அழை-தர்சன் படுகொலை-நீதிகேட்டல்01 -azhai_darsanpadukolaineethi_may17_01

ஆறு அகவைத் தமிழ்ச் சிறுவன் தர்சன்
படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
  இலங்கையில் அரசியல் சட்டத் திருத்தம், தமிழருக்கு உரிமை, ஆட்சி உரிமைப் பகிர்வு, ஆட்சி மாற்றம் எனும் பரப்புரையினைப்  பொய்யாக்கியது 6 அகவைத் தமிழ்ச் சிறுவன் படுகொலை.
 தர்சன் எனும் சிறுவனைப் பாலியலாகச் சீரழித்து, பெரிய ஒரு கல்லை அவன் உடலில் கட்டிக் கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்திருக்கிறது இந்தியாவினால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை சிங்களப் படை.
  தமிழனுக்குக் குரல் கொடுப்பதாக வேடம் போடும் இங்கிலாந்தோ, அமெரிக்காவோ, ஐ.நா அவையின் சிறுவர்களுக்கான உரிமை அமைப்புகளோ, ஐ.நா.சி.நி.[‘யூனிசெபு’ -UNICEF] அமைப்போ இதுவரை ஏதும் கண்டிக்கவில்லை. சிறுவர் போராளிகள் என்று பேசிக் கொண்டிருந்த புகழ் பெற்ற மனித உரிமை முகவர்களும் பேசவில்லை.
  புலிகளில் சிறுவர் போராளிகள் இருப்பதாகப் பெரும் சிக்கலைக் கிளப்பி, விடுதலைப் போராட்டத்தினைக் கொச்சைப்படுத்திய புகழ் வாய்ந்த முற்போக்காளர்களின் முகத்தில் காறி உமிழ்ந்திருக்கிறது தர்சனின் பச்சைப் படுகொலை. ஏன் இதுவரை இந்தக் கும்பல்கள் வாய் திறக்கவில்லை?
  இப்படுகொலைகளை மறைத்து, இலங்கையில் அரசியல் சட்டம் திருத்தப்படுகிறது; தமிழர்கள் பங்கேற்பு நடக்கிறது எனச் சந்திரிகா ஆதரவுப் பரப்புரை செய்யும், வன்கொடுமை (பயங்கரவாத) ஊடகம் ‘தி இந்து’ முதல் எவரும் இது குறித்துச் செய்திப் பதிவு செய்யவில்லை.
  ஈழ விடுதலைப் போராட்டம் ஓய்ந்து விடவில்லை. உங்களது ஊளை ஓசை எங்களை அச்சப்படுத்தவில்லை. ஈழ மக்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. இந்தியப் பொறுக்கிகள் வெற்றி பெற நாங்கள் ஒருபோதும் விடப் போவதும் இல்லை. மே 17 இயக்கம் விட்டுக் கொடுக்காத போராட்டத்தினைத் தொடர்ந்து முன்னெடுக்கும். தர்சன் கொலைக்கான நீதியும், இனப்படுகொலைக்கான உசாவலும் (விசாரணையும்) கோரித் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்க இருக்கிறது மே பதினேழு இயக்கம். பிப்ரவரி 5ஆம் நாள் ஆர்ப்பாட்டமும், பிப்ரவரி 12ஆம் நாள் முருகதாசன் நினைவு நாளில் ஐ.நா அலுவலக முற்றுகையையும் அறிவிக்கிறோம்.
  எங்களது தனிப்பட்ட அழைப்பிற்காகக் காத்திருக்காமல் கலந்து கொள்ளுங்கள்! பெரும் திரளாகத் திரண்டால் தர்சன் போன்ற சிறுவர்களின் உயிரைக் காக்கலாம். இலங்கையின் முகத்தில் எட்டி உதைக்கலாம். இந்தியாவின் முகத்திரையைக் கிழிக்கலாம். எந்த அமைப்பாக இருந்தாலும் சரி கைகோக்க வாருங்கள்! போராட்டத்தினை முன்னெடுக்க வாருங்கள்! நீதி கேட்போம்!
  ஈழப்படுகொலையின் அட்டூழியத்திற்கு எதிராகவே போராட மே 17 இயக்கமாக வந்தோம். அதில் விட்டுக் கொடுப்பது எனும் பேச்சுக்கே இடமில்லை!
  போராட வாருங்கள்!. முத்துக்குமாரை நேசிப்பவர்களும், மதிப்பவர்களும் கைகோப்போம்!
   ஆறு அகவைத் தமிழ்ச் சிறுவன் தர்சன் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாள் : தை 22, 2047 / 5-2-2016 மாலை 4:30 மணி

இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை.

அழை-தர்சன் படுகொலை-நீதிகேட்டல்02 - azhai_darsanpadukolaineethi_may17_02