தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடு நிலைப் பள்ளியில்
எட்டாம் வகுப்பு மாணவர்களின் ஒளி ஏற்றுதல் விழா
தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர்
மாணிக்க வாசகம் நடு நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா
விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் ஒளி ஏற்றும் விழாவாக
சித்திரை 08, 2047 / ஏப்பிரல் 210 2016 அன்று நடை பெற்றது. தொடர்ந்து
மூன்றாவது ஆண்டாக ஒளியேற்று விழா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில்
நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஒளி ஏற்றுதல் விழாவின் தொடக்கமாக
எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில்
வரிசைப்படி நின்றனர். அவர்கள் முன்பாக 7 ஆம் வகுப்பு மாணவர்கள்
உட்கார்ந்து இருந்தனர். 7 ஆம் வகுப்பு மாணவி இராசேசுவரி ஆங்கிலத்தில்
அனைவரையும் வரவேற்றார். மங்கல நிகழ்ச்சியின் தொடக்கமாகக் கடவுளை நினைத்தல்
என்பது மரபு. அவ்வண்ணம் பள்ளியின் மாணவிகள் பார்கவிஇலலிதா, இராசலெட்சுமி,
பிரவீனா ஆகியோர் தமக்கே உரிய மெல்லிய குரலில் அபிராமி அந்தாதி பாடினர்.
மாணவிகள் சௌமியா, சுமித்ரா, உமா மகேசுவரி ஆகியோரால் திருக்குறள் நடனம் ஆடப்பட்டது.
வந்தோரை இன்முகத்துடன் வாழ்த்துவது
தமிழர் பண்பாடு. அதற்கேற்ப ஏழாம் வகுப்பு மாணவன் சீவா அனைத்துச் சமய
வாழ்த்துப் பாடலைப் பாடினார். அறிவு என்பதை ஒளியாக உருவகிப்பதே நம் மரபு.
அதனை நினைவுகூரும் விதத்தில், எட்டாம் வகுப்பு படித்துப் பிரியா விடை
கொடுக்கும் மாணவியர் கல்விக்கடவுள் கலைமகளை வணங்கிப் பள்ளித் தலைமை
ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தீப ஒளியை ஏற்ற அதனைத்
தொடர்ந்து 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் உதவியுடன் கையில்
மெழுகுவர்த்தி ஒளி ஏற்றினர். 8 ஆம் வகுப்பு மாணவி தனம் உறுதி மொழி
வாசிக்க 8 ஆம் வகுப்பு அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக்
கொண்டனர்.அதன் பிறகு ஒளியை அப்படியே அந்த மரபு மாறாமல் 7 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு வாழ்த்திக் கொடுத்தனர்.7 ஆம் வகுப்பு மாணவர்கள் தீபத்தை
வாங்கிக் கொண்டனர். 7 ஆம்வகுப்பு மாணவர்கள் சார்பில் மாணவி பரமேசுவரி
ஏற்புரை வழங்கினார். சென்னை வேல்சு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் முதன்மை
முதல்வர் பூர்ண சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மரபார்ந்த இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
எட்டாம் வகுப்பு மாணவர்கள் வசந்த குமார்,
(இ)யோகேசுவரன், கண்ணதாசன் ஆகியோர் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
விழாவினை மாணவி தனலெட்சுமி தொகுத்து வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி செய்திருந்தார். 6 ஆம் வகுப்பு மாணவன் இரஞ்சித்து ஆங்கிலத்தில் நன்றி கூறினார்.
வந்திருந்த பெற்றோரும்,8 ஆம் வகுப்பு
மாணவ,மாணவியரும் பிரியா விடை நிகழ்ச்சியான ஒளி ஏற்று விழாவில் ஆனந்தக்
கண்ணீர் மல்க விடை பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக