ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாததால் நேர்ச்சிப் பேரிடர்!

65roadwork-without-warningboard

வைகை அணைப்பகுதிச் சாலையில்

எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாததால்

நேர்ச்சி(விபத்து) ஏற்படும் பேரிடர்

  தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை வரை செல்லும் சாலையில் எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாமல் வேலைகள் நடைபெறுவதால் நேர்ச்சிகள் நிகழும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டியிலிருந்து செயமங்கலம், வைகை அணை, முதலக்கம்பட்டி பகுதிகளில் சாலைகள் வேலை பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன.
  வைகை அணைப்பகுதியில் பாலங்கள் அமைக்கும் பணியும், எருமலைநாயக்கன்பட்டி, செயமங்கலம் பகுதியில் சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. இதனால் ஆங்காங்கே நடுத் தெருவில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இவ்வாறு பள்ளங்கள் தோண்டப்பட்டால் எச்சரிக்கைப் பலகையும், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்குத் தெரியும் விதமாக எதிரொளிப்பு ஒட்டியும் ஒட்டப்படவேண்டும்.
  மேலும் சில்வார்பட்டி பகுதியில் ஆங்காங்கே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து கை, கால்கள் உடைந்தும் மண்டைகள் உடைந்தும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  எனவே நெடுஞ்சாலைத்துறையினர் சாலைப்பணிகள் நடைபெறும் இடங்களில் எச்சரிக்கைப் பலகை அமைத்து நேர்ச்சிகளைத் தவிர்க்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
vaigai-aneesu65



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக