வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பொது மருத்துவ முகாம்

காப்புறுதிக்கழகத்தின்

பள்ளி மாணவர்களுக்கான பொது மருத்துவ முகாம்

  தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்தியக் காப்புறுதிக்கழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான திங்கள் பொது மருத்துவ முகாம் நடை பெற்றது.
   முகாமிற்கு வந்திருந்தோரை பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ . சொக்கலிங்கம் வரவேற்றார். காப்புறுதிக்கழகத்தின் கிளை மேலாளர் மோகன சுந்தரம் தலைமை தாங்கினார். காப்புறுதிக்கழகத்தின் வளர்ச்சி அதிகாரிகள் தமிழரசு ,பெரியசாமி முன்னிலை வகித்தனர்.மருத்துவர் ஏழுமலை பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் ஆய்வுசெய்தனர். மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களைக் கண்டுபிடித்து அவற்றை உடனுக்குடன் எடுத்துக் கூறினார்கள். மாணவர்களின் பெற்றோர்களுக்கும் நோய்களின் தீவிரம் குறித்து எடுத்தச் சொல்லப்பட்டது. பொதுவாக பல் தொடர்பான நோய்கள், ஊட்டக் குறைபாடு தொடர்பான நோய்கள், கேடயச் சுரப்பி(தைராய்டு) தொடர்பான தகவல்கள் அவற்றை எவ்வாறு சிறு வயது முதலே சரி செய்வது, நோய் வருமுன் காப்பது என்பன போன்ற பல்வேறு உடல் நோய்கள் தொடர்பான தகவல்கள் எடுத்து சொல்லபட்டன.
  முகாமின் நிறைவாக ஆசிரியர் சிரீதர் நன்றி கூறினார்.
[படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.]
இலெ .சொக்கலிங்கம்
9786113160



அகரமுதல118, தை 17, 2047 / சனவரி 31, 2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக