மாசி 02, 2047 / பிப்.14, 2016

காலை 10.00

சென்னை

அழை-மரபுத்தொழில்பயிற்சி - azhai_marabuthozhilpayirchi

மரபு வாழ்வியலுக்கான தொழிற்பயிற்சிகள்!

 வேளாண்மை, வீடு கட்டுதல், மருத்துவம் ஆகிய அடிப்படைச் செயல்பாடுகளை மரபுவழியில் மேற்கொள்ளத் தேவையான பயிற்சிகளைத் தொடங்குகிறோம்.
இம்மூன்று துறைகளுக்குமான பாடத் திட்டம் இதுதான்.
மரபு வேளாண்மை:
பாடம் 1
• இயற்கையியல் எனும் அடித்தளத்தை அறிந்துகொள்ளுதல்: புவியின் உயிர் வகைகள் – தாவரங்களின் இயல்புகள் – மனிதர்களும் தாவரங்களும் – காடுகளும் மனித வாழ்வும் – தாவரங்களும் கூட்டு உயிரிகளின் இயல்புகளும்
பாடம் 2
• ஐம்பூதக் கொள்கை எனும் அற்புதம்: ஐம்பூதங்களின் அடிப்படைக் கருத்துகள் – நிலம் எப்படி பூமியானது? – நிலமும் நீரும் – நிலமும் காற்றும் – நிலமும் வெளியும் – நிலமும் வெப்பமும் – நிலத்தின் இயல்புகள் – நிலத்தின் மாற்றப் போக்குகள் – நிலத்திற்கும் தாவர (இடம்பெயராத) உயிரினங்களுக்குமான உறவு – நிலத்திற்கும் சங்கம (உலவும்) உயிரினங்களுக்குமான உறவு – நிலத்தில் மனித இனம் – வேளாண்மையின் மெய்ப்பொருளை அறிந்துகொள்ளுதல்.
பாடம் 3
• வேளாண் நுட்பங்கள்: மரபு வேளாண்மையின் சுருக்கமான அறிமுகம் – சங்க கால வேளாண் நுட்பங்கள் – தற்போதைய வேளாண் முறைகளைப் பற்றிய அறிமுகம் – இயற்கை வேளாண்மையும் அங்கக வேளாண்மையும் – மரபு வேளாண்மையை நடைமுறைப்படுத்தும் வழிவகைகளுக்கான விளக்கம்.
பாடம் 4 
• வேளாண்மைப் பொருளாதாரம் : வேளாண்மை வாழ்வியல் – வேளாண் பொருளாதாரத்தில் சமூகப் பங்களிப்பு – வேளாண் நுட்பங்களும் திணைமக் கொள்கைகளும் – வேளாண் உற்பத்தியில் இயற்கையியல் அடித்தளங்களைப் புரிந்துகொள்ளுதல் – வாழ்வில் தற்சார்பு நிலையை அடைவதற்கான படிநிலைகளை அறிந்துகொள்ளுதல்.
பாடம் 5
• வேளாண் பண்ணையம்: பண்ணையத்திற்கான நிலத்தைப் புரிந்துகொள்ளுதல் – நீராதாரங்களைப் பற்றிய அறிதல் – பண்ணைய அமைவிடத்தின் பருவநிலைகளைப் புரிந்துகொள்ளுதலும் அவற்றிற்கேற்ப வடிவமைத்தலும் – பண்ணையத்தின் நிலவமைப்பும் வடிவமைப்பும் – பண்ணையத்தின் உயிரினங்கள் – பண்ணையத்தின் இல்லமும் இதர குடியிருப்புகளும் – பண்ணையத்தின் எரிபொருள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுதல் – பண்ணை வடிவமைப்பின் தொகுப்பு வடிவம்.
பாடம் 6
• உற்பத்தி மற்றும் வழங்கல்: வேளாண் உற்பத்தியும் சமூகத் தேவையும் – சமகாலத் தேவைகளைப் புரிந்துகொள்ளுதல் – உற்பத்தி அளவும் பொருளாதாரத் தேவைகளும் – கடன் இல்லாத வேளாண் வாழ்வியலைக் கடைபிடிக்கும் வழிவகைகள் – சந்தைகளைப் பற்றிய தெளிவான புரிதல் – பண்ணையத்தின் உற்பத்தியை மதிப்பு கூட்டுதல்.
பாடம் 7 
• பண்ணைய உயிரினங்களும் எளிய நுட்பங்களும்: மரபு கால்நடைகள் மற்றும் தாவர வகைகள் – சுழற்சி முறையிலான ஊட்ட உணவுகளும் பூச்சிக் கட்டுப்பாடுகளும் – நீர்ப் பாசன முறைகள் – மழை நீர் வேளாண்மை – பலவகைப் பயிர்களும் விதைகளும் – உணவு உற்பத்தியில் அறச் சிந்தனைகளின் இன்றியமையாமை.
மரபுவழி வீடு கட்டும் முறைகள்:
பாடம் 1
• மரபுவழி அண்டக் கொள்கை: மாமுனிவர் மயன் அளித்த ஐந்திரம் எனும் தொல் மெய்யியல் அறிமுகம் –அண்டத்தில் வெளியும் (space) அதன் இயல்புகளும் –– அண்டவெளியில் புவியின் இடம் – புவியின் கட்டுமானத் தன்மைகள் – ஐம்பூதங்களும் கட்டுமானங்களும் – அண்டத்தின் ஆற்றலைக் கட்டுமானத்தின்வழியே அறிந்துகொள்ளுதல் – ’வீடு’ என்றால் என்ன எனத் தெரிந்துகொள்ளுதல் – ‘இல்லம்’ என்பதன் விளக்கம் – கோயில் கட்டுமானத்தின் அருமைகள் – உடலுக்கும் கோயிலுக்குமான பிணைப்புகள்.
பாடம் 2
• மரபு வீடுகளும் நுட்பங்களும்: கட்டுமானத்தின் தொன்மை – தொன்மையான கட்டுமான முறைகள் – சிந்துவெளி கட்டிடங்கள் – சங்ககாலக் கட்டடங்கள் – திணைமக் கொள்கையும் வீடுகளும் – பழங்குடிகளின் வீடுகள் – சமகாலத்து உள்ளூர்த் தன்மை கொண்ட வீடுகளின் நுட்பங்கள்.
பாடம் 3
• வீடு கட்டுதலின் அடிப்படைகள்: நிலத்தைப் புரிந்துகொள்ளுதலும் தெரிவு செய்தலும் – கட்டுமான நுட்பங்கள், அடித்தளம், சுவர்கள், சாளரங்கள், கூரை, தளம், கழிவறை மற்றும் இதர அங்கங்கள் – மரபுவழிக் கட்டுமானக் கணக்குகள் – வடிவங்களும் கணக்கீடுகளும் .
பாடம் 4 
• கட்டுமானப் பொருட்கள்: உள்ளூர்த் தன்மையைப் புரிந்துகொள்ளுதல் – கற்களின் வகைகள் – கற்கள் சேகரிப்பு – தயாரிப்பு – கற்களைப் பயன்படுத்தும் முறைமைகள் – மரங்களின் வகைகளும் மரபுவழி அறிவும் – மரங்களைப் பயன்படுத்தும் முறைமைகள் – மண் வகைகளும் கட்டுமானமும் – சாந்துப் பொருட்கள் – பூச்சு முறைகளும் பொருட்களும் – கூரைப் பொருட்களின் வகைகளும் தெரிவுசெய்யும் முறையும் – நவீன பொருட்களின் இயல்புகள் – நவீனப் பொருட்களைக் குறைந்தளவில் பயன்படுத்தும் முறைகள்.
பாடம் 5
• வடிவமைப்பும் செயல்திட்டமும்: வீட்டினை வடிவமைத்தல் – கட்டுமானத்தின் முறைப்படியான படிநிலைகள் – வடிவமைப்பில் அண்டக் கொள்கையை இணைத்தல் – கட்டுமானத்தின் பொருளாதாரம் – மழைநீர் சார்ந்த வீடு கட்டுதல் – வீட்டையும் உணவு உற்பத்தியையும் / பண்ணையத்தையும் இணைத்தல் .
வாழ்வியல் மருத்துவம்:
பாடம் 1
• கரு உரு: மெய்யியல் அறிமுகம் – கரு உரு மெய்யியல் விளக்கம் – ஐம்பூதக் கொள்கையின் விளக்கம் – அண்டத் தோற்றக் கொள்கை – புவியின் தோற்றமும் உயிர்கள் தோற்றமும் – அண்டமும் பிண்டமும்.
பாடம் 2
• மனமே உடலாகிறது: மனம் விளக்கம் – மனம் மற்றும் உடல் வழியாக கரு உரு விளக்கம் – ஐம்பூதங்களின் தலைமை பூதம் – படைப்பாற்றலுக்கும் உடலுக்குமான உறவு – மனதின் வழியாக உடலை அடைவதைப் பற்றிய பாடங்கள்.
பாடம் 3
• உடல் விளக்கங்கள்: உடலின் தோற்றமும் வளர்ச்சி நிலைகளும் – உடல் / யாக்கை / மெய் ஆகிய சொற்களின் மெய்யியல் புரிதல் – உடல் உறுப்பு மண்டலங்கள் – ஐம்பூதங்களுக்கும் உடல் உறுப்புகளுக்குமான உறவும் பிணைப்பும் – உடல் வழியாக மனதை அறிவதைப் பற்றிய பாடங்கள்.
பாடம் 4
• உறுப்பு மண்டலங்கள்: உறுப்பு மண்டலங்களின் செயல்பாடுகளும் சுழற்சியும் – ஐம்பூதச் செயல்பாடுகளின் விளைவுகளை உறுப்பு மண்டலங்களில் அறியும் முறைகள் – புற உறுப்புகளுக்கும் அக உறுப்புகளுக்குமான உறவும் தொடர்பும் – உறுப்பு மண்டலங்களில் உருவாகும் உடல் தொல்லைகள்.
பாடம் 5
• உணவும் உடலும்: நோய்களைப் பற்றிய விளக்கம் – மனம் – உடலின் இணைச் செயல்பாடுகளுக்கும் உடல் தொல்லைகளுக்குமான உறவு – வாழ்வியல் மருத்துவத்தின் உணவுக் கொள்கை – நோய்களுக்கும் உணவுக்குமான உறவு – உணவின் ஐம்பூதத் தன்மைகள் – மரபுவழிப்பட்ட உணவு முறைகளின் சிறப்புகள் – திணைம வழிப்பட்ட உணவுக் கொள்கைகள் – கழிவு என்பது என்ன? – உணவின் வழியாக உடல்நலத்தைச் சீரமைக்கும் கலை.
பாடம் 6
• சிகிச்சை முறைகள்: பத்தியம் குறித்த விளக்கம் – உடல் தொல்லைகளின் வழியாக ஐம்பூதங்களை அடைதல் – சிகிச்சை காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறைகள் – உணவு வகைகளை மருந்தாகப் பயன்படுத்தும் வழிகள் – அருகமை மூலிகைகள் மற்றும் வீட்டு மருந்துகள் அறிமுகம் – இம்மருந்துகளைப் பயன்படுத்தும் சூழலும் முறைகளும் – உடல் தொல்லைகளுக்கான முதலுதவிக் குறிப்புகள்.
ம.செந்தமிழன் - ma.senthamizhan
செந்தமிழன் மணியரசன்