible TTS and Online Handwritten Word Recognition for Tamil.

Saturday, 24 October 2009

Time Program

09.00 - 10.30

Chair:A. Murugaiyan
Session A1: Computer Assisted Learning and Teaching of Tamil i) Ms. Devaki Annusami and D. Mathialagan: E-learning to enahnce language Proficiency ii)Ms. Kalaiselvi: இணைய வகுப்பறை:தொழில் நுட்பமும் கற்போர் உளவியலும் iii)Ms. Kanmani Shanmugam: Learning Tamil the Fun way

09.00 - 10.30

Chair:N. Ganesan
Session B1: Tamil Localisation, Tamil Keyboard and Open Source Software i) Mr. G. Balachandran: Tamil Encoding, Keyboard Layout and Collation Sequence Standard for ICT Sri Lanka ii) Mr. K. Sarveswaran: Tamil Localisation Process- A case study iii) Mr. Sinnathurai Srivas: Inside Tamil Unicode
10.30 - 11.00
Coffee Break

Time
Program
11.00 - 12.30 Chair:Subashini, T.
Session B2: Tamil localization, Tamil keyboard, open-source software & mobile applications i) Dr. Elanttamil: தமிழ் திறவூற்று மென்பொருள்கள் ii) Mr. Sivarajah Anuraj: தமிழ் மென்பொருள்களும் மக்கள் பாவனையும் iii) Gnana Bharathi, D (CLRI, Chennai, India) அறிவியல் மற்றும் தற்காலத் தேவைகளுக்கேற்ற தமிழெழுத்துச் சீர்திருத்தமும் அவற்றைக் கணினி மற்றும் கைபேசி செயல்பாட்டிற்குப் பயன்படுத்தும் முறையும்
11.00 - 12.30 Chair:Siva Pillai
Session A2: Computer Assisted Teaching and Learning of Tamil i) Mr. R. Natarajan: Preparing Pedagogy for e-learning courses: a pilot plan for Tamilnadu ii) Dr. G. Singaravelu: Effectiveness of Multimedia Package in Learning Vocabulary in Tamil iii) Dr. S.K. Panneerselvam : இணையம் வழி மொழிக் கற்றல் - கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்


12.30 - 13.30
Lunch Break

Time
Program
13.30 - 15.00 Chair: Achutan Menon
Session B3: Tamil Portal: Blogger, Aggregator, Wikipedia etc. i) Dr. N. Ganesan: Unicode Blog Aggregators and Linguistic Research ii) Dr. E. Iniya Nehru: Automatic E-content Generation iii) Mr. M. Mauran: Tamil Wikipedia


13.30 - 15.00 Chair: Seetha Lakshmi
Session A3: Computer Assisted Teaching and Learning of Tamil i) Dr.A.R. Sivakumaran: பேச்சுத் தமிழைக் கற்பித்தலில் கணினியின் பயன்பாடு ii) Ms. Sivagouri Kaliamoorthy: Enhancing learning of Tamil Language in a one-to-one computing environment iii) Ms. S. Swarnalatha : E_mt2 M-learning makes Tamil Learning Squared


15.00 - 15.30
Coffee Break

15.30 - 17.00 Chair: Muthu Nedumaran
Session B4: Tamil Portal: Blogger, Aggregator, Wikipedia etc. i) Mr. Diraviyam S. Maniam : IDNs (International Domain Names) and its progress in ICANN ii) Prof. A. Muthukumar : Development of Social Networking website and Tamil e-learning software using Unicode
iii) Mr. I. Thiruvalluvan: கணினியில் நேர் பெயர்ப்புச் சொற்கள்


15.30 - 17.00 Chair:P. R. Nakheeran

Session A4: Computer Assisted Teaching and Learning of Tamil i) Dr.R. Velmurugan: Development of e-content for learning Tamil phoneticsii) Prof. Paul Dhanasekaran: The Use of Technology among Tamil Medium Students – Barriers and Solutions iii) Dr.R. Subramani : The Use of Multi Media in Teaching Tamil through Internet (இணைய வழித் தமிழ்க் கற்பித்தலில் பல்ஊடகங்களின் பயன்பாடு)


17.00 - 18.00
INFITT Annual GB Meeting

Sunday, 25 October 2009

Time
Program

09.00 - 10.30 Chair:S. Rajendran

Session A5: Tamil Diaspora, Teaching Tamil as a Second Language and impact of Technology

i) Siva Pillai (Goldsmith College, University of London , UK)Tamil Language Teaching in UK ii) Paramasivam, Muthusamy (University of Malaysia, Malaysia)Enhancing Students Creativity Through Multimedia in Malaysian Tamil Schools iii) Seetha Lakshmi (National Institute of Education NIE, Singapore) Use and Impact of Information Technology in Teacher Training in Singapore
09.00 - 10.30 Chair:Balachandran, G.
Session B5: Online Databasesi) Thenmozhi Durairaj (SSN College, Chennai, India) Tamil-English Cross Lingual Information Retrieval System for Agricultureii) Andavar, V.M.S (Pachaiyappa's College, Chennai, India) Sangam Literature Teaching and Learning through Multimediaiii) Chevillard, Jean-Luc (CNRS Paris, France)Critical editions of Tamil works: exploratory survey and future perspectives
10.30 - 11.00
Coffee Break

Time
Program
11.00 - 12.30 Chair: Arun Mahizhnan
Session A6: Tamil Diaspora, Teaching Tamil as a second-language and impact of Technology & Database of Tamil Inscriptions i) Nakkeeran, P.R. (Tamil Virtual University, Chennai, India) Tamil Virtual University - activities and challenges (India) Enhancing the Process of Learning Tamil with Synchronized Mediaii) Murugaiyan, Appasamy (Ecole Pratique des Hautes Etudes, Paris, France)Tamil Inscriptions and online search: Database Compilation, Grammatical analysis and Translation. iii) Vasu Renganathan (University of Pennsylvania, Philadelphia, USA) Enhancing the Process of Learning Tamil with Synchronized Media

11.00 - 12.30 Chair:A.G. Ramakrishnan

Session B6: Natural Language Processing: OCR, Information Retrieval, Artificial Intelligence and Machine Translationi) Mala Nehru (T Mala) (Anna Univ, Chennai, India) An Intelligent System for Pictures based on Tamil Sentences Generation ii) M.B.A.Salai Aaviyamma, SRM University, Ramapuram, and Dr.K.Kathiravan, Easwari Enginnering Collge, RamapuramProblems related to English-Tamil Translation iii) Ganesan, Marappa (Annamalai Univ, Annamalainagar, India) Tamil Corpus Generation and Text Analysis & Unsupervised Approach to Tamil Morpheme Segmentation


12.30 - 13.30
Lunch Break

Time
Program
13.30 - 15.00 Chair:E. Iniya Nehru
Session A7: Computational Linguistics i) David Prabhakar, P (Madras Christian College, Chennai, India)Computer Analysis of Tamil Verb Forms ii) Rajendran, Sankaravelayudam (Tamil University, Tanjore, India) Dravidian Wordnet iii) BalaSundaraRaman L, Ishwar S, Bangalore, IndiaContext-free grammar for Ezutthadhigaaram of the Tolkāppiyam


13.30 - 15.00 Chair:Jean-Luc Chevillard

Session B7: Online Databases

i) Subashini Tremmel (Hewlett-Packard, Boeblingen, Germany) மின்பதிப்பின் ஒருங்கிணைப்பு - ஓலைச்சுவடிகளின் பேரட்டவணை, பல்லூடக தகவல் தரவுக் களஞ்சிய உருவாக்கல் ii) Anto Peter Ramesh (Softview Computers, Chennai, India) கலைச் சொற்களை வளப்படுத்துங்கள் iii) Kaliannan Umaraj (Central Institute of Tamil, Chennai , India) சங்க இலக்கியத்திற்கான மின் அகராதி தயாரித்தல்


15.00 - 15.30
Coffee Break

15.30 - 17.00 Chair:M. Ganesan
Session A8: Morphology and Tagger i) Achutan Menon et al. (Leiden, Netherlands & Amrita Univ, Coimbatore, India) Amrita Morph Analyzer and Generator for Tamil : a rule based approach ii) Anand Kumar, M (Amrita Univ, Coimbatore, India) A novel approach to Morphological Analysis of Tamil iii) Dhanalakshmi, V (Amrita Univ, Coimbatore, India) POS Tagger and chunker for Tamil Language


15.30 - 17.00 Chair:Balasundara Raman
Session B8: Open source keyboard interface, Unicode font in Mac OS & Dictionary Database i) A. G. Ramakrishnan: பன்மொழி வாயில் : An Open Source Multilingual Indic Keyboard Interface ii) Muthu Nedumaran: Building Tamil Unicode Fonts for Mac OS Xiii) Harold F. Schiffman: & Vasu Renganathan The English Dictionary of Tamil Verbs: What can we learn about structure of Tamil from Electronic Databases?


17.00 - 18.00
Closing Session

வெள்ளி, 23 அக்டோபர், 2009

ஐ.ஒ இல் இலங்கை மீதான தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

22 October, 2009 by admin

இலங்கை குறித்து கடந்த ஒரு வருடமாக புலன் விசாரணை நடத்திய ஐரோப்பிய ஆணையம் தனது அறிக்கையை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டிருந்தது. அதில் இலங்கை மனித உரிமைகளை மீறியமை தெட்டத்தெளிவாக நிரூபிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது, எனவே ஐ.ஒ வழங்கும் ஏற்றுமதி வரிச்சலுகை ரத்துச் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகப் பேசப்பட்டது.

இன்று கூடிய ஐ.ஒ பாராளுமன்றத்தில் இலங்கை மீதான தீர்மானங்கள் குறித்த வாதம் நடந்து அத்தீர்மானம் சற்று முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்த போது 60 வாக்குகள் தீர்மானத்துக்கு ஆதரவாக கிடைத்தன, எதிராக ஒரு வாக்கும் கிடைக்கவில்லை. மூன்று உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை இறுதி தீர்மானத்தில் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் குறித்து சேர்க்கப்பட்டிருந்த சில குறிப்புகளை அழிக்க வேண்டும் என ஒரு நா.உ கேட்டார். அவரது கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 1424
ஈழத் தமிழர்களுக்கு ஆயுதம் வழங்கி போராட்டத்தை தீவீரப்படுத்துவோம் ‐ நக்சல்

22 October, 2009 by admin

hmmவன்னிப் போருக்குப் பின்னர் அப்போர் குறித்தும், முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்கள் குறித்தும் உலகெங்கிலும் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கணபதி இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியுள்ள நேர்காணலில், முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் மக்களை விடு விக்காவிட்டால் நாங்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி ஈழ விடுதலைப் போரை முன்னெடுக்க உதவுவோம் என்றிருக்கிறார்

கணபதி மேலும், உலகிலேயே மிகப்பெரிய இனப்படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இலங்கை அரசு கம்பிவேலிக்குள் அடைத்து சித்திரவதை செய்வதை அறிந்து வேதனைப்படுகிறோம். அவர்களுக்கு நாங்கள் நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திரப் போராட்டத்தை தீவீரப்படுத்துவோம். இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் வகுத்து வருகிறோம். அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள் கொடூர சித்திரவதை செய்யப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதி நவீன படகுகள் மூலம் கடல் வழியாக ஆயுதங்களை இலங்கைக்குக் கொண்டு செல்வோம்.இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் இலங்கை இராணுவத்தினர் அங்குள்ள பெண்களை பாலியல் வன்முறை செய்யமாட்டார்கள். இளைஞர்களையும் சுட்டுக் கொல்ல மாட்டார்கள். எனவே எங்களிடம் உள்ள நவீன ஆயுதங்களை தமிழர்களுக்கு வழங்குவோம். சித்திரவதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆயுத உதவி செய்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இதற்கென்று தனிக் குழுக்களை ஏற்படுத்தி உள்ளோம். எங்களது நக்சலைட் இயக்கத்தில் தமிழகம், கேரளாவைச் சேர்ந்த நிறைய இளைஞர்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளோம். இதற்காக தமிழகம் கேரளா எல்லைப் பகுதிகளில் விரைவில் முகாம்கள் அமைப்போம். நாங்கள் தற்போது மேற்குவங்கம், ஒரிஸ்ஸா, பீகார்,ஜார்காண்ட், மாநிலங்களில் பலத்துடன் உள்ளோம். தென் மாநிலங்களில் எங்கள் அமைப்பை பலப்படுத்தும் பணியை தீவீரப்படுத்தியிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். மக்களை தொடர்ந்தும் அடைத்துவைத்திருப்பதன் மூலம், திரும்பவும் ஒரு ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என அமெரிக்க எச்சரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 7834
வீரகாவியமாகிய 21 கரும்புலிகளின் 2ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று

22 October, 2009 by admin

2007 அக்டோபர் மாதம் 22ம் திகதி அனுராதபுரம் விமானப் படை முகாம் மீது விடுதலைப்புலிகள் வான் மற்றும் தரைவழியில் மேற்கொண்ட தாக்குதலில் 21 கருப்புலிகள் வீரகாவியமாகிய நாள் இன்று. இலங்கை இராணுவ முகாமின் சில பகுதிகளை பல மணிநேரமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கரும்புலிகள் இறுதியில் வீரச்சாவை தழுவிக்கொண்டனர். இவர்களால் பல போர் விமானங்களும் இலங்கை அரசின் ஆயுதக்களஞ்சியங்களும் தாக்கியழிக்கப்பட்டன.

அம் மாவீரர்களை நினைவு கூரும் இந்நாளில் அவர்களின் இலட்சிய பயணத்தில் நாமும் பங்குகேற்போம் என்ற உறுதி எடுத்துக்கொள்வோம்

அதிர்வு இணையம் இச் செய்தியை காலையில் பிரசுரித்திருந்தாலும், தொழில் நுற்ப்ப தவறு காரணமாக இச் செய்தி பிரசுரமாகவில்லை. அதிர்வின் வாசகர் ஒருவர் சுட்டிக்காட்டியதால், இதனை மீள் பிரசுரம் செய்கிறோம்..

அதிர்ச்சியூட்டும் மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

22 October, 2009 by admin

இதுவரை பாராத அதிர்ச்சியூட்டும் கொடூரமான சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிற இணையத்தளங்களில் இப் புகைப்படங்கள் வந்திருக்கிறதா எனத் தெரியாதபோதும், இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட உடலங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் சில உடலங்களும், மார்பில் சிகரெட்டால் சுடப்பட்டு மேலும் சித்திரவைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட இந்த உடலங்களின் புகைப்படங்கள் இன்று கிடைக்கப்பெற்றுள்ளன.

இக் கொலைகள் எப்போது நடைபெற்றன என்ற விவரத்தைப் பெறமுடியவில்லை. தற்போது சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் இவ்வாறு படுகொலை செய்ததா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆதலால் இந்தப் புகைப்படங்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தால் எம்முடன் தொடர்புகொள்ளுங்கள், வாசகர்களே.

பெண்கள் உட்பட சுமார் 4நால்வர் இங்கு கொலைசெய்யப்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் இவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கான சான்றுகள் இவர்கள் உடல்களில் இருக்கின்றன. எனவே இது குறித்த தகவல் யாருக்காவது தெரியும் என்றால் அதிர்வுடன் தொடர்புகொள்ளவும்.

athirvu@gmail.com






Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 6986
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' -143: இந்தியாவில் அரசியல் மாற்றம்!



வி.பி.சிங்
அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், அவ்வாறு நடந்து கொண்டிருக்கவும், அமைதிப்படையால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய ராணுவத்தினருடன் ஏற்படப் போகும் மோதலைத் தவிர்க்க பிரபாகரன் விரும்பினார். எனவே, அவர் இருவகையான யோசனைகளை வெளியிட்டார். ஒன்று, தமிழ் தேசிய ராணுவத்தினர், அவ்வமைப்பில் இருந்து தானாக வெளியேறுவது, இரண்டாவதாக இந்த அழைப்புக்குப் பலன் ஏற்படாத நிலையில், ஏற்படப்போகும் மோதலில் சிங்களப் படையினர் கலந்துகொள்ளாது ஒதுங்கியிருக்க வேண்டும் என்பதாகும். எனவே, இரண்டாவது கோரிக்கையை பாலசிங்கம் மூலமாக இலங்கை அதிபர் பிரேமதாசாவுக்குத் தெரியப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய ராணுவத்தினருக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார். அவ்வேண்டுகோளில், ""பலாத்காரமாக சேர்க்கப்பட்ட இளைஞர்களாலும் நிர்ப்பந்தத்தின் பேரில் சேர்ந்துகொண்ட இளைஞர்களாலும் தொடங்கப்பட்ட தமிழ் தேசிய ராணுவம், இன்று ஓர் இக்கட்டான நிலையில் உள்ளது. அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அமைதிப்படை வெளியேறியதைத் தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் அப் படைப்பிரிவிலிருந்து வெளியேறி எம்மிடம் சேர்ந்துள்ளார்கள். தற்போது மட்டக்களப்பிலிருந்தும் அமைதிப்படை வெளியேறுகிற நிலையில், தமிழ் தேசிய ராணுவத்தினரைக் குற்றவாளிகளைப் போல லாரிகளில் ஏற்றி திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. நாளை திருகோணமலையிலிருந்தும் அமைதிப்படை வெளியேறும். அப்போது தமிழ் தேசிய ராணுவத்தினரை இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்போவதில்லை. மாறாக அவர்களை விடுதலைப் புலிகளுடன் போரிடுமாறு உத்தரவிடப் போகிறது. அப்படியொரு யுத்தம் நேரிட்டால் வீணாகச் செத்துமடியப் போகிறீர்கள். எனவே, தமிழ் தேசிய ராணுவத்தில் அங்கம் வகிக்கும் இளைஞர்களே, இன்னும் சில நாள்களில் அமைதிப்படையால் பூரணமாகக் கைவிடப்படப்போகும் நீங்கள் தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து குற்றச் செயல்களைப் புரிந்துகொண்டு இருக்காது, உடனடியாக ஆயுதங்களுடன் வந்து சரணடையுங்கள். அதன் மூலம் தமிழீழப் போராட்டத்தில் நீங்களும் பங்காளிகளாக மாற முடியும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது (விடுதலைப் புலிகள் அறிக்கை: 30-11-1989). விடுதலைப் புலிகளின் வேண்டுகோளை அடுத்து, ஏராளமான தமிழ் தேசிய ராணுவத்தினர் மட்டக்களப்புப் பகுதியில் சந்திரவெளி, முனைக்காடு, அம்பலாந்துறை, வண்டாருமுனை, மணல்பட்டி, வாழைச்சோனையிலும், திருகோணமலையில் கின்னியா, தம்பலகாமம் எனும் இடத்திலும், கிளிநொச்சியில் கல்முனை, உண்ணிச்சை பழுகாமம், மண்டூர், தம்பிலிவில் மற்றும் வவுனியாவில் குழுமாட்டுச் சந்திப்பிலுமாக ஈபிஆர்எல்எஃப், ஈஎன்டிஎல்எஃப் அணியைச் சேர்ந்தோர் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் கிடைத்தன. மீதமிருந்த தமிழ் தேசிய ராணுவத்தினர் மீது முதலில் அம்பாறையிலும் பின்னர் மட்டக்களப்பிலும் புலிகள் இயக்கம் தாக்குதலைத் தொடுத்தது. இத் தாக்குதலின் காரணமாக பல ராணுவத் தளங்கள் விடுதலைப் புலிகள் வசமாயின. ஏராளமான இளைஞர்கள் சரணடைந்தார்கள். இறுதியில், ஈபிஆர்எல்எஃப்பின் தீவிர உறுப்பினர்கள் மட்டுமே புலிகளை எதிர்த்தனர். சரணடைந்த தமிழ் தேசிய ராணுவத்தினரை கிழக்கு மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களை அழைத்து அவர்கள் வசம், அவர்களது பிள்ளைகளை ஒப்படைத்தனர். கிழக்கு மாகாணத்தில் அமைதிப்படை வெளியேறிய இடங்களில் எல்லாம், புலிகள் ஆயுத பலத்தால் தங்களின்வசம் கொண்டுவருவதை கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் எதிர்த்தார். இதுகுறித்து ராஜீவ் காந்தியிடமும் பிரேமதாசாவிடமும் மனுப் போட்டு முறையிட்டார். வரதராஜ பெருமாளின் மனுமீது எந்த நடவடிக்கையும் எடுக்க விருப்பமில்லாத நிலையில் பிரேமதாசா இருந்தார். நடவடிக்கை எடுக்க ராஜீவ் காந்தி விரும்பினாலும் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஆயுதம் வாங்கிய விவகாரத்தில் எழுந்த கடுமையான பிரசாரம் போன்ற காரணங்களினால், இந்தப் பிரச்னையில் தீவிரக் கவனம் செலுத்த முடியாதவராக ஆனார்.இந்திய அரசியலிலும் மாற்றம் நிகழவிருந்தது. நாடாளுமன்றத்துக்கு டிசம்பரில் தேர்தல் நடக்கவிருந்தது. காங்கிரûஸ வீழ்த்த கூட்டணியால்தான் முடியும் என்று, அதே 1977-வது ஆண்டு சூத்திரப்படி, முன்னாள் காங்கிரஸ்காரரான வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி என்ற பெயரில் களம் அமைத்தனர். திமுக, தெலுங்குதேசம், அகாலிதளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேசிய முன்னணி என்ற அமைப்பில் சேர்ந்து, ஒரே குடையின் கீழ் தேர்தலைச் சந்தித்தனர். தேர்தல் முடிவில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. தேசிய முன்னணி சார்பில் வி.பி.சிங் பிரதமரானார் (டிசம்பர் 2, 1989). வி.பி.சிங் ஆட்சிப் பொறுப்பேற்றதும், இலங்கைத் தமிழர்களின் பிரச்னையில், அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. "ராஜீவ் காந்தி ஸ்ரீலங்காவில் தலையிட்டமை ஒரு பெரிய ராஜதந்திரத் தவறுதலாக' வி.பி.சிங் அரசு கருதியது என அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிடுகிறார். அவர் மேலும் இதுகுறித்து குறிப்பிடுகையில், "ராஜீவ் காந்தி புரிந்த தவறு நீடித்துச் செல்லக்கூடாது என்பதில் வி.பி.சிங், உறுதியாக இருந்தார். 1990 மார்ச் 31-க்குள் இந்திய அமைதிப்படையின் கடைசிச் சிப்பாய் இந்தியா திரும்புவார்' எனவும் தேதி நிர்ணயமானதாகவும் தெரிவித்திருக்கிறார்.பிரேமதாசாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கிடையே பிரபாகரனின் குடும்பத்தினர் கொழும்பு விமான நிலையத்தில் வந்து இறங்கினர். இதற்கு முன்பு, 1987 அக்டோபரில் அமைதிப்படை தொடுத்த யுத்தத்தின்போது, யாழ் மக்களோடு மக்களாக நல்லூர் கந்தசாமி கோயிலில் தங்கியிருந்த பிறகு, மதிவதனியும் குழந்தைகளும் எங்கு சென்றார்கள் என்று குறிப்பு எதுவும் இல்லை. தற்போது, இவர்கள் பிரபாகரனுடன் சேர்ந்து வாழ, அடேல் பாலசிங்கம் வழியமைத்துக் கொடுத்தார். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து, பாஸ்போர்ட் ஒழுங்குகள் செய்யப்பட்ட பின்னர், இவர்கள் கொழும்பு வந்து சேர்ந்தனர். இவர்களைக் கொழும்பு விமானநிலையத்திலிருந்து வன்னியிலுள்ள அலம்பில் பகுதிக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் வசதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையிலும், அமைதிப்படையினருடன் மோதலில் ஈடுபட்டதாக விடுதலைப் புலிகளின் 22-1-1990 தேதியிட்ட செய்திக் குறிப்பு கூறுகிறது. இந்த அறிக்கையில் துரோகச் செயலில் ஈடுபட்ட ஈஎன்டிஎல்எஃப் கும்பல், விடுதலைப் புலிகளுடன் தாக்குதலில் ஈடுபட்டபோது, இவர்களுக்கு உதவ நாவற்குழி முகாமில் இருந்து வெளியேற முயன்ற அமைதிப் படையினரை, வெளியே வர வேண்டாமென விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் இந்த வேண்டுகோளையும் மீறி ஜீப் வண்டி சகிதமாக வந்த இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதில், வண்டி எரிந்து சேதமானதுடன், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாயினர். இந்தச் சம்பவத்தையடுத்து, அரியாலை முகாமிலிருந்தும் அமைதிப்படையினர் வெளியே வந்தபோது, அவர்களையும் வெளியேற வேண்டாம் என புலிகள் வேண்டுகோள் விடுத்தும், வெளியேறியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்தப் போக்கு எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து பழ.நெடுமாறன் எழுதிய "இந்தியப் படையே வெளியேறு' நூலில் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். "சில இந்தியத் தளபதிகள் இவ்வளவு காலம் போராடி ஆயிரக்கணக்கான வீரர்களைப் பலிகொடுத்த பிறகும், மூவாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டபிறகும் எதையும் சாதிக்காமல் திரும்புவது தலைகுனிவானது என நினைக்கிறார்கள். எனவே, அவர்கள் போரைத் தொடர்ந்து நடத்தவேண்டுமென வற்புறுத்துகிறார்கள். இந்தத் தளபதிகளில் பெரும்பாலானோர் மேற்கு மற்றும் மத்திய இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதுவரை இந்திய ராணுவத்திலுள்ள அதிகாரிகள் தமிழர்களை வீரப் பரம்பரை என்று ஏற்றுக்கொண்டதே இல்லை. எனவே இப்போதும் அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்' என்று பழ.நெடுமாறன் குறிப்பிட்டுள்ளதை இங்கு பதிவு செய்வது தேவையாகிறது
தலையங்கம்: ஏழையின் துன்பம்



உலகத்தில் உள்ள பெரும் பணக்காரர்களைப் பட்டியிலிட அமைப்புகள் இருக்கின்றன. அப்படிப் பணக்காரர்களை அடையாளம் காண்பதும் பட்டியலிடுவதும் மிகவும் சுலபமும்கூட. ஆனால் ஓர் ஏழை யார் என்று தீர்மானிப்பதுதான் மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது. அதைத் தீர்மானிப்பவர்களும் ஏழையைப் பற்றி அதிகம் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள் (ஆடக) யார் என்பதற்கான கணக்கெடுப்பை நடத்தும்போது யாரை வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவராகக் கருதலாம், யாரை நீக்கிவிடலாம் என்பதற்கான சில வரையறைகளை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் அறிவித்துள்ளது.இந்த வரையறைகள் பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் உள்ள வசதிகள் (டிவி. சமையல் இணைப்பு, மின்வசதி உள்பட), வருமானம், படித்தவர் எண்ணிக்கை, குடும்ப அங்கத்தினர் எண்ணிக்கை எனப் பலவாறாக நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு மதிப்பெண் கொடுக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரா, மிகவும் பிற்படுத்தப்பட்டவரா, நிலமற்ற விவசாயக் கூலியா, சாதாரணத் தொழிலாளியா, சுயதொழில் செய்பவரா, வீட்டில் 5-வது வகுப்பு வரை படித்தவர்கள் எத்தனை பேர், யாருக்காவது டிபி, எய்ட்ஸ், ஊனம் உள்ளதா, குடும்பத்தலைவர் 60 வயதுக்கு மேற்பட்டவரா என்பது போன்ற கேள்விகளுக்கு மொத்தம் 20 மதிப்பெண் வழங்கி, 17 மதிப்பெண் கிடைத்தால் அவர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர் என்று தீர்மானிப்பார்களாம். இந்த மதிப்பெண் முறை தவறானது என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.இது ஒருபுறம் இருக்கட்டும். வறுமைக் கோட்டிற்குக் கீழ் வராதவர் என்று நீக்கிவிடுவதற்கு ஐந்து வரையறைகள் தந்துள்ளனர். அவை: குடும்பத்தின் மாதச் சம்பளம் ரூ. 5,000-க்கு அதிகம், இரண்டு சக்கர வாகனம் வைத்திருத்தல், பண்ணை இயந்திரங்கள் வைத்திருத்தல், நிரந்தர வசிப்பிடம் இருத்தல், அந்த மாவட்ட விவசாயிகளுக்கான சராசரி நிலம் உடையவர் என இந்த ஐந்து வரையறையில் ஏதாவது ஒன்று இருந்தாலும் அவரை வறுமைக் கோட்டிற்குக் கீழ் சேர்க்கத் தேவையில்லை.இதில் சிக்கலானதும், அனைவருடைய ஆட்சேபத்துக்குரியதுமான விவகாரம் ஒரு குடும்பத்தின் மாத வருவாய் ரூ. 5,000 என்று வரையறுக்கப்பட்டிருப்பதுதான். ஒரு கட்டடத் தொழிலாளிக்கு நாள்கூலி ரூ. 200 கிடைக்கிறது என்பதற்காக அவரது மாத வருவாயை ரூ. 6,000 என்று கணக்கிட்டு, அவரை ஏழைகள் பட்டியலிலிருந்து நீக்கிவிடுவது என்பது பேதைமையிலும் பேதைமை.தற்போது தமிழக அரசின் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டுவருவாய் ரூ. 72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற கணக்கீடும் இந்த அடிப்படையில்தான் என்பதைப் பார்க்கும்போது, வேதனையாக இருக்கிறது.ஒருவர் நிரந்தரமான வேலையில் இருக்கிறாரா, தாற்காலிக வேலையில் ஈடுபடுகிறாரா, அவரது தொழில் பருவகாலத்தைச் சார்ந்ததா அல்லது தினமும் செய்யக் கூடியதா, அவருக்கு வேலை கிடைக்காத நாள்கள் எத்தனை என்பதையெல்லாம் நிதானமாகக் கணக்கிட்டு, அந்தக் குடும்பத்தின் வருவாயைத் தீர்மானிக்கும் பொறுமை, அங்கே கணக்கெடுக்க வருபவருக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான். அவர்களாகத் தோராயமாக வருமானத்தை எழுதிக்கொள்வதுதான் நடைமுறையாக இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் சித்தாள் வேலைக்குப் போவதாகச் சொன்னால், உடனே அந்தக் குடும்பம் வறுமைக்கோட்டிற்கு மேலே போய்விடும்!ஓர் ஏழையை "வறுமைக் கோட்டிற்குக் கீழ்' தள்ளிய பெருமை அமெரிக்கக் கலாசாரத்துக்குச் சொந்தமானது. நான்கு பேர் உள்ள ஒரு குடும்பம் ஆடம்பரமில்லாத, குறிப்பிட்ட கலோரி உணவுக்காக மாதம் எத்தனை ரூபாய் செலவிடுமோ அந்தத் தொகையின் மூன்று மடங்கு தொகையை வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவருக்கான வருமானமாகத் தீர்மானிப்பது அமெரிக்கப் பொருளாதாரம். அவர்களைப் பொருத்தவரை உணவு, மருத்துவம், கல்வி ஆகிய மூன்றும்தான் வாழ்க்கைச் செலவு. அதற்காக வருவாயை மூன்று சமபங்குகளாகப் பிரித்துக் கணக்கிடப்படுகிறது.இந்திய வாழ்க்கை முறை வேறானது. இங்கே கொடுக்கப்படும் முன்னுரிமைகளும் வேறானவை. இங்கே ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடனே சேமிக்கத் தொடங்கினால்தான் கல்யாணம் செய்துதர முடியும். அரசுப் பள்ளிகளில் கல்வி இலவசமாக இருக்கலாம். ஆனாலும் குழந்தை ஈட்டும் வருமானம் குடும்பத்துக்கே அவமானம் என்று ஏற்று, ஒரு சிறு வருமானத்தை இழந்தால்தான் ஒரு குழந்தைக்குக் கல்வி வாய்ப்பே கிடைக்கும். ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் அரசு வழங்கிய இலவச டிவி இருக்கிறது. இந்த டிவிகளில் சீரியல் பார்க்க வேண்டுமானால் கேபிள் கட்டணங்கள் கட்ட வேண்டும். அதற்கு மின்கட்டணம் செலுத்த வேண்டும். தொழில் செய்வதற்காக ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கு ஆகும் போக்குவரத்துச் செலவுகள் எல்லாம் தனிச்செலவுகள். ஏழைகளின் நல்வாழ்வுக்காகத் திறக்கப்பட்டுள்ள அதிக லாபத்தில் விற்கப்படும் மதுபான-மருந்து?-கடைகள் வேறு! ஓர் ஏழை எப்போதும் ஏழையாக இருப்பதற்கான எல்லாச் சூழலையும் ஏற்படுத்திவிட்ட பின்னர், எதற்காக இந்த வருமான வரம்புகள்?வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் வழங்கப்படுகிறது என்பதால்தான் இவ்வளவு கறாராக வருமானத்தைத் தீர்மானிக்கிறார்கள். இன்றைய விலைவாசியில் குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ. 1 லட்சம் என்றாலும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள்தான் என்பதை ஏன் அரசு நினைக்க மறுக்கிறது.அமைச்சகம் தந்துள்ள இன்னொரு சலுகை: யார் ஏழை என்பதைத் தீர்மானிப்பதில் அந்தந்தப் பஞ்சாயத்து அல்லது கிராமசபை தீர்மானிக்கலாம் என்பதுதான். இந்த வரத்தை அனைத்துப் பஞ்சாயத்துகளும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் - விழிப்புணர்வை ஏற்படுத்தினால், ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் தொடர்ந்து கிடைக்கும்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஏன்?
கருணாநிதி விளக்கம்



சென்னை, அக். 21 ""தமிழகத்தில் 2011-ல் தேர்தல் நடைபெற இருப்பதால், வரும் ஜூனில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற இருக்கிறது'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதன் காரணமாகவே, 2011-ல் மாநாட்டை நடத்தலாம் என்ற உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் யோசனையை ஏற்க முடியவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் கருணாநிதி விடுத்த அழைப்பை, அதிமுக, மதிமுக ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்த மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது என கூறப்பட்டது.
இதற்கு விளக்கம் அளித்து முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ""உலகத்தமிழ் மாநாட்டை அறிவிக்க வேண்டியது "சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம்' தான் என ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரது ஆட்சியில் தஞ்சையில் நடத்திய எட்டாவது உலகத் தமிழ் மாநாடு எந்த வகையிலும் முன்மாதிரியாக அமைந்திடவில்லை. எட்டாம் உலகத் தமிழ் மாநாடு 1994-ல் தமிழகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 1995-ம் ஆண்டு ஜனவரியில்தான் மாநாடு நடத்தப்பட்டது.
எட்டாம் உலகத் தமிழ் மாநாடு குறித்து அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட அறிவிப்பு தன்னிச்சையான அறிவிப்பே தவிர, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் அறிவிக்கவில்லை.
தேர்தல் காரணமாக... மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ள கட்டுரைகளைத் தயாரித்திட ஆய்வாளர்களுக்குப் போதிய கால அவகாசம் தேவைப்படும் என்வும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் விடுமுறைக் காலம் ஜூன் - ஜூலையில் அமைகிறது என்பதாலும் 2010 ஜனவரிக்குப் பதிலாக, ஜூன் - ஜூலையில் நடத்தலாம் என்ற தமிழறிஞர்கள், ஆய்வாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
"தமிழகத்தில் மாநாட்டினை 2011 ஜனவரியில் நடத்தலாம்' என்று உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவராக உள்ள நொபுரு கரஷிமா கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், 2011 ஏப்ரல் - மே மாதங்களில் சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற இருப்பதால், அவரது கருத்தினை ஏற்றுச் செயல்படுவதில் பிரச்னைகள் உள்ளன.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கு, உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் பொறுப்புகளில் உள்ள 9 பேரில் 6 பேர் இசைவு அளித்துள்ளனர்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு... 1995-க்குப் பிறகு கடந்த 14 ஆண்டுகளாக உலகின் எந்தப் பகுதியிலும் தமிழுக்கென்று ஒரு மாநாடு நடைபெறவில்லையே என்ற குறையைத் துடைக்கவும்; அண்மைக்கால தொல்லியில், வரலாற்றியல், மொழியியல் ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு தமிழ் மொழி இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கும்; உலகளாவிய நிலையில் தமிழ் மொழி இலக்கியப் பண்பாடு தொடர்பான ஆய்வாளர்களை ஒருங்கிணைப்பதற்கும், அவர்கள் அனைவரும் ஓரிடத்திலே கூடிச் சிந்திக்கவும் வசதியாக இந்த மாநாட்டை நடத்த தமிழக அரசு முன்வந்திருக்கிறது.
அரசியல் உள்நோக்கம் இல்லை... மாநாட்டை நடத்துவதில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை. தமிழ், தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆய்வு, தமிழ் அறிஞர்கள் தொடர்பானவற்றில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போன்றவர்கள் முதன்மையான எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்'' என முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துக்கள்
யார் மாநாடு நடத்தினாலும் ஆளுங்கட்சியின் துதிபாடிகள் நடத்தும் இரைச்சலாகத்தான் இருக்கும். எனவேதான், தமிழினப் படுகொலைகள் நடந்துள்ள துயரச்சூழலில் வன்கொடுமை வதை முகாம்களில் ஈழத்தமிழர்கள் அடைபட்டுள்ள சூழலில் இம்மாநாடு தேவையில்லை எனப் பெரும்பான்மையர் கருதுகின்றனர். இருப்பினும் திட்டமி்ட்டபடி மாநாட்டைக் கலைஞர் நடத்துவார். எனவே, இதனை ஆரவார மாநாடாக நடத்தாமல் தமிழின மீட்சிக்கும் தமிழ்மொழி மேம்பாட்டிற்கும் வழிவகை காணும் உலகக் கருத்தரங்கமாக நடத்தலாம். தமிழர் தாயகத்தை உடனே அமைத்திட உலக நாடுகளின் ஒப்புதலைப் பெற உதவிடும் உரிமைக் காப்பு மாநாடாக நடத்தலாம். செம்மொழி அறிந்தேற்பிற்குப்பின் எதிர்பார்த்தவாறான ஆக்கமுறையான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, உலக நாடுகளில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த்துறை தொடங்கிட நடவடிக்கை எடுக்கலாம். மத்திய அரசின் தமிழ்ப் பகைப் போக்கைப் போக்கிட வழிவகை காணலாம். இன்றைய சூழலில் இவற்றிற்கான வழிவகை இல்லை என்பதே உண்மை என்பதால் அதற்கேற்ற சூழலை உருவாக்க முதலில் முயல வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2009 2:37:00 AM

இதுவரை நடந்திருக்கிற உலகத் தமிழ் மாநாடு எதிலுமே தமிழ்மாண உரிமைப் பண்பாடு என்பதை எந்த ஈர வெங்காயமும் திட்டவட்டமாக தெளிவுபடுத்தவில்லை. அப்படி எந்த அக்கறையும் இல்லை. மதுரை மாநாட்டில் பாவலரேறு அய்யாவுக்குப் பதிலாக அனுமதிக்கப்பட்ட திரு.காளிமுத்து அவர்களின் உரை மட்டுமே சிறிது ஆறுதலாக இருந்தது. ஒப்பியன் மொழிநூலை செய்த மொழிநூல் மூதறிஞர் தேவநேயப் பாவாணர் அவர்களை ஆதரிக்காமல் இருட்டடிப்பு செய்தார் கருணாநிதி. எம்ஜிஆர் தான் பாவாணரை அன்புடன் ஆதரித்தார். குமரிக்கண்டத்தின் உண்மை பற்றி அமெரிக்க தொல்லியல் ஆய்வுக் கழகம் இந்துமாக்கடலில் ஆய்வுசெய்து ஒருவரைபடத்தையே உருவாக்கிவிட்டது. இதுகூடத் தெரியாமல் எத்தனையோ முண்டங்கள் குமரிக்கண்டம் ஒரு கற்பனைதான் என்று வரலாற்றுத் துரோகம் செய்கிறார்கள். செம்மொழி மாநாட்டில் என்ன கிழிக்கப் போகிறார்களோ?

By செவ்வேலர்-திருப்பூர்
10/22/2009 11:23:00 PM

இதுவரை நடந்திருக்கிற உலகத் தமிழ் மாநாடு எதிலுமே தமிழ்மாண உரிமைப் பண்பாடு என்பதை எந்த ஈர வெங்காயமும் திட்டவட்டமாக தெளிவுபடுத்தவில்லை. அப்படி எந்த அக்கறையும் இல்லை. மதுரை மாநாட்டில் பாவலரேறு அய்யாவுக்குப் பதிலாக அனுமதிக்கப்பட்ட திரு.காளிமுத்து அவர்களின் உரை மட்டுமே சிறிது ஆறுதலாக இருந்தது. ஒப்பியன் மொழிநூலை செய்த மொழிநூல் மூதறிஞர் தேவநேயப் பாவாணர் அவர்களை ஆதரிக்காமல் இருட்டடிப்பு செய்தார் கருணாநிதி. எம்ஜிஆர் தான் பாவாணரை அன்புடன் ஆதரித்தார். குமரிக்கண்டத்தின் உண்மை பற்றி அமெரிக்க தொல்லியல் ஆய்வுக் கழகம் இந்துமாக்கடலில் ஆய்வுசெய்து ஒருவரைபடத்தையே உருவாக்கிவிட்டது. இதுகூடத் தெரியாமல் எத்தனையோ முண்டங்கள் குமரிக்கண்டம் ஒரு கற்பனைதான் என்று வரலாற்றுத் துரோகம் செய்கிறார்கள். செம்மொழி மாநாட்டில் என்ன கிழிக்கப் போகிறார்களோ?

By செவ்வேலர்-திருப்பூர்
10/22/2009 11:22:00 PM

** குஞ்சரின் பார்வையில் கலைஞர் சிந்தனை! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் -3 (தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு இங்கு யாருமே இல்லையென்று தான்...) **ஈழமக்களின் மெளனத்தின் பின்னணி! **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/22/2009 11:07:00 PM

vimarsanam saeivathai maanadu mudinthapin saeivathae nallathu. Maanadu mudinthapinnarthan- maanadu eppadi, yarukkaga, etharkaga nadathappattathu enbathu theriyum - athuvarai, please, vimarsanam vaendamae. MOHANARENGAN SRINIVASAN

By MOHANARENGAN SRINIVASAN
10/22/2009 10:46:00 PM

இதுவரை நடந்திருக்கிற உலகத் தமிழ் மாநாடு எதிலுமே தமிழ்மாண உரிமைப் பண்பாடு என்பதை எந்த ஈர வெங்காயமும் திட்டவட்டமாக தெளிவுபடுத்தவில்லை. அப்படி எந்த அக்கறையும் இல்லை. மதுரை மாநாட்டில் பாவலரேறு அய்யாவுக்குப் பதிலாக அனுமதிக்கப்பட்ட திரு.காளிமுத்து அவர்களின் உரை மட்டுமே சிறிது ஆறுதலாக இருந்தது. ஒப்பியன் மொழிநூலை செய்த மொழிநூல் மூதறிஞர் தேவநேயப் பாவாணர் அவர்களை ஆதரிக்காமல் இருட்டடிப்பு செய்தார் கருணாநிதி. எம்ஜிஆர் தான் பாவாணரை அன்புடன் ஆதரித்தார். குமரிக்கண்டத்தின் உண்மை பற்றி அமெரிக்க தொல்லியல் ஆய்வுக் கழகம் இந்துமாக்கடலில் ஆய்வுசெய்து ஒருவரைபடத்தையே உருவாக்கிவிட்டது. இதுகூடத் தெரியாமல் எத்தனையோ முண்டங்கள் குமரிக்கண்டம் ஒரு கற்பனைதான் என்று வரலாற்றுத் துரோகம் செய்கிறார்கள். செம்மொழி மாநாட்டில் என்ன கிழிக்கப் போகிறார்களோ?

By செவ்வேலர்-திருப்பூர்
10/22/2009 10:33:00 PM

....CAN ANYONE TELL WHAT THIS CLOWN AND CORPSE KARUNANIDHI HAS DONE TO TAMILA LANGUAGE AND TAMIL RACE.....??????WRITING FEW STORIES AND POEMS IS NOT A CONTRIBUTION...MANY PEOPLE CAN DO THIS BUT THEY HAVE NO PUBLICITY.FIRST YOU MUYT KNOW HOW TO TALK AND WRITE TAMIL THEN THINK ABOUT THIS "SEMMARI" CONFERENCE...IF THERE IS A NOBEL PRICE FOR UNWORTHY,UNRELIABLE PERSON THIS SHOULD GO TO THIS CORPSE KARUNANIDHI WHO WAS ALSO RESPNSIBLE FOR THE BUTCHERING OF 10000 s OF SL TAMILS JUST FOR THIS TEMPORARY CHIEF MINISTER POST...THE SO CALLED LEADERS IN TAMIL NADU(?) IN THE PAST 60 YEARS HAVE DONE THEIR BEST TO ANGLISED TAMIL LANGUAGE,WORSHIP OF CINEMA STAR CULTURE,AND EVERGROWING CASTE...TAMILS OUT SIDE INDIA HAVE MADE MANY GREAT CONTRIBUTIN FOR TAMIL LANGUGE.TODAY IN ANY COUNTRY SMALL OR BIG IF THEY TALK ABOUT TAMIL AND TAMILS THEIR FINGER WILL INDICATE SRI LANKA.OUTSIDE WORLD INDIA MEANS HINDI AND HINI MOVIES,CULTURE AND FOOD.

By KOOPU
10/22/2009 8:03:00 PM

don't only blame karunanidhi, he also one of them but the main culprit is our country india thy r the real villains of tamilians, so hereafter hoist black/karuppu flag on every independence day and republic day, thamilians are still slave to hindians better come out like georgia, ukraine we need freedom from the merciless

By barani
10/22/2009 7:19:00 PM

மானமுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரும் ந்த தமிழின துரோகி கருணாநிதியின், சுய விளம்பரத்திற்க்காக நடத்தப்பட போகும் இம்மாநாட்டை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.

By நாம் தமிழர் சீமான் படை
10/22/2009 6:34:00 PM

Karunanithi is a USELESS POLITICIAN, he is by right at this age should genuinely project him self as a EXAMPLERY LEADER/LEADERSHIP to the rest of politicians at least in TN but what is he doing?...One thing I'm very sure all his lengthy public service is definately a WASTE!WASTE!WASTE!

By Sandilyan, Singapore
10/22/2009 5:55:00 PM

yes karunanithy is ettappan ithu ondrum thevaiillai throki

By jothimani
10/22/2009 5:42:00 PM

WELL, THIS OCCASION CAN BE USED TO BRAND KARUNANIDHI AS THE MOST UNTRUSTABLE PERSON AND UNRELIABLE PERSON AND A NEW TITTLE NAMELY, TAMIL DROGHI, THE BEST TAMIL TRAITOR, ETTAPPAN'S ELDEST BROTHER, TAMIL-GENOCIDIST, EXCEEDINGLY SADIST, WHITE-LIAR, VEERAANAM KANDA PERIAAR, HAVEN OF SCANDALS AND BRIBERY ETC. PEOPLE SHOULD THINK, SO THAT 1001 TITLES OF SUCH CAN BE AWARDED TO HIM, SO THAT HE MAY LIVE PEACE AFTER DEATH.

By TAMILDROGI KARUNANIDHI
10/22/2009 5:16:00 PM

இல்லை இந்த மாநாட்டிலே தமிழைக் காக்கப் பிறந்ததாகக் கூறிக்கொள்ளும் கருணாநிதியின் தம்பி வைரமுத்து என்ன பேசுவார் என்று நினைக்கவே புல்லரிக்குது!

By வாடா மன்னாரு
10/22/2009 4:33:00 PM

Tamils will totally reject this throki's another ploy to divert attention of people who are dominated by the angish of the trajedy to thousands of their bretheren killed and many more thousands shut up behind barbed fences as animals. How does this rougue has the courage to call for tamil conference when he has actively participated with rajabakse, sonia for this genocide against tamils. He even has the guts to make his daughter give ponnadai to this killer... only solution for tamils is free elam and the tamil conference can wait till this liberation of the subjugation of 2 million tamils of lanka is obtained. That is the first priority to gather world opinion for action in international court for the massacare and democratically throw away this throgi power monger and cheap karunas. Tamil history will never forgice these ettappans. Valga tamil, velka sudanthira tamil eelam!!

By durai
10/22/2009 4:17:00 PM

A language does not stand itslef. it stands for people and it represents people and spoken by people. There is no need for a Tamil conference while Tamils are killed and maimed and made refugees in thier own land and living in open jails. This Crook Mu.Ka was behind the plot to kill Tamills with Rajapakse. What in the world the genuine tamil will appear on a stage with this crroked stooge??? They wont be real Tamils... A Tamil believes in real Tamils welfare. Not a fake crook selfish corrupted man.. I wonder these Tamil scholors will ever become true scholors with some integrity....

By Mu ka for Tamil destruction
10/22/2009 4:05:00 PM

Karunanidhe wants all the Tamils balls on the plate so all Tamils become slaves to him.. He wants power money and all for his children...no one in the human history was so greed and crooked like him. Tamil nadu people were converted like crooks after dravidian party rule for 40 years. Atleast MGR was was there and made sure this Mu.Ka Pervert was kept away and self exile. Now he is in full swing. What does he want for his family...greedy bastard....

By greedy karuna
10/22/2009 3:46:00 PM

Karu is a born fraud. He claimed that he was paid 50 lakhs for writing story and dialogues for one flop film and took award too for that. I enquired many in the cine field. They say a even writer who has written for 20 Super hit films is paid NOT MORE THAN 2 LAKHS!! THAT MEANS KARU ACCOUNTED THE BRIBE TAKEN FOR SETTING UP A WINE FACTORY AS the money paid for story writing! He 'got' award also for this fraud film! Now one more award function for himself at our cost!!!

By Johndass
10/22/2009 3:18:00 PM

Australian Gandhi alias Paid mama of karuna& co, tell me why, if it is only a Literary Conference, why MuKa invites people who have 'not even passed 9th std(Like himself)? Any expert means somebody who has at least a MA Degree in Tamil!!So by inviting other Politicians, Karu wants to conduct one more AWARD function for himself at our expense.Tell me now, how much you were paid for the Mama velai(like writing comments supporting frauds)

By VM
10/22/2009 3:11:00 PM

ஈழத் தமிழர்கள்தமிழக மீனவர்களின் அழிவை தடுக்காத இவருக்கு தமிழ் பேசக் கூட உரிமையில்லை. உலகத் தமிழர்கள் யாரும் இந்த மாநாட்டை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. உன் மீது படிந்த "துரோகி" கறை எத்தனை நூறு வருடங்கள் ஆனாலும் கழுவ முடியாது தன்னைப் பற்றி தமிழறிஞர்களை துதிபாட வைக்கத்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முதல்வர் கருணாநிதி நடத்துகிறார் மக்களை எப்படி கொடுமை படுத்துவது எப்படி கொல்வது , அதை எப்படி மூடி மறைப்பது என்பது பற்றி ஆராச்சி நடத்தவே இந்த மாநாடு

By usanthan
10/22/2009 1:48:00 PM

...TAMILS WHO CAN WRITE AND SPEAK PURE TAMIL ONLY HAVE THE RIGHT TO ORGANISE A CONFERENCE LIKE THIS...INDIAN TAMILS SPEAK AND WRITE TAMINGLISH...SUN TV PEROMOTE TAMINGLISH...BUT THIS LIVING CORPSE IS ORGANISING A CONFERENCE..WHY NOT INVITE RAJAPAKSE AND SONIA AS CHEI GUESTS...AS LONG AS INDIANS TAMILS ARE ILLITERATE AND LIVING IN POVERTY THIS SNAKE WILL TAKE THEM FOR A RIDE...AFTER ALL WHO VOTED FOR CASH AND GIFT?????FUTURE GENERATION WILL SPIT WHEN THEY HEAR HIS NAME...

By KOOPU
10/22/2009 12:08:00 PM

tamil has only two functions...One is for politicians...second one is for movies....that's it...imagine vivek and vadivel making jokes in english or hindi...do any of the clowns have future...Tamil has only functions ...just for the komaalis....then we tamils become the real slaves of the world very soon...as Karunas are removings the Balls of Tamils Race..

By remove the balls of Tamils
10/22/2009 11:34:00 AM

I read the above comments made by a number of people. I can clearly understand that they are immatured and emotional people. They do not understand the importance of Tamil and Karunanidhi's ability. They simply want to criticize without any valuable and acceptable reason. As we are having these kind of people, we are still in the developing stage.I highly appreciate the chief Minister's ability and skills. I welcome the Chief Minister's approach. I wish all matured educated and matured people should give full support for the chief Mister's action. Australian Gandhi, 22/10/2009

By Australian Gandhi
10/22/2009 11:31:00 AM

tamil has only two functions...One is for politicians...second one is for movies....that's it...imagine vivek and vadivel making jokes in english or hindi...do any of the clowns have future...Tamil has only functions ...just for the komaalis....then we tamils become the real slaves of the world very soon...as Karunas are removings the Balls of Tamils Race...karuna of eelaam and Pervert karunanidhi of tamil nadu.... Pervert is celebrating Tamil..hehehehe

By remove the balls of Tamils
10/22/2009 11:30:00 AM

கருணாநிதியின் அரசியல் வரலாற்றை நன்கு புரிந்தவர்களுக்கு அவர் எப்படிப்பட்ட சுயநலவாதி, சர்வாதிகாரப் போக்குக் கொண்டவர் என்பது தெரியும். தமிழக அரசியலில் ஊழல் என்ற சொல் அறிமுகமானதே கருணாநிதி முதல்வராகப் பதவியேற்ற பின்னர்தான். தனக்கும் தன் குடும்பத்துக்கும் யார் யார் சவாலாகத் தோன்றுகின்றார்களோ அவர்களுக்குத் துரோகிப் பட்டம் கட்டி கட்சியை விட்டு வெளியேற்றுவது இவரது கைவந்த கலை. தமிழகத்தின் நலன்களையும் உரிமைகளையும் அண்டை மாநிலங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்த ஒரே முதல்வர் இவர்தான். இவரைக் கடவுளாக மதித்த ஈழத் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்படவும் அவர்களின் உரிமைப் போராட்டம் நசுக்கப்படவும் இவரின் சுயநலப் போக்கும் துரோகத்தனமும் துணை போயின. தன் குடும்ப நலனுக்காக ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிய சண்டாளன். தமிழுக்கு மாநாடு வைத்து மகிழ இந்த எட்டப்பனுக்கு இன்றல்ல எப்போதுமே தகுதியில்லை. ஜனநாயக வழியில் திருத்த முடியாத அளவுக்கு தமிழக அரசியல் கெட்டுவிட்டது. தமிழக அரசியலில் ஒழுக்கத்தை நிலைநாட்ட சில கசப்பான வழிமுறைகளைக் கையாள வேண்டிய நிலைக்குத் தமிழ் இளைஞர்கள் தள்ளப்படும் நாள் வெகுத

By Sigamany Canada
10/22/2009 11:14:00 AM

புண் வந்தவனுக்கு சொறிஞ்சுக்கிட்டே இருக்கபிடிக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏதாவது மாநாடு நடத்திக்கிட்டே இருக்க பிடிக்கும். இப்ப இந்த மாநாடு நடத்தலன்னு எவய்யா அழுதது. வேற வேலை வெட்டிய போய் பாருங்கய்யா. நாங்க எல்லாம் சோத்துக்கே லாட்டறி அடிக்கிறாம். எங்களுக்கு மாநாடு கேட்குதா.

By சேரசோழபாண்டியன்
10/22/2009 10:47:00 AM

Qustion:உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஏன்? Answer: "உன் துரோக வரலாற்றை திசைதிருப்பவும், உன் மீதான களங்கத்தை துடைக்கவும், நீ (கருணாநிதி) கையாளும் தந்திரமே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு"

By "Kumurum Ullam"
10/22/2009 10:40:00 AM

NO BODY CAN DO NOTHING TO YOU,, BECAUSE YOUR STAR LIKE AS THAT ,, SO CARRY ON MR.. AFTER YOUR FALLS, EVEN DOG WILL NEVER AFTER YOU,, MIND IT,, AS SOON AS YOUR GAME MAY COME TO AN END,, THAT IS NOT SO LONG,,NO BODY STAND UP ALL TIMES,, NOW ,,YOUR TIME,, ENJOY IT,, EARN,, COLLECT,,WHO WILL REST ON TOP PERMANENTLY,GOD BLESS YOU ,,(IF YOU BELIEVE)

By CBE
10/22/2009 9:57:00 AM

Karunanithi has made all his family members enter into politics within his five year term as chiefminister. He is only concetrating only his family and not the welfare of the society. He has done nothing for the needs of the society and the state. Only price of the essential commodities have goneup.

By Anand V. Raman
10/22/2009 9:50:00 AM

இந்தக் கரும்புள்ளி செம்புள்ளி மாநாடு.... மன்னிக்கவும், உலகத்தமிழ் செம்மொழி மாநாடு மொட்டிலேயே முனை கருகிப்போக நமது வாழ்த்துகள். தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கும் காலத்தில் தக்கதோர் தலைவன் வந்து உலகத் தமிழ் மாநாட்டை புகழுடன் நடத்தட்டும்.

By எழிலுருவன்
10/22/2009 9:37:00 AM

for election

By kumar
10/22/2009 9:37:00 AM

சிலர் தங்களை தமிழர் போல காட்டிக் கொண்டு உலக தமிழ் மாநாட்டையும் எதிர்கின்றனர். வேறு ஒன்றை காரணம் காட்டி மற்ற தமிழர், தமிழ் மேம்பாட்டை தடுக்க தேவையில்லை. உண்மையான தமிழர்கள் இதை எதிர்க்க அவசியமில்லை. கருணாநிதி எது செய்தாலும் எதிர்த்தனர். கருணாநிதி தமிழினதிற்க்கு என்றும் நேரடியாக வஞ்சகம் நினைக்க தெவையில்லை. முன்பு JJ நடத்திய உலக தமிழ் மானாட்டிற்க்கு வந்த இலங்கை அறிஞர்களும் திருப்பி அனுப்பினர். வலிமையான உண்மையான தமிழின தலைவர்களை வெல்ல வைத்து CM ஆக்க வைகலாம். அதுவரை கருணாநிதியை வசைபாடுவது அறிவின்மை. கருணாநிதி நேரடியாக நல்லதும் மறைமுகமாக தீயவையும் செய்திருக்கிரார். முடிவாக மிகுதியால் மிக்கக்கொளல். நல்லவற்றை செய்யும் போது தமிழர்கள் எதிர்க்க வேண்டாம்.

By keeran
10/22/2009 9:33:00 AM

Karunanithi him self is a USELESS POLITICIAN, he is by right at this age should genuinely project him self as a EXAMPLERY LEADER/LEADERSHIP to the rest of politicians at least in TN but what is he doing?...One thing I'm very sure that his lengthy public service is a WASTE!!!

By Martin Selvam
10/22/2009 8:53:00 AM

துரோகத்தனத்துக்கு இனிமேல் "எட்டப்பன்" என்ற சொல் வழக்கொழிந்து "கருணா" என்ற சொல்தான் நிலைத்து நிற்கும்....Well said Naveen...its true! What this Karunanithi wants to gain in life at this age...only CURSE nothing else...he is very narrow minded person, thats why staging all kind of dramas to fool the people. His outdated political approach is no longer valid/fit for these modern days..

By Tamilan, Madurai
10/22/2009 8:33:00 AM

TURE TAMILIANS SHOULD SUPPORT MK .WHY SOME LTTE SUPPORTS WRITING NONSENSE

By RAM
10/22/2009 8:21:00 AM

இனம் இருந்தால்தான் மொழி வளரும். பேசுவதற்கு மக்களே இல்லாமல் போனால் மொழியை யார் பேசுவார்கள்? முல்லைப் பெரியார் அணை விவகாரம், ஈழத் தமிழர்கள், தமிழக மீனவர்களின் அழிவை தடுக்காத இவருக்கு தமிழ் பேசக் கூட உரிமையில்லை. உலகத் தமிழர்கள் யாரும் இந்த மாநாட்டை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. உன் மீது படிந்த "துரோகி" கறை எத்தனை நூறு வருடங்கள் ஆனாலும் கழுவ முடியாது. துரோகத்தனத்துக்கு இனிமேல் "எட்டப்பன்" என்ற சொல் வழக்கொழிந்து "கருணா" என்ற சொல்தான் நிலைத்து நிற்கும்.

By நவீன் சென்னை
10/22/2009 8:18:00 AM

NEE ENNATHAN VILAKAM SONALUM NEE THAN TMILA ENATHAIYE KOLAI SAITHAVAN NEEYUM UN KUDUMBAMUM DANCE ADAAA THAN ENTHA MEDAI ERUKA POGUTHU ETHAI VITTU NEE ARIVU JEEVI POLA PESATHE NEE ORU ENNA DHROKI TAMIL MANATAI NADATHA UNAKU ARUKATHAI ELLAI TAMIL NATTLA ERUKIRA VANGALAIYUM SAGADICHIDU NEEYELLAM ORU.................

By Thamizan
10/22/2009 8:08:00 AM

KUMARASEN WHY DO NOT SAY KARUNA'S FAMILY CONFERENCE YOU ARE ENTITLE TO YOUR OPINION PLEASE DO NOT CALL WORLD TAMILS CONFERENCE WE ARE NOT TALKING ABOUT LTTE HERE ( WATCH OUT YOUR WORDS)

By dddddd BY CANADA
10/22/2009 7:58:00 AM

In 1993-94 budget, AIADMK Govt announced that 8th World Tamil Conference would be held in 1994. Didn't happen. Again AIADMK Govt announced in the budget for 1994-95 that 8th conference would be held in Jan 1995. Same thing was endorced later by leader of International Tamil Research Sangam. Thus Ms.JJ herself didn't follow of the procedure of first announcement to be made by Tamil Sangam, while she complains now that 9th conference should have been announced by Tamil Sangam and not by TN Govt (CM). "Oorukku ubadesam, thanakku alla."

By Anbarasi
10/22/2009 7:43:00 AM

இது இனதுரோகி கருணாநிதியின் ஏமாற்றுவேலை

By sam
10/22/2009 7:37:00 AM

Prabhakaran, leader of LTTE and Mr.Rajapakshe were responsible for killing of 10000 elam tamils. Instead of fighting for freedom by staying in Srilanka, you people went abroad and now commenting on our leader.

By Kumaresan
10/22/2009 7:31:00 AM

KARUNANITHY IS FULLY RESPONSIBLE FOR 100000 TAMILS DEATHS IN SRI LANKA(SUPPORTED TO CENTRAL GOVERMENT)

By cholan
10/22/2009 7:15:00 AM

Only qualification he probably expects is to be JALRAs, SYCOPANTS, PROTEGES AND STOOGES.

By Nagore Babu
10/22/2009 7:08:00 AM

TAMILS DID RE SCRUTINIZED REGARDING YOUR ARTICLE YOU ARE UNQULIFIED MAN TO TALK ABOUT TAMILS CONFERENCE BECAUSE YOU LOST MORAL DIGNITY TO BE A LEADER OF TAMILS DUE TO SRILANKA GENOCIDE

By dddddd BY CANADA
10/22/2009 6:55:00 AM

MK has already lost the moral dignity to be a leader of tamils due to srilankan genocide. he is one of the active participant in the genocide. he is unfit to conduct world tamil conference. EELAVU VITTULA ETHUKKU KALYANA PANTHAL PODANUM?

By Manimegalai delhi
10/22/2009 6:29:00 AM

மக்களை எப்படி கொடுமை படுத்துவது எப்படி கொல்வது , அதை எப்படி மூடி மறைப்பது என்பது பற்றி ஆராச்சி நடத்தவே இந்த மாநாடு

By gautham
10/22/2009 5:39:00 AM

Truth has been told, please everyone accept and help to make it grand success by participating for the sake of our tamil language, for former CM ANNA, for "sanga tamil"...etc

By reader
10/22/2009 5:38:00 AM

what is the urgency of celebrating ulagathamil nadu when all the tamilians are suffering in srilanka. there is no need. infact the money is going to be wasted and better that money can be spent on the poor it will be useful to them.

By jaya
10/22/2009 5:37:00 AM

தன்னைப் பற்றி தமிழறிஞர்களை துதிபாட வைக்கத்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முதல்வர் கருணாநிதி நடத்துகிறார்

By mani
10/22/2009 5:35:00 AM

எந்த விளக்கம் சொன்னாலும் அவர்கள் எல்லாம் அப்படித்தான் எது சொன்னாலும் எது செய்தலும் குறைதான் சொல்லுவார்கள்

By Sirupakkam- Rajaraman
10/22/2009 5:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *