ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் மந்திரமா? தந்திரமா ?




மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் மந்திரமா? தந்திரமா ?

கண்ணாடியைத் தின்னும் வித்தை எப்படி ? மந்திரமா? தந்திரமா ?
அறிவியல் நிகழ்ச்சியில் சுவையான நிகழ்வுகள்!
காதில் குளிர்பானம் குடிப்பது எப்படி? அறிவியல் உண்மை விளக்கம்

தேவகோட்டை – தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ‘அறிவியல் அறிவோம் நிகழ்ச்சி!’ வாயிலாகப் பள்ளி மாணவர்களுக்கு  அறிவியல்  வித்தைக்காட்சியும், அதன் தந்திரங்களும் சொல்லப்பட்டன.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் வரவேற்றார். தேவகோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இலெட்சுமி தேவி தலைமை தாங்கினார் சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் முனைவர் சந்திரமோகன், பட இயக்குநர் கரு.அண்ணாமலை ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.
  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் முனைவர் சேதுராமன் மாணவர்களுக்குப் பந்தினை மறையவைத்து மீண்டும் வரவைத்தல், காதில் குளிர்பானம் குடித்தல்,  திருநீறு வருவித்துக் காட்டுதல், உடம்பின் மீது தீயை இழுத்துத் தீக்காயம் ஏற்படாமலிருத்தல், வாயில் எறியும் கற்புரம் போடுதல், தண்ணிரில் விளக்கு ஏற்றுதல், கண்ணாடித் துண்டுகளைத் தின்னுதல், நீரை வானத்துக்கு அனுப்புதல், வெற்றுப் பையில் இருந்து பொருட்களை எடுத்தல், தேங்காயை உடைத்தால் பூக்கள் வெளிப்படுதல், காதுகள் வழியாகக் கேள்விகளை  ஊகித்தல், உடல்மேல் சாம்பல் பூசியதும் பெயர்  தோன்றுதல், மாய எழுத்துகள், கைப்பாவையே கடவுள், மூவண்ண  நாடாக்களை(ரிப்பன்களை) இணைத்தல், மந்திரத் தீ, குறிசொல்லுதல், துண்டுகளை இணைத்தல் (பிதாகரசு தத்துவம் ), காசு உள்ள முட்டையை எடுத்தல், கைக்குட்டையைக் காண்பித்து மறைய வைத்துக் கூடு விட்டு கூடு மாற வைத்தல், பந்தை  இருப்பதைப் போலவே காண்பித்து இல்லாமல் செய்து மீண்டும் பந்தை வரவைத்தல், சாதக முறையில் பெயரில் உள்ள  சிக்கலைத் தீர்மானித்தல்  முதலான  பல அறிவியல் அற்புதங்களையும் தந்திரங்ககளையும் சொல்லிக் கொடுத்தார்.
மாணவர்கள்  இயோகேசுவரன், இரஞ்சித்து, மாணவிகள் சௌமியா, இராசேசுவரி, தனலெட்சுமி ஆகியோர் கேள்விகள் கேட்டு  விடைகள் பெற்றனர். பெற்றோர்கள் கற்பகம், ஐயத்தேவன், அங்காள ஈசுவரிமுதலான பலர் பேசினார்கள். 80க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், கல்லல் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை அமராவதி புதூர்,  குருகுலம் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் வெங்கடேசன் முதலான பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சிபற்றிப் பேசினார்கள். பள்ளி ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக