இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு
சித்திரை 24 & 25, 2047 / மே 07 & 08, 2016
மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை, பொள்ளாச்சி, கோயம்புத்தூா் (மாவட்டம்)
இரண்டு நாட்களும் காலை, நண்பகல், இரவு உணவு, தங்குமிடம், பயிற்சிக் கட்டணம் அனைத்தும் முற்றிலும் இலவசம்.
நண்பர்களே!
இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு மேற்குறித்தவாறு, மே மாதம் 7,8 நாள்களில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூா் (மாவட்டம்) பொள்ளாச்சி, ஆனைமலை, மகாத்மா காந்தி ஆசிரமத்தில் நடைபெற உள்ளது.
இயற்கைக்கு மாறான இன்றைய நமது வாழ்க்கை முறையை மாற்றி, இயற்கையோடு இணைந்த, இனிய வாழ்வை அமைத்துக் கொடுக்கும் அற்புதமான,அருமையான பயிற்சிப் பட்டறை இது. எனவே அனைவரும் குடும்பத்துடன் வரும்படி அன்புடன் அழைக்கிறோம். 12 அகவைக்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வரவேண்டா.
பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் நேரம் :-
சனிக்கிழமை காலை 09:30 மணி முதல் மாலை 07:00 மணி வரை.
ஞாயிற்றுக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 06:00 மணி
பங்கேற்கும் அன்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்கள் :-
* பரம்பரை உடை அணிந்து கொண்டு வருதல் நலம்.பேச்சாளர்களுக்குப் பரம்பரை உடைஇன்றியமையாதது.
* நெகிழி(பிளாஸ்டிக் )தண்ணீர்க் குப்பி, ஈகநார்(பாலிதீன்) பைகள், வழலை நீர்மம், பற்பசை, பற்தூரிகை, வழலை(சோப்பு), கொசுவத்தி பயன்படுத்த ஆசிரம வளாகத்தில் இசைவு இல்லை.
* அனைவருக்கும் தூய்மையான இயற்கைத் தண்ணீர் வழங்கப்படும்.
* தங்கும் அன்பர்கள் விரிப்பு,போர்வை, கைவிளக்கு, இயற்கைப் பல்பொடி, குளிப்பதற்கு கடலை மாவு, மைஎழுதி(பேனா), ஏடு, துணிப்பை கொண்டு வாருங்கள்.
* உணவு உண்ண பாக்குத்தட்டு வழங்கப்படும்.
சிறப்புரை-பயிற்சி வழங்குவோா்கள் :-
*திரு. ஈலர் பாசுகர்,கோயம்புத்தூா்.
*திரு.கோ.சித்தர், தஞ்சாவூர்.
*திரு.மாறன், சிவகாசி.
*திரு.ம.து.இராமகிருட்டிணன், கோ.ம.பட்டிணம்.
*திரு.பாமையன், மதுரை.
*திரு.பாமர தீபம் பார்த்திபன்,சிவ சைலம்.
*திரு. இரா.சுப்பிரமணியம், மருதமலை.
*மரு. நா.மணிமாறன், பழனி.
‘மரு. ந.மார்க்கண்டன் அவர்கள்,கோயம்புத்தூா்.
*திரு.சிறுதுளி செயராமன், கோயம்புத்தூா்.
*மரு. சுதந்திரா தேவி சீனிவாசன், கோயம்புத்தூா்.
*திரு.க.மு.நடராசன், காந்தியத் தலைவர்,மதுரை.
*மரு.மா.பாதமுத்து அவர்கள்,காந்தியத் தலைவர்,மதுரை.
*முனைவர் மா.பா.குருசாமி அவர்கள், காந்தியத் தலைவர், திண்டுக்கல்.
*திரு.வி.விவேகானந்தன்,காந்தியத் தலைவர், செங்கோட்டை.
*திரு.பூச்சி.செல்வம், கோவில்பட்டி.
*திரு.மா.இரங்கநாதன், மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை.
மேலும் விவரங்களுக்கு / முன்பதிவிற்கு :-
திரு.மைக்கேல் இராசு, தலைவர்- பசுமைநகர் அரிமா சங்கம், கோவை.
அலைபேசி எண் – 98430 85615, இயற்கையைப் பாதுகாப்போம்!
தரவு: தமிழ் இராசேந்திரன்
படம் நன்றி : இயற்கை வேளாண்மை வலைப்பூ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக