செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

ஊர்ச்சந்தை, சென்னை

தை 24, 2047 / பிப்.07, 2016 காலை 09.00

அழை-ஊர்ச்சந்தை -azhai_uurchandhai

மல்லர் கம்பம் எனும் மரபு வீர விளையாட்டு காண வாரீர்!
சென்னையில் ஊர்ச் சந்தை – 2!
செம்மையின் ஊர்ச் சந்தை மீண்டும் சென்னையில் நிகழவுள்ளது. முதல் சந்தை கடந்த சனவரி 3 ஆம் நாள் நிகழ்ந்தது. அடுத்த சந்தை பிப்பிரவரி 7 ஆம் நாள் கூடுகிறது.
இந்த நிகழ்வு ‘செம்மைச் சமூகம்’ எனும் அமைப்பினால் நடத்தப்படுகிறது. மரபுக்குத் திரும்பும் விருப்பம் கொண்டோரின் கூடல்தான் செம்மைச் சமூகம் ஆகும்.
ஊர்ச் சந்தை என்பது பொருட்கள் விற்பதற்கான ஏற்பாடு மட்டுமல்ல. காலை முதல் மாலை வரை வரிசையான நிகழ்ச்சிகளும் விளையாட்டுகளும் நிகழும் அமைப்புதான் ஊர்ச் சந்தை. இவற்றுக்கெல்லாம் சேர்த்துதான் நுழைவுக் கட்டணம் பெறப்படுகிறது.
பொருட்கள் வாங்குவதற்காக மட்டும் ஊர் சந்தைக்கு வருவோருக்கு நுழைவுக் கட்டணம் கூடுதலாகத் தெரியும். செம்மையின் நோக்கம், சென்னையில் வாழும் மரபு விரும்பும் மக்களுக்கான பண்பாட்டுக் கூறுகளை மீட்டுத் தருவதுதான், வெறும் விற்பனை அல்ல.
தற்போது கூடவுள்ள இரண்டாவது ஊர்ச் சந்தையில், ‘மல்லர் கம்பம்’ எனும் மரபுவழிப்பட்ட வீரவிளையாட்டு நிகழ உள்ளது. ‘தமிழ்நாடு மல்லர் கம்பம் கூட்டமைப்பு’ எனும் அமைப்பினர் பங்கேற்கிறார்கள். மல்லர் கம்பம் கூட்டமைப்பைச் சேர்ந்த திரு.ந.செயசந்திரன் இவ்விளையாட்டின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
இந்நிகழ்வு மாலையில் மட்டும்தான் நடைபெறும். பகலில் உடல்நல அரங்குகள், விளையாட்டு அரங்குகள், இயற்கை எரிவளி அரங்கு, ஊட்டச் சத்து குடிநீர் அரங்கு முதலானவை இடம்பெறும்.
சந்தை ஒழுங்குக் குழு:
திரு.இராசராசன்  – தலைவர்
திரு.சுவாமிநாதன் – செயலாளர்
திரு. இராசேசுவர் – பொருளாளர்
திரு.  கலாநிதி பவேசுவரன் – ஒருங்கிணைப்பாளர்
மரபிற்குத் திரும்பும் விருப்பம் கொண்டோரை செம்மைச் சமூகத்தின் ஊர்ச் சந்தை அழைக்கிறது.
அகரமுதல118, தை 17, 2047 / சனவரி 31, 2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக