நூலறிமுகம் :
கல்கியின் பொன்னியின் செல்வன்
சித்திரக்கதை (முதல் பகுதி)
ஓவியர் ப.தங்கம்(91595
82467) ‘கல்கியின் பொன்னியின் செல்வன்’ என்ற தலைப்பில் சித்திரக்கதையைப்
படைத்துள்ளார். முதல் பகுதியாக உருப்பெற்றுள்ள இந்நூல் மூலமாக நாம் நேசித்த
கல்கியின் கதைப்பாத்திரங்களை நம் முன் ஓவியங்களாகக் கொண்டுவந்துவிடுகிறார்
நூலாசிரியர். இந்நூலானது பொன்னியின் செல்வன் புதினத்தின் ஆடித்திருநாள்,
ஆழ்வார்க்கடியான் நம்பி, விண்ணகரக்கோயில், கடம்பூர் மாளிகை, குரவைக்கூத்து,
நடுநிசிக்கூட்டம், சிரிப்பும் கொதிப்பும், பல்லக்கில் யார்?,
வழிநடைப்பேச்சு, குடந்தை சோதிடர், திடும் பிரவேசம் என்ற 11
அத்தியாயங்களில் முதன்மையான நிகழ்வுகளைக் கொண்டு அமைந்துள்ளது.
கல்கி எழுத்தில் வடித்ததை சித்திரத்தில் கொண்டுவருவது என்பது மிகவும் அரிய செயலாகும்.
இருந்தாலும் அதனை ஓர் அறைகூவலாக ஏற்று நூலாசிரியர் கதையின் நிகழ்வுகளை
மனத்தில் உள்வாங்கிக்கொண்டு எந்த அளவு சுருக்கமுடியுமோ அந்த அளவிற்குச்
சுருக்கி அதே சமயம் நிகழ்வுகளின் நேர்த்தி குறையாமல் நமக்கு அளித்துள்ள
வகை பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.
-முனைவர் சம்புலிங்கம்
04362 278516
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக