வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்தினால்
மிதிவண்டிகள் அன்பளிப்பு
புலம்பெயர் உறவான பிரான்சைச் சேர்ந்த உதயகுமார் தருசினி தன் தாயாரான அம்பலவாணர் சொர்ணமலர்
அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இரண்டு மாணவிகளுக்குப்
புதிய மிதிவண்டிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக வழங்கி
வைத்துள்ளார்.
மேற்படி விண்ணப்பம் அவர்களது பெற்றோர்களால் பாடசாலை அதிபர்களின்
பரிந்துரையின் கீழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம்
விண்ணப்பித்தமைக்கு அமைவாக இன்று சங்கத் தலைமைச்செயலகத்தில் வைத்து நவாலி மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த சி.நிரஞ்சிகா, வட்டு இந்துக் கல்லூரியைச் சேர்ந்த வி.பவானி ஆகிய இருவருக்கும் இம் மிதிவண்டிகள் கையளிக்கபட்டன.
கல்வியில் சிறந்து விளங்கும் மேற்படி இரு மாணவர்களும் தமது கல்விச்
செயற்பாடுகளைத் தொடர்வதற்கு உதவியாக மிதிவண்டிகள் தந்துதவுமாறு விடுத்த
வேண்டுகோளுக்கு அமைவாகத் தமது பிள்ளைகள் போன்றும் இவர்களும் கல்வியில்
சிறந்து விளங்கி குமுகத்தில் சிறந்த மக்களாக உருவாக வேண்டும் என்னும்
நல்லெண்ணத்துடன் இத் தொண்டினைத் தன் தாயாரின் நினைவு நாளை முன்னிட்டு
வழங்கி வைத்த உ. தருசினிக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர்
நன்றிகளைக் கூறிக் கொள்வதுடன் இவரின் தாயாரான அ.சொர்ணமலர் அவர்களின் ஆதன்
அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக