கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும்
காரைக்குடி கம்பன் கழகத்தின்
சார்பில் எதிர்வரும் பங்குனி 28, 2047 / ஏப்பிரல் 10, 2015
 அந்தமான் நிக்கோபார் தீவுகளின்
பெருநகரமான போர்ட்பிளேயரில்
கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம்
 நிகழ உள்ளது.
தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
எண்பதிற்கும் மேற்பட்ட
கருத்தரங்கக் கட்டுரைகள்
அக்கருத்தரங்கில் வாசிக்கப்பெற உள்ளன.
அவற்றின்
அச்சுவடிவ ஆய்வுக்கோவையும் அன்றே வெளியிடப்பெறுகிறது.
கம்பன் கண்ட இயற்கை நலத்தை வெளிப்படுத்துவதை
மையமாகக் கொண்டு இக்கருத்தரங்கம் நிகழ்கிறது.

காரைக்குடிக்கம்பன்கழகம், அந்தமான்கருத்தரங்கம்01 : azhai_andhaman_kambankarutharangam01 காரைக்குடிக்கம்பன்கழகம், அந்தமான்கருத்தரங்கம்02 :azhai_andhaman_kambankarutharangam02
ஒருநாள் முழுநிகழ்வாக நடக்க உள்ள இக்கருத்தரங்கிற்குத்
தாங்கள் வருகை தர அன்புடன் வேண்டுகிறோம்.