திங்கள், 19 ஜூலை, 2010
Last Updated :
சென்னை, ஜூலை 18: தமிழ்வழிக் கல்வி கற்றவர்களை பட்டியலிட தனி மென்பொருளைப் பயன்படுத்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசாணை முறைப்படி வந்ததும் அந்த பணிகள் முடுக்கிவிடப்படும் என்று தெரிகிறது. கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், "தமிழில்படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்திட, உரிய சட்டம் தமிழக அரசின் சார்பில் இயற்றப்படும்' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். இது குறித்த அரசாணை எந்த நேரமும் வெளியாகலாம் என்ற நிலையில் அடுத்த கட்டப் பணியில் ஈடுபட்டுள்ளது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.61 லட்சம் பேர் பதிவு: கடந்த ஏப்ரல் 2010 வரை தமிழகத்தில் 61 லட்சத்து 45 ஆயிரத்து 483 பேர் தங்களது கல்வித் தகுதிகளைப் பதிவு செய்து அரசு வேலையை எதிர்பார்த்து உள்ளனர். இவர்களில் 28 லட்சத்து 43 ஆயிரத்து 605 பேர் பெண்கள். ஆனால் இவர்களில் தமிழ் வழியில் கல்வி கற்றவர்கள், ஆங்கில வழியில் கல்வி கற்றவர்கள் என தனித்தனியாக பிரித்து பதிவு செய்யவில்லை. செம்மொழி மாநாட்டு அறிவிப்பால் இதற்கான அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. எனென்றால் அரசு வேலைக்கு ஆள்களைத் தேர்வு செய்யும் போது தமிழ் வழியில் கல்வி கற்றவர்களின் பதிவு மூப்பு விவரம் குறித்து அரசு கேட்டால், அதை வழங்க வேண்டியது வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பணி. ஆனால் தமிழ் வழியில் கல்வி கற்றவர்களை தனியாக பிரிப்பது தனி மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும். ÷இதுதவிர தமிழ் வழிக் கல்வி கற்றவர்களையும் தனியாக இனம் காணும் வகையில் சிறப்பு முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு நடத்தினால் அந்த முகாம்களை எங்கெங்கு நடத்தலாம், மாவட்டங்கள் தோறும் எத்தனை மையங்களில் நடத்தலாம் என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
கருத்துக்கள்
படிப்புச் சான்றிதழ் எதிலும் தமிழ்வழியாகப் படித்தது பற்றிய குறிப்பு இருக்காது. அவ்வாறிருக்க கணியம் (மென்பொருள்) வழி அறிவது என்னும் முயற்சி தேவையற்ற கேலிக் கூத்தாகும். சிறப்பு முகாம்கள் மூலமும் புதிய பதிவிற்கு வாய்ப்பளிப்பதன் மூலமும் தமிழ்வழியாகப் பயின்றவர்களைக் கண்டறியலாம். அனைத்திலும் முதன்மையானது எந்தத்தடையாணையும் குறுக்கே வராத வகையில் விரைவில் அரசாணை பிறப்பிப்பதாகும். இல்லாவிடில் பொய்யான புள்ளிவிவரத்திற்கு உதவும் ஆரவாரப் பேச்சாகத்தான் தமிழில் படித்தவர்க்கான முன்னுரிமை என்பது அமையும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/19/2010 5:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *7/19/2010 5:44:00 AM
புது தில்லி, ஜூலை 18: மத்திய உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரியின் மொழிப் பிரச்னைக்கு மக்களவைத் தலைவர் மீரா குமார் தீர்வு கண்டார்.÷நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய உரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதிலளித்து வருகிறார். ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ பேச வராததால் தனக்குப் பதிலாக கேள்விகளுக்கு இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதிலளிக்க மத்திய அமைச்சர் அழகிரி ஒப்புதல் அளித்திருந்தார்.÷இதனால் அவை நடைபெறும் நாட்களில் அவைக்கு மு.க.அழகிரி வருவதில்லை. இதுதொடர்பாக கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவையில் பிரச்னை எழுப்பிப் பேசினார். மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை அவையில் பார்க்கவே முடிவதில்லை. தொடர்ந்து அவர் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில்லை என்று குற்றம்சாட்டினார்.÷நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கும்,பதில் அளிப்பதற்கும் அனுமதிக்கவேண்டும் என்று மக்களவைத் தலைவர் மீரா குமாரை அழகிரி கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அழகிரி தன்னை வந்து சந்திக்குமாறு மக்களவைத் தலைவர் மீராகுமார் கேட்டுக் கொண்டார். ஆனால் மீரா குமாரை, அழகிரி சந்தித்துப் பேசவில்லை என்று கூறப்படுகிறது.÷இந்த நிலையில் மத்திய அமைச்சரின் மொழிப் பிரச்னைக்கு மீரா குமார் தீர்வு கண்டுள்ளார். இதன்மூலம் மக்களவைக் கூட்டத் தொடரில் மு.க.அழகிரி பங்கேற்க முடியும் என்று மக்களவைத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த ஏற்பாட்டின்படி உறுப்பினர்களின் பிரதான கேள்விக்கு மட்டும் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருப்பதை மு.க.அழகிரி படித்து பதில் அளிக்கலாம். அதன் பின்னர் உறுப்பினர்களின் துணைக் கேள்விகளுக்கு இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதில் அளிப்பார்.÷மக்களவைத் தலைவர் மீரா குமார் எடுத்துள்ள இந்த முடிவு பயன்தரும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.÷வரும் 26-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் துவங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரின்போது மீரா குமார் செய்துள்ள புதிய ஏற்பாட்டின்போது மு.க.அழகிரி அவையில் பங்கேற்று பதில் அளிப்பார் என்று தெரியவந்துள்ளது.
கருத்துக்கள்
இப்பொழுதும் உள்ள நடைமுறைதான் இது. புதிய தீர்வல்ல. தமிழில் விடையிறுக்க வாய்ப்புகளை ஏற்படுத்துவதே உண்மையான தீர்வாகும். உண்மையான தீர்வை வழங்க அமைச்சர் போராட வேண்டும். அவரது கோரிக்கையைத் தனிப்பட்ட கோரிக்கையாக எண்ணாமல் அனைவரும் இணைந்து குரல் கொடுத்து வெற்றி காண வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 

By Ilakkuvanar Thiruvalluvan
7/19/2010 5:24:00 AM
7/19/2010 5:24:00 AM
ஞாயிறு, 18 ஜூலை, 2010
Last Updated :
சென்னை, ஜூலை 17: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தாத மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற திமுக தயாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை தடுக்க கோரி டி. ஜெயகுமார் தலைமையில் அதிமுகவினர் சென்னை மாவட்ட ஆட்சியர் முன்பு சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அவர் பேசியதாவது:இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது அன்றாட நிகழ்வாகி விட்டது. ஆனால் இந்த கொடுஞ்செயலை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறதே தவிர அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் இலங்கை ராணுவம், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் திரும்பி வருவார்களா? என்று அவர்களின் குடும்பத்தினர் அஞ்சும் அளவுக்கு மோசமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது. இவை அனைத்தையும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கும் முதல்வர் கருணாநிதியும் மத்திய அரசிடம் இதனைப் பற்றிக் கேட்க தயாராக இல்லை. தமிழக மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என மீனவர்கள் மீதே அவர் குற்றம் சுமத்துகிறார். ஆனால் இப்போது மக்களை ஏமாற்றுவதற்காக, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்கக் கோரி திமுகவினர் போராட்டம் நடத்துகிறார்கள். மாநிலத்தில் ஆட்சியில் இருந்து கொண்டும், மத்தியில் 7 அமைச்சர்களை வைத்து கொண்டிருக்கு திமுக அரசு போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. திமுகவுக்கு தமிழக மீனவர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் இதை பற்றி எடுத்துரைத்து, தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், வெறும் கடிதத்தை மட்டுமே அனுப்புவதை தவிர எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் இன்று வரை திமுக அரசு மேற்கொள்ளவில்லை.மத்திய அரசிடம் இந்தப் பிரச்னை குறித்து பேசவே திமுக தயங்கி வருகிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற திமுகவுக்கு துணிவு இருக்கிறதா? தமிழக மக்களையே பாதுகாக்க முடியாத திமுக, ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றார் ஜெயக்குமார்.வடசென்னை மாவட்ட செயலாளர் பி.கே. சேகர்பாபு, அதிமுக மீனவர் பிரிவு செயலாளர் கே.கே. கலைமணி, இணைச் செயலாளர் ஜெனிஃபர் சந்திரன் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்
காங்கிரசுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்கப் போவதில்லை என உறுதிமொழி அளிக்க நீங்கள் தயாரா? மத்திய அரசிற்கான ஆதரவை விலக்கியதுடன் காங்.கட்சியானது தமிழ்நாட்டில் தனது ஆதரவை விலக்கும் பொழுது தி.மு.க.விற்குஆதரவு தந்து ஆட்சி கவிழாமல் இருக்க உதவத் தாயரா? வினாக்கள் தொடுக்கும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/18/2010 7:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *7/18/2010 7:49:00 AM
Last Updated :
சென்னை, ஜூலை 17: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும் குரல் கொடுத்தமைக்காக அவரை மிகக் கொடுமையான சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திருப்பது ஜனநாயக விரோதப் போக்காகும். ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஆதரவாகப் போராடுபவர்களை மிரட்டி ஒடுக்குவதற்காக சீமான் பழி வாங்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தமிழ்நாட்டில் அடக்குமுறை திமுக அரசால் ஏற்பட்டுள்ளது. நெஞ்சை நடுங்கவைக்கும் வகையில் ஈழத்தமிழர்கள் படுகொலைகள் செய்யப்பட்டதால் நியாயமாக தமிழர்கள் மனதில் எழுகின்ற ஆவேச உணர்ச்சி, முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்யக் காரணமாயிற்று.
அதே உணர்ச்சி வேகத்தில் தான் சிங்கள அரசுக்கு எச்சரிக்கை செய்யும் நோக்கத்தில், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர், இயக்குநர் சீமான் உரை நிகழ்த்தினார். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் குரல் எழுவதையேத் தடுக்கவும் தமிழ் ஈழ ஆதரவாளர்களை மிரட்டி ஒடுக்கவும் திட்டமிட்டு இயக்குநர் சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை முதல்வர் கருணாநிதி அமல்படுத்தி உள்ளார்.
சென்னையிலே ஒரு தலித் இளைஞரை சுட்டுக் கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டக்ளஸ் தேவானந்தா, இந்தியப் பிரதமரோடு கரம் குலுக்கி மத்திய அரசின் விருந்தாளியாக உலா வரமுடிகிறது. ஆனால், ஈழத் தமிழர்களுக்காக பேசினால் கருணாநிதி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துகிறார். சர்வாதிகாரப் போக்கில் ஆட்சி நடத்தும் திமுக அரசு, சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தகைய அடக்குமுறையின் மூலம் எங்கள் ஈழ ஆதரவுக் குரலை ஒருபோதும் அடக்க முடியாது. அது மேலும் மேலும் வீறுகொண்டு எழும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கருணாநிதியின் இந்தக் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை. எத்தனை அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஆதரவானப் போராட்டங்கள் தொடரும். நிலைமை முற்றுவதற்குள் சீமானை விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்
காவல்துறையினர் கழக அரசைக் கவிழ்க்கத் திட்டமிட்டுள்ளார்கள் போலும். சிங்களர்களின் பாதுகாப்பு குறித்துக் கேள்வி கேட்டதற்கே சிறைத்தண்டனை எனில், தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்ற்வர்களுக்கும் இனப்படுகொலைகளைத் தொடருபவர்களுக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதுடன் படுகொலை செய்பவர்களுக்கும் உதவி உறுதுணையாக இருப்பவர்களுக்கும் வாய்மூடி உடந்தையாக இருப்பவர்களுக்கும் என்ன தண்டனை வழங்குவது என்று அறிவித்தால் நன்று. விரைவில் சீமான் விடுதலையாகித் தம் தமிழ்நலப் பணியைத் தொடர வாழ்த்துகள். தமிழ்நாட்டில் தமிழர் நிலை குறித்து வருந்தும் இலக்குவனார் திருவள்ளுவன் 
By Ilakkuvanar Thiruvalluvan
7/18/2010 7:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
7/18/2010 7:42:00 AM
Last Updated :
சென்னை, ஜூலை 17: மெட்ரிக் பள்ளிகள் தமிழுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு மெட்ரிக் மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளிகள் சங்க மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமைச்சர் க. அன்பழகன் பேசியது: மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலம் முக்கியம் என்றபோதும், தமிழுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் கலாசாரமும், பண்பாடும் மாணவர்களைச் சென்றடையும். இதுபோல் ஒரு குழந்தை எதிர்காலத்தில் தமிழனாக வாழ, அக் குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்றார். மாநாட்டில் சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் மெட்ரிக் பள்ளிகளுக்கும், நர்சரி பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்க வேண்டும். மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் அமையவுள்ள மேல் சபையில் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளுக்கு ஓர் இடமும், நர்சரி பள்ளி நிர்வாகிகளுக்கு ஓர் இடமும் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பங்கேற்ற அமைச்சர் க. அன்பழகன் பேசியது: மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலம் முக்கியம் என்றபோதும், தமிழுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் கலாசாரமும், பண்பாடும் மாணவர்களைச் சென்றடையும். இதுபோல் ஒரு குழந்தை எதிர்காலத்தில் தமிழனாக வாழ, அக் குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்றார். மாநாட்டில் சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் மெட்ரிக் பள்ளிகளுக்கும், நர்சரி பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்க வேண்டும். மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் அமையவுள்ள மேல் சபையில் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளுக்கு ஓர் இடமும், நர்சரி பள்ளி நிர்வாகிகளுக்கு ஓர் இடமும் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துக்கள்
இனமானப் பேராசிரியர் சரியாகவே சொல்லியுள்ளார். ஆனால், அவர்களாகத் திருந்த மாட்டார்கள். எனவே, பதின்நிலைப் பள்ளிகளில் தமிழுக்கு முதன்மை அளிக்கும் வகையிலும் மொழிப்பாடங்களில் தமிழ்ச்சிறப்பை உணர்த்தும் கட்டுரைகள் பாடங்களாக வைக்கும் வகையிலும் கல்வித்திட்டத்தை அரசே மாற்றியமைக்க வேண்டும். தமிழியக்கத்தின் மூத்த தலைவர் இனமானப் பேராசிரியர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/18/2010 7:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 7/18/2010 7:28:00 AM
Last Updated :
சென்னை, ஜூலை 17: தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் செல்லப்பன் உயிரிழந்தார். இதைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் அதன் நிறுவனரும், திரைப்பட இயக்குநருமான சீமான் தலைமையில் கடந்த 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை காலை 10.30 முதல் 11.30-க்குள் நடத்துமாறு மாநகர போலீஸôர் நிபந்தனையின் பேரில் அனுமதி அளித்தனர்.
ஆனால், குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி இந்த ஆர்ப்பாட்டம் மாலை 3.15 மணி வரை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வன்முறையைத் தூண்டும் வகையில் சீமான் பேசியதாக, அவர் மீது ஐபிசி 153-ஏ, 188 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் மாநகர போலீஸôரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 12-ம் தேதி சீமான் கைது செய்யப்பட்டார். இதன்பின் இவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னையில் உள்ள முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் சீமானை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு, மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) சஞ்சய் அரோரா வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டார்.
இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் செல்லப்பன் உயிரிழந்தார். இதைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் அதன் நிறுவனரும், திரைப்பட இயக்குநருமான சீமான் தலைமையில் கடந்த 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை காலை 10.30 முதல் 11.30-க்குள் நடத்துமாறு மாநகர போலீஸôர் நிபந்தனையின் பேரில் அனுமதி அளித்தனர்.
ஆனால், குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி இந்த ஆர்ப்பாட்டம் மாலை 3.15 மணி வரை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வன்முறையைத் தூண்டும் வகையில் சீமான் பேசியதாக, அவர் மீது ஐபிசி 153-ஏ, 188 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் மாநகர போலீஸôரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 12-ம் தேதி சீமான் கைது செய்யப்பட்டார். இதன்பின் இவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னையில் உள்ள முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் சீமானை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு, மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) சஞ்சய் அரோரா வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டார்.
உலகிலேயே அடிமை எண்ணம் மிகுதியாகக் கொண்டவர்கள் தமிழர்களே. கட்சி அரசியல் அல்லது சாதி வேறுபாடு காரணமாக வன்முறை நிகழ்வுகள் நடைபெற்றாலும் இன உணர்வில் கிளர்ந்தெழுவோர் ஒரு சிலராகத்தான் இருப்பர். இச் சூழலில் சீமானின் பேச்சைக் கருத்தில் கொள்வதாயின் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு அளித்தால் போதுமானது. பாதுகாப்பு இல்லை யென்றால்தான் அவர் கூறிய நிலைப்பாடு. அதுவும் ஆரவாரப் பேச்சாகத்தான் கருத வேண்டும். எவ்வாறிருப்பினும் சிங்களர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக ஆக்கிப் பேசினால் இந்தியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது என்றால், நாளும் மடியும் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது என்ன சட்டம் பாயும்? எந்தப் பிரிவில் தண்டனை வழங்குவார்கள்? மன்பதை நலத் திட்டங்களால் பெயர் வாங்கும் அரசை மாற்ற வேண்டும் எனக் காவல்துறையினர் முடிவெடுத்து விட்டார்கள் போலும்.வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/18/2010 7:01:00 AM
7/18/2010 7:01:00 AM
சீமானை கைது செய்ததில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க கூட்டணி பங்கு மிக பெரியது ஆகும்... தமிழர் நலனை அடுகு வைத்து பிழைப்பு நடத்தும் இந்த கூட்டணி, வரும் தேர்தலை மனதில் வைத்து சீமானை கைது செய்து உள்ளார்கள்... எங்கே சீமான் சென்றதடவை காங்கிரஸ் போட்டியாளர்களுக்கு "ஆப்பு" வைத்து போல் இந்த தடவையும் "ஆப்பு" வைத்து விடுவார் என்று முன்னமே கைது செய்து ஓர் ஆண்டு சிறை தண்டனை கொடுத்து உள்ளார்கள்.. (இந்திய இறைபென்மை எல்லாம் சும்மா தமாசு).
By tamilan
7/18/2010 6:53:00 AM
7/18/2010 6:53:00 AM
கலைஞர் தமிழுக்கு செய்ததாக சொல்வது...... தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தியாச்சு..... எல்லாருக்கும் தமிழில் பேசியதற்கு விருது கொடுத்தாச்சு... தமிழில் படித்தவருக்கு அரசு வேலை கொடுத்தாச்சு.... தமிழில் பொறியியல், மருத்துவ படிப்பு கொண்டுவந்தாச்சு... விளம்பர பலகையெல்லாம் தமிழில் மாற்றியாச்சு.... தமிழில் படங்களுக்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு கொடுத்தாச்சு.... கலைஞர் தமிழருக்கு செய்தது........ தமிழை வைத்து பல ஆயிரம் கோடிகள் சம்பாதிச்சாச்சு..... ஈழத்தில் தமிழ்மக்களை லட்ச கணக்கில் கொன்றாச்சு முழுவதுமாக கொல்வதற்கு உண்ணாவிரதமும் இருந்தாச்சு.... தமிழக மீனவர்களை சுட்டு கொல்ல மூழு உரிமையும் ராஜபக்சவுக்கு கொடுத்தாச்சு...... உலகத்தமிழர்களை அழிக்க சோனியாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தாச்சு... தமிழுக்காக போராடும் அனைவரையும் தேசீய பாதுகாப்பு சட்ட்த்தில் கைது செய்தாச்சு.... தமிழரின் பண்பாட்டை உயர்த்தும் விதமாக கலைஞர் தொலைகாட்சியில் மானாட மயிலாட காண்பிச்சாச்சு... (அங்கு மானும் ஆடாது மயிலும் ஆடாது வேறதான் ஆடும்) 
By Vani
7/18/2010 3:33:00 AM
7/18/2010 3:33:00 AM
தமிழர்களை கொலை செய்தவனுக்கு Red Carpet Welcome தட்டி கேட்டவனுக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை ...இது தான் இந்திய இறையாண்மையா ? Shame on you Indian Govt and Karunanidhi Govt.
By Karthik
7/18/2010 3:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்7/18/2010 3:18:00 AM
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




