மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியருக்குத் தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது
கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழங்கியது!
அண்மையில் நடந்த தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின்
75 ஆம் ஆண்டு – பவழ விழாவில் அக் கல்லூரியின் முன்னாள் மாணவரும்
புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியருமான முனைவர் சு. மாதவனுக்குத் தமிழ்ச் செம்மொழி ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது . இவ்விருதை அழகப்பாப் பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் வி.பாலச்சந்திரன் வழங்கினார்.
இவர் குடியரசுத் தலைவர் வழங்கிய செம்மொழி இளந்தமிழறிஞர் விருதையும் ஏற்கெனவே பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக