இசைவின்றி விளம்பரப் பலகை வைத்த அமைச்சர் மீது வழக்கு
திருவரங்கம் இடைத்தேர்தலில்
இசைவின்றி விளம்பரப்பலகை வைத்த அமைச்சர் செந்தில் பாலாசி மீது வழக்கு
தொடரப்பட்டது.
சென்னையைச்சேர்ந்த போக்குவரத்து
இராமசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்
வழக்கு தொடுத்த விவரம்:>
கரூர் பேருந்து நிலையத்தில் 31.8.2014 இல் போக்குவரத்துக்கு இடையூறாக
நாடாளுமன்ற துணைத்தலைவர் தம்பித்துரை, மாநில போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாசி ஆகியோர் விளம்பரப் பலகை ைத்திருந்தனர். இது
தொடர்பாக நகரக் காவல் ஆய்வாளர்
அவர்களிடம் முறையீடு அளித்தேன். ஆனால்
நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீண்டும் அதே இடத்தில் பொங்கல் வாழ்த்து விளம்பரப் பலகை
வைத்தனர். இது குறித்தும் முறையீடு
அளித்தேன். காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. இசைவு
பெறாமல் வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை
அகற்ற உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளன. எனவே தொடர்புடைய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய
உத்தரவிடவேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன் உசாவலுக்கு வந்தது. அடுத்த கேட்புநாளை பிப்பிரவரி 16 ஆம் நாளுக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் திருவரங்கம்
தொகுதியில் எழுதிமுனை(பேனா முனை)
சின்னத்தில் போட்டியிட்டுக் கடை, வீடு என ஒவ்வோர் இடமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக