திண்டுக்கல் மாவட்டம்,
வத்தலக்குண்டு நகரில் ‘கல்லும் வெல்லும்’ என்ற இலக்கிய மாத இதழ் தனியார்
திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. முதல் படியைக் கவிஞர் கி.சாந்தகுமார்
வெளியிட்டார்; தொழில் அதிபர் மை.வீரர் அப்துல்லா பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் பேசிய கவிஞர் கி.சாந்தகுமர்
மக்கள்நாயகத்தின் நான்காவது தூண்களில் ஒன்று இதழ்த்துறை. இதழ்த் துறையில்
நாளிதழ், இலக்கியம், குற்றம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தமிழ்
வளர்ச்சிக்குச் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நமது பரம்பரை,.
பண்பாடு, கலை, இலக்கியம் போன்றவற்றில் ஒன்றான கல்வெட்டு தொடர்பான நூல்கள்
வெளிவருவதில்லை. அப்படியே வந்தாலும் தொடர;ந்து நீடித்து நிலைப்பதில்லை.
இதனால் நம்முடைய பரம்பரை என்னவென்பது எதிர்கால வழிமுறையினர் அறிய
வாய்ப்பில்லை. இந்தப்பணியைக் ‘கல்லும் வெல்லும் இலக்கிய இதழ் பூர்த்தி
செய்யும் அதே வேளையில் இவ்வகையிலான இதழ்களுக்கு மாநில அரசும் நடுவண் அரசும்
ஊக்கத்தொகை வழங்கவேண்டும் எனப் பேசினார்.
இவ்விழாவில் வைகை அனிசு, மயில்வண்ணன்,
தாரகை தாசன், கவிவாணன், திட்டச்சேரி சபியுதீன், கவிஞர் மயூரா அகிலன், அன்பு
மறுதோன்றி அச்சக உரிமையாளர் வெங்கடேசன் முதலானோர் கலந்து கொண்டனர்.
-
- வைகை அனிசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக