21. கள்ளி
இதன் முள் பிளவு பட்டதாய் இருக்கும். இதன் காய் வெடிக்கும் பொழுது மிகுந்த ஒலி உண்டாகும்.
கள்ளிமரத்தின் காய்கள் வெயிலில் வெடிக்கும்.
காஞ்சி மரம் மெல்லிய கிளைகளை உடையது. பூக்கள் பசிய பூந்தாதுக்கள்
உடையனவாய் நறுமணம் கமழும். பயற்றங் கொத்துகள் போல பூங்கொத்துகள் இருக்கும்.
காந்தள் பூக்கள் குருதி போன்று சிவப்பாகப் பூக்கும்; கொத்தாக இருக்கும்.
காந்தள் மலர் பல கோடுகள் உடைய பாம்பின் படம் சுருங்குவது போன்று இதழ் குவிந்து காட்சியளிக்கும்.(கொண்டல் காற்றில் உதிர்ந்து விழும் இயல்புடையது.)
காயாம் கார்ப்பருவத்தில் மயிலின் கழுத்தைப்போல் பொலிவுடன் விளங்கும்; முதுவேனில் காலத்தில் வெப்பத்தால் வாடும்.
25. குரவம்
குரவம் வேனிற்காலத்தில் பூக்கும் ; பல பூக்களாய் மலரும்
அகலமும் ஆழமும் உள்ள சுனைகளில் குவளை மலரும்
குறிஞ்சியின் கொம்பு கரியநிறத்தில் இருக்கும்.
காட்டுமல்லிகை மிகுந்த மணம் உடையது.
கூதளங்கொடியின்தாள்குறுகியதாய்இருக்கும்.
30. கொன்றை
கொன்றைப் பூங்கொத்துகள் பொன்நிறத்தில் இருக்கும்.(எனவே, கொன்றைமரத்தின்
தழையிடையே நீண்ட பூங்கொத்துகள் தெரிவது, பெண்கள் கூந்தல் இடையிடையே பொன்
அணிகலன்களைச் சூடியதுபோல் இருக்கும்.)
‘தடவுநிலைக்கொன்றை’
கார்காலத்தில் கொன்றைப்பூக்கள் பசுமையாக விளங்கும்.
கோங்கு மலரும் பருவத்தில் இலைகள் முழுமையும் உதிர்ந்துஇருக்கும். அரும்புகள் மார்நுனிபோன்று அழகாய் மெல்லியனவாய் இருக்கும்.
சந்தனம் மணம் மிக்கது
சேம்பின் இலை யானையின் செவிபோல் பெரியதாய் இருக்கும்.
ஞாழலினது பூக்கள் வெண்சிறுகடுகைப்போன்று சிறியனவாய் இருக்கும்.
உயரப் பறக்கும் பருந்துகள் அமரும்வகையில் ஞெமை மரம் உயரமாக இருக்கும்..
தடாமரத்தின் கிளைகள் உயர்ந்து இருக்கும்.
தாமரைமலர்பலஇதழ்களைஉடையது.
தாழம்பூவின் மடலுக்கு ஈர்வாள்(இரம்பம்) போன்ற விளிம்பு இருக்கும்.
தாழையின் பூ வௌ்ளையாய் இருக்கும்
குளிர்ந்த நீர்நிலைகளில்/கரையோரங்களில், கைதை(தாழை) வளரும்.
தாளிப்புல்லின் கொடி குளிர்ச்சியாய் இருக்கும்; இதனைப் பசுக்கள் உண்ணும்.
‘கவைமுள் கள்ளிக் காய்விடு கடுநொடி’
வெண்பூதியார்: குறுந்தொகை:174:2
(நொடி – ஒலி)கள்ளிமரத்தின் காய்கள் வெயிலில் வெடிக்கும்.
‘பொரிகால் கள்ளி விரிகாய் அம்கவட்டு’
மருத்துவன் சீத்தலைச் சாத்தனார்: குறுந்தொகை: 154:5
22. காஞ்சி
‘பயறுபோல் இணர பைந்தாது படீஇயர்
(உழவர் வாங்கிய) கமழ்பூ மென் கிளைக்
காஞ்சி’
ஓரம்போகியார்: குறுந்தொகை: 10:2-4 22.
23. காந்தள் (கோடல்,தோன்றி)
‘குருதிப் பூவின இலைக் காந்தள்’
திப்புத் தோளார் : குறுந்தொகை: 1-14
காந்தள்,மலையைச் சுற்றி வேலிபோல் இயற்கையாய் வளரும்.
‘காந்தள் வேலி ஓங்குமலை’
கிள்ளி மங்கலங்கிழார்: குறுந்தொகை: 76:1
‘காந்தள் வேலி’
குறுந்தொகை: 100:3
காந்தள் மலர் மலைமுழுவதும் மணம் வீசும் அளவு நறுமணம் மிக்கது.
‘சிலம்புடன் கமழும் அலங்குலை’
ஆசிரியர் பெருங்கண்ணனார்: குறுந்தொகை:239:4
காந்தள் மலர் பல கோடுகள் உடைய பாம்பின் படம் சுருங்குவது போன்று இதழ் குவிந்து காட்சியளிக்கும்.(கொண்டல் காற்றில் உதிர்ந்து விழும் இயல்புடையது.)
‘பல்வரிப்
பாம்புபை அவிழ்ந்தது போலக் கூம்பிக்
கொண்டலின் தொலைந்த ஒண்செங் காந்தள்’
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்:குறுந்தொகை: 185:4-6
(செங்)காந்தள் ஒளி மிகுந்ததாயும் இதன் குவிந்தும் காணப்பெறும். சேவலின் கொண்டையைப் போல் இருக்கும்.
‘குவிஇணர்த் தோன்றி ஒண்பூ அன்ன
தொகுசெந் நெற்றிக் கணங்கொள்’
மதுரைக் கண்ணனார்:குறுந்தொகை: 107:1-2
24. காயாம்
‘புல்லென்காயாப் பூக்கெழுபெருஞ்சினை
மென்மயில்எருத்தில்தோன்றும்’
ஔவையார்: குறுந்தொகை: 183:5-6
(எருத்து-கழுத்து)25. குரவம்
‘பல்வீபட்டபசுநனைக் குரவம்’
மிளைகிழார் நல்வேட்டனார்: குறுந்தொகை: 341:1
26. குவளை
‘அகல்வாய்குண்டுசுனைக்
குவளை’
மோசிகீரனார்: குறுந்தொகை: 59:2-3
குவளையின்தாள்குறுகியது.
‘குவளைக்
குறுந்தாள் ’
பாண்டியன் பன்னாடுதந்தான்: குறுந்தொகை: 270:6-7
பெண்களின் அழகிய கண்கள் போன்று குவளைமலர் இருக்கும்.
‘குவளை அம்கண்’
கபிலர்: குறுந்தொகை:13:5
குவளையின் இதழ்கள் மணம் மிக்கது.
‘நாறிதழ்க்குவளை’
சிறைக்குடி ஆந்தையார்: குறுந்தொகை:62:2
குவளையின் பூவிதழ் கரியநிறமாய் இருக்கும்.
‘மாயிதழ்க்குவளை ’
பேயார்: குறுந்தொகை: 339:6
27. குறிஞ்சி
‘கருங்கோல்குறிஞ்சிப் பூ’
தேவகுலத்தார்: குறுந்தொகை:3:3
28. குளவி
‘குளவிநாறும்’
மோசிகீரனார்: குறுந்தொகை: 59:3
29.கூதாளம்கூதளங்கொடியின்தாள்குறுகியதாய்இருக்கும்.
‘குறுந்தாள் கூதள்’
பரணர்: குறுந்தொகை: 60:1
வெண் கூதாளத்துமலர்கள் உள்துளை யுடையன.
‘வெண்கூதாளத்து அம்தூம்பு புதுமலர்’
நாகம்போத்தனார்: குறுந்தொகை: 282:6
30. கொன்றை
‘பொன்செய்புனையிழைகட்டியமகளிர்
கதுப்பில்தோன்றும்புதுப் பூங்கொன்றை ’
ஓதலாந்தையார்: குறுந்தொகை: 21:2-3
கொன்றை மரத்தின் அடிமரம் பருத்து இருக்கும்.‘தடவுநிலைக்கொன்றை’
கோவத்தனார்: குறுந்தொகை: 66:1
கொன்றைப்பூ தவளையின் வாய்போன்று உள்ள,(சதங்கை யிலுள்ள) பொற்காசுபோல இருக்கும்.
‘தவளைவாயபொலஞ்செய்கிண்கிணிக்
காசினன்ன போதீன் கொன்றை ’
இளங்கீரந்தையார்: குறுந்தொகை: 148:2-3
(கிண்கிணி-சதங்கை)கார்காலத்தில் கொன்றைப்பூக்கள் பசுமையாக விளங்கும்.
‘கொன்றைஅம் பசும் வீ ’
ஔவையார்: குறுந்தொகை: 183:1
கொன்றையின் பூக்கள் பொலிவுமிகுந்து இருக்கும்.
‘கொன்றைஒள் வீ ’
பேயனார்: குறுந்தொகை:233:2
31. கோங்கு
‘இலையில்அம்சினைஇனவண்டார்ப்ப
முலையேர்மென்முகைஅவிழ்ந்த கோங்கு’
பார்காப்பார்: குறுந்தொகை: 254:1-2
32. சந்தனம்
‘நறையகில்’
பேயார்: குறுந்தொகை: 339:1
33. சேம்பு
‘சேம்பின்அலங்கல்வள்ளிலை
பெருங்களிற்றுச்செவியின்மான’
கிள்ளிமங்கலங்கிழார்: குறுந்தொகை: 76:3-4
34. ஞாழல்
‘ஐயவிஅன்னசிறுவீ ஞாழல்’
குன்றியனார்: குறுந்தொகை: 50:1
ஞாழல்பசுமையானஅரும்புகளையும்பலகொம்புகளையும்உடையது.
‘பசுநனைஞாழல் பல்சினை’
வடமவண்ணக்கனார்: குறுந்தொகை: 81:2
ஞாழலின் பூக்கள் சிறியனவாய் இருக்கும்.
‘சிறுவீ’ ஞாழல் ’
பரணர்:குறுந்தொகை:328:1
ஞாழல் பூக்கள் நறுமணம்மிக்கதாய் இருக்கும்
‘நறுவீ ஞாழல் ’
அம்மூவனார்: குறுந்தொகை: 318:2
அரும்புகள்முதிர்ந்தஞாழலின் முட்டைபோன்றுதிரண்டுஇருக்கும்.
‘நனைமுதிர் ஞாழல் சினைமருள் திரள்வீ ’
அம்மூவனார்: குறுந்தொகை: 397:1
35. ஞெமைஉயரப் பறக்கும் பருந்துகள் அமரும்வகையில் ஞெமை மரம் உயரமாக இருக்கும்..
‘ஞெமைத்தலை
ஊனசைஇ ஒருபருந்து இருக்கும் ’
தேவனார்: குறுந்தொகை: 285:6
36. தடாமரம்தடாமரத்தின் கிளைகள் உயர்ந்து இருக்கும்.
‘தடவின்ஓங்கு சினை’
மதுரைமருதனிளநாகனார்: குறுந்தொகை 160:3
37. தாமரை
‘பல்லிதழ்’
நரிவெரூஉத்தலையார்:குறுந்தொகை:5:5
ஆழமான நீர்நிலையில் தோன்றும் தாமரைமலரின் தாது சிறப்பானது
‘குண்டுநீர்த்தாமரைக்கொங்கு’
சிறைக்குடிஆந்தையார்: குறுந்தொகை: 300:3
38. தாழம்பூ
‘வாள்போல் வாயகொடுமடல் தாழை’
மாலைமாறனார்: குறுந்தொகை: 245:3
39. தாழை(கைதை)
‘வௌ்வீத் தாழை’
அம்மூவனார்: குறுந்தொகை: 163:4
(வீ- பூ)
‘தாழைவெண் பூ
மதுரை எழுத்தாளனார் சேந்தம் பூதனார்: குறுந்தொகை:226:5
தாழையின் இலை முள்ளுடையது.
‘ முள்ளிலைத்
தடவுநிலைத் தாழை’
வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்: குறுந்தொகை: 219 :5-6
தாழைக்கு விழுதுகள் உண்டு; தாழையின் அரும்பு மடல் அவிழ்ந்து விரிந்து
மலருவது, அன்னம் தன் சிறகைக் கோதுமிடத்து விரிகின்ற இறகுகள்போல இருக்கும்.
‘வீழ்தாழ் தாழை ஊழுறு கொழுமுகை
குருகுஉளர் இறகின் விரிபுதோடு அவிழும் ’
செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்: குறுந்தொகை: 228:1-2
(வீழ்-விழுது; ஊழுறு-மலர்கள்விரிகின்ற; குருகு-அன்னம்; உளர்தல்-அலகாலேசிறகினைக்கோதுதல்)குளிர்ந்த நீர்நிலைகளில்/கரையோரங்களில், கைதை(தாழை) வளரும்.
‘கடைகரைத்தாழை ’
அம்மூவனார்: குறுந்தொகை: 303:2
‘கைதைஅம் தண்புனல்’
கணக்காயர்தத்தனார்: குறுந்தொகை: 304:7
‘தாழைதைஇயதயங்குதிரைக்கொடுங் கழி’
அண்டர்மகன்குறுவழி : குறுந்தொகை : 345:5
40. தாளியறுகுதாளிப்புல்லின் கொடி குளிர்ச்சியாய் இருக்கும்; இதனைப் பசுக்கள் உண்ணும்.
‘தாளித் தண்பவர் நாள் ஆமேயும்’
காவன்முல்லைப்பூதனார்: குறுந்தொகை :104:3
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக